தி ஃ பைட்டர் (The Fighter) - திரைப்பட விமர்சனம்
பாக்சிங் எனப்படும் குத்துச் சண்டை போட்டிகளை மையமாக வைத்து ரேஜிங் புல் (Raging Bull ), ராக்கி (Rocky ), தி மில்லியன் டாலர் பேபி (The Million Dollar Baby ), அலி (Ali ) போல நிறைய படங்கள் வந்து விட்டன. இதில் அலி போன்ற படங்கள் "பயோ-பிக்" (Bio - pic ) என்ற வகையைச் சார்ந்தவை. அதாவது ஒரு பிரபலத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை. அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள படம் தி ஃ பைட்டர் (The Fighter).
குத்துச் சண்டை போட்டிகளில் ஹெவி வெயிட், லைட் ஹெவி வெயிட், மிடில் வெயிட், வெல்டர் வெயிட் (Welter weight ) என்று பல வகைகள் உண்டு. இந்தப் போட்டிகளில் பங்குபெறும் போட்டியாளர்களின் உடல் கனம் (வெயிட்) அந்தந்த போட்டிகளுக்கு ஏற்றவாறு மாறும்.
ராக்கி, அலி போன்ற படங்கள் ஹெவி வெயிட் போட்டியாளர்களைப் பற்றிய படங்கள், தி ஃ பைட்டர் வெல்டர் வெயிட் போட்டியாளரை முன் வைத்து எடுத்த படம். வசூலில் மட்டுமல்லாது, சிறந்த திரைப்படம் என பல்வேறு குத்துச் சண்டை வல்லுனர்களும் பாராட்டிய படம் இது. கொஞ்சம் தாமதமாக இங்கு வந்திருக்கிறது.
இதில் மார்க் வால்பர்க்கின் அண்ணனாக, முன்னாள் வீரனாக, இந்நாள் போதை மருந்துக்கு அடிமையாக நடித்துள்ள கிறிஸ்டியன் பேல் மற்றும் இந்த இருவரின் தாயாராக நடித்துள்ள மெலிஸ்ஸா லியோ ஆகிய இருவருக்கும் ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.
கதாநாயகன் மிக்கி வார்ட் (மார்க் வால்பர்க்) ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தவன். அவனுடைய அண்ணன் டிக்கி எக்லன்ட் (கிறிஸ்டியன் பேல்) ஒரு முன்னாள் வெல்டர் வெயிட் சாம்பியன். ஆனால் இப்போது போதை மருந்துக்கு அடிமையானவன். என்னதான் திறமையானவன் என்றாலும் அவனுடைய பயிற்சியளிப்பு அவ்வளவாக சரியில்லாத காரணத்தினால் மிக்கி பங்குபெறும் எல்லா போட்டிகளிலும் தோல்வி அடைகிறான். டிக்கியை விடுத்தது அவன் வேறு யாரிடமும் பயிற்சி பெறக்கூடாது என அவன் தாய் பிடிவாதமாக இருக்கிறாள்.
தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கும் மிக்கி நொந்து போகிறான். அப்போது அவனுடைய முன்னாள் கல்லூரித் தோழி சார்லீன் (ஆமி ஆடம்ஸ் ) அவனுக்கு ஆதரவாக இருக்கிறாள். மிக்கி அந்தக் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்து ஒரு தேர்ந்த பயிற்சியாளரிடம் பயிற்சி பெற வேண்டும் என சொல்கிறாள். மிக்கிக்கும் அது சரி என்றே படுகிறது. ஆனால், அவனுடைய தாய் மற்றும் சகோதரிகள் அதை வன்மையாக எதிர்க்கிறார்கள். மிக்கி அவனுடைய சகோதரன் டிக்கியிடம் மட்டுமே பயில வேண்டும் என்கிறார்கள்.
இந்த சந்தர்பத்தில் மிக்கியின் தந்தை அவனுக்கு உதவ முன் வருகிறார். டிக்கி மற்றும் மிக்கியின் தாய் ஒருவரே என்றாலும் இருவருக்கும் வெவ்வேறு தந்தைகள். எனவே மாற்றான் தந்தைக்கு பிறந்த டிக்கி, மிக்கிக்கு சரியான முறையில் பயிற்சி அளிக்க முடியாது என்று மிக்கியின் தந்தையும் நம்புகிறார்.
குடும்பத்தின் பிடியிலிருந்து வெளியேறி வெற்றி மேல் வெற்றி பெரும் மிக்கி தன்னுடைய குடும்பத்தையோ, சகோதரனையோ வெறுப்பதில்லை. மாறாக தன்னுடைய சகோதரன் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டுமென விரும்புகிறான்.
குடும்பத்தின் பிடியிலிருந்து வெளியேறி வெற்றி மேல் வெற்றி பெரும் மிக்கி தன்னுடைய குடும்பத்தையோ, சகோதரனையோ வெறுப்பதில்லை. மாறாக தன்னுடைய சகோதரன் போதை பழக்கத்தில் இருந்து வெளிவர வேண்டுமென விரும்புகிறான்.
ஒரு உண்மையான சம்பவத்தை பின்னணியில் வைத்து மிகவும் அருமையான முறையில் எடுக்கப்பட்டுள்ள படம்.
- 25 மில்லியன் அமெரிக்க டாலர்களில் மார்க் வால்பர்க் தயாரித்து நடித்துள்ள இந்தப் படம் ஏற்கனவே 300 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்துவிட்டது.
- பேட் மேன் படங்களில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்ற கிறிஸ்டியன் பேல் ஒரு சாதாரணமான இரண்டாவது ஹீரோ பாத்திரத்தில், குறைந்த சம்பளத்தில் நடித்துள்ளார்.
- போதைப் பழக்கத்துக்கு அடிமையாக நடிக்க பல நாட்கள் சரியாக சாப்பிடாமல், உடலை மெலிய வைத்து வெற்றிகரமாக நடித்த பேலுக்கு கிடைத்த விருது உண்மையிலேயே சரியான மரியாதை.
- படத்துக்கு ஒரு பழைய லுக் வரவேண்டுமென 1990 களில் உபயோகப்படுத்திய கேமராக்களை வைத்து படமாக்கியுள்ளனர்.
- கிறிஸ்டியன் பேல் மற்றும் மார்க் வால்பர்க் இருவரும் இதற்கு முன் சேர்ந்து நடித்ததில்லை என்றாலும் இந்தப் பாத்திரத்திற்கு பேல் மிகப் பொருத்தமாக இருப்பார் என மார்க் நம்பியதால் பேல் ஒப்புக்கொண்டார்.
Comments
Thanks Sridhar