நேற்று நாக்பூரில் நடந்த மேட்சில் நம் அணி அசிங்கமாக தோல்வியைச் சந்தித்ததைப் பற்றி விவரமாகக் கூறி உங்களை மேலும் நொந்து போகவைப்பதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், மிக அற்புதமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு மேட்சை, சேவாக், சச்சின், கம்பீர் ஆகியோர் கஷ்டப்பட்டு சேர்த்த ரன்களை கொஞ்சமும் யோசிக்காமல் வீணடித்த நம் அணியின் சில வீரர்களைப் (?) பற்றி என்னுடைய கருத்துக்களை உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சேவக் அதிரடியாக ஆரம்பித்து வைத்ததை, சச்சின் அதே வேகத்தில் நிலை நிறுத்தினார். கம்பீர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 40 வது ஓவரில் 260 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற அருமையான நிலையிலிருந்து பிறகு வந்த சோம்பேறிகளான பதான், விராத் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் விளையாடி அடுத்தடுத்து அவுட்டாகி, 48.4 ஓவர்களின் முடிவில் 296 ரன்களுக்கு நம் அணி மொத்தமாக ஆட்டம் இழந்த கொடுமையை நாம் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தோம்.
இதைவிட கேனத்தனமாக விளையாட வேறு யாராலும் முடியாது. சரி, நம்முடைய பேட்டிங் ஆர்டர் சொதப்பிவிட்டது அடுத்ததாக பெளலிங்கில் சமன் செய்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மறுபடியும் டி.வி முன் உட்கார்ந்தால் நம்முடைய கேவலமான பீல்டிங்கும், பௌலிங்கும் நம் அணியின் வெற்றியைக் குழிதோண்டி புதைத்து விட்டன.
கடைசி ஓவரில் தோனி ஆஷிஷ் நெஹ்ராவை பௌலிங் செய்ய சொன்னதன் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. பீல்டிங்கில் கம்பீர் முதல் அத்தனை பேரும் சொதப்பினார்கள்.
நாம் ஏற்கனவே உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் தோனி சற்று தெனாவட்டாக இருந்ததால் இந்தத் தோல்வி என்றுதான் நினைக்கிறேன்.
இதில் சச்சின் செய்த சாதனைகள் மட்டுமே ஒரு ஆறுதல்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருபவர் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். உலக கோப்பை அரங்கிலும் சச்சின், பல சாதனைகள் ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே, 5 உலக கோப்பை சதம் அடித்து, அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று, 6வது சதம் அடித்து அசத்தினார்.
இந்த வரிசையில் "டாப்-5' வீரர்கள் விபரம்:
பெயர்/அணி போட்டி சதம்
1.சச்சின் (இந்தியா) 41 6
2. கங்குலி (இந்தியா) 21 4
3. மார்க் வாக் (ஆஸி.,) 22 4
4. குரங்கு பாண்டிங் (ஆஸி.,) 42 4
5. டிவிலியர்ஸ் (தெ.ஆப்.,) 14 3உலக கோப்பை அரங்கில் சச்சின் அடித்த 6 சதங்களின் விபரம்:
ஆண்டு சதம் எதிரணி
1996 127* கென்யா
1996 137 இலங்கை
1999 140* கென்யா
2003 152 நமீபியா
2011 120 இங்கிலாந்து
2011 111 தென் ஆப்ரிக்கா
ஒருநாள் போட்டிகளில் (48), டெஸ்ட் போட்டிகளில் (51) என இதுவரை சச்சின் மொத்தம் 99 சதம் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் அடித்து மற்றொரு புதிய சாதனை படைக்கலாம். இது இந்த உலக கோப்பை தொடரில் நடக்க கடவுளை வேண்டுவோம்.
இதில் ஒரு சில பன்னாடைகள் சச்சின் செஞ்சுரி அடித்தால் நம் அணி தோற்றுவிடும் என்று சொல்லித் திரிகிறார்கள். அவர்களை (மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல) பசித்த புலி தின்னட்டும்.
Comments
127 Runs 138 Balls Vs Kenya 1996
137 Runs 137 Balls Vs Srilanka 1996
140 Runs 101 Balls Vs Kenya 1999
152 Runs 151 Ballsa Vs Namibia 2003
120 Runs 115 Balls Vs England 2011
click here for More Records on Sachin Tendulkar
http://cricketlivetoday.com/uncategorized/cricket/sachin-world-cup-centuries-records.html