Skip to main content

தோல்வியில் முடிந்த நேற்றைய மேட்ச் - ஒரு ஆத்திர அலசல்



 நேற்று நாக்பூரில் நடந்த மேட்சில் நம் அணி அசிங்கமாக தோல்வியைச் சந்தித்ததைப் பற்றி விவரமாகக் கூறி உங்களை மேலும் நொந்து போகவைப்பதில் எனக்கு விருப்பமில்லை என்றாலும், மிக அற்புதமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு மேட்சை, சேவாக், சச்சின், கம்பீர் ஆகியோர் கஷ்டப்பட்டு சேர்த்த ரன்களை கொஞ்சமும் யோசிக்காமல் வீணடித்த நம் அணியின் சில வீரர்களைப் (?) பற்றி என்னுடைய கருத்துக்களை உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சேவக் அதிரடியாக ஆரம்பித்து வைத்ததை, சச்சின் அதே வேகத்தில் நிலை நிறுத்தினார். கம்பீர் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். 40 வது ஓவரில் 260 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற அருமையான நிலையிலிருந்து பிறகு வந்த சோம்பேறிகளான பதான், விராத் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் விளையாடி அடுத்தடுத்து அவுட்டாகி, 48.4 ஓவர்களின் முடிவில் 296 ரன்களுக்கு நம் அணி மொத்தமாக ஆட்டம் இழந்த கொடுமையை நாம் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தோம். 

இதைவிட கேனத்தனமாக விளையாட வேறு யாராலும் முடியாது. சரி, நம்முடைய பேட்டிங் ஆர்டர் சொதப்பிவிட்டது அடுத்ததாக பெளலிங்கில் சமன் செய்துவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மறுபடியும் டி.வி முன் உட்கார்ந்தால் நம்முடைய கேவலமான பீல்டிங்கும், பௌலிங்கும் நம் அணியின் வெற்றியைக்   குழிதோண்டி புதைத்து விட்டன.  

கடைசி ஓவரில் தோனி ஆஷிஷ் நெஹ்ராவை பௌலிங் செய்ய சொன்னதன் அர்த்தம் என்ன என்று தெரியவில்லை. பீல்டிங்கில் கம்பீர் முதல் அத்தனை பேரும் சொதப்பினார்கள்.

நாம் ஏற்கனவே உலகக் கோப்பை காலிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுவிட்டோம் என்ற எண்ணத்தில் தோனி சற்று தெனாவட்டாக இருந்ததால் இந்தத் தோல்வி என்றுதான் நினைக்கிறேன். 

இதில் சச்சின் செய்த சாதனைகள் மட்டுமே ஒரு ஆறுதல். 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருபவர் இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின். உலக கோப்பை அரங்கிலும் சச்சின், பல சாதனைகள் ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே, 5 உலக கோப்பை சதம் அடித்து, அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று, 6வது சதம் அடித்து அசத்தினார்.

இந்த வரிசையில் "டாப்-5' வீரர்கள் விபரம்:
பெயர்/அணி போட்டி சதம்
1.சச்சின் (இந்தியா) 41 6
2. கங்குலி (இந்தியா) 21 4
3. மார்க் வாக் (ஆஸி.,) 22 4

4. குரங்கு பாண்டிங் (ஆஸி.,) 42 4
5. டிவிலியர்ஸ் (தெ.ஆப்.,) 14 3

உலக கோப்பை அரங்கில் சச்சின் அடித்த 6 சதங்களின் விபரம்:
ஆண்டு           சதம்                          எதிரணி
1996                    127*                        கென்யா
1996                    137                         
லங்கை
1999                    140*                         கென்யா
2003                    152                            நமீபியா
2011                    120                         இங்கிலாந்து
2011                    111                    தென் ஆப்ரிக்கா

ஒருநாள் போட்டிகளில் (48), டெஸ்ட் போட்டிகளில்  (51) என இதுவரை சச்சின் மொத்தம் 99 சதம் அடித்துள்ளார். இன்னும் ஒரு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் அடித்து மற்றொரு புதிய சாதனை படைக்கலாம். இது இந்த உலக கோப்பை தொடரில் நடக்க கடவுளை வேண்டுவோம்.

இதில் ஒரு சில பன்னாடைகள் சச்சின் செஞ்சுரி அடித்தால் நம் அணி தோற்றுவிடும் என்று சொல்லித் திரிகிறார்கள். அவர்களை (மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதா சொன்னது போல) பசித்த புலி தின்னட்டும்.

Comments

2003, nameebiyaa, is that correct pls
Sachin Tendulkar World Cup Centuries List

127 Runs 138 Balls Vs Kenya 1996
137 Runs 137 Balls Vs Srilanka 1996
140 Runs 101 Balls Vs Kenya 1999
152 Runs 151 Ballsa Vs Namibia 2003
120 Runs 115 Balls Vs England 2011
click here for More Records on Sachin Tendulkar

http://cricketlivetoday.com/uncategorized/cricket/sachin-world-cup-centuries-records.html

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்