பிப்ரவரி 2008 ம் ஆண்டில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.49.61 அப்போதைய கச்சா (crude) விலை ஒரு பேரலுக்கு $92 (அமெரிக்க டாலர்கள்). உலகச் சந்தையில் நேற்றைய கச்சா ஒரு பேரலுக்கு $93. ஆனால் நேற்றைய பெட்ரோல் விலை சென்னையில் ரூ.63.36!!!
ஏன் இப்படி என்றால், 2008 ம் ஆண்டில் பெட்ரோல் விலை நம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அது பெட்ரோலிய நிறுவனங்கள் வசம் உள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல் விலைகளை ஏற்றவும், இறக்கவும் (?) முழு அனுமதியை பெட்ரோலிய நிறுவனங்களிடம் தாரை வார்த்துவிட்டது. எப்போதெல்லாம் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விலை ஏறுகிறதோ, அப்போதெல்லாம் இங்கே பெட்ரோலின் விலையை ஏற்ற அந்த நிறுவனங்களுக்கு முழு அதிகாரமும் தந்தது.
கடந்த ஆறு மாதங்களில் ஆறு முறை பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது என்பது என் வீட்டு நாய்க்குக்கூட தெரியும். முன்பு பெட்ரோல் விலை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது APM (Administered Pricing Mechanism) என்று ஒரு வரைமுறை இருந்தது. இதன்படி பெட்ரோல் விலையை ஏற்றியும் (பெரும்பாலான சமயம்), இறக்கியும் (ஒரு சில சமயம்) வந்தது.
பெட்ரோலிய நிறுவனங்கள் இந்த நடைமுறையை எதிர்த்ததால், மத்திய அரசு, உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை ஒட்டி, பெட்ரோல் விலையை நிர்ணயிக்கலாம் என்று அறிவித்துவிட்டது. இதில் பலியானோர் நம்மைப் போன்ற கோடிக்கணக்கான பொதுமக்கள்தான்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் ஒரு பேரல் விலை $75 க்கு மேலே சென்றால் மத்திய அரசு தலையிட்டு பெட்ரோலிய விலையை சமன் செய்யும் என்று முன்பு கூறி வந்தது. இப்போது அதன் விலை $100 ஐத் தொடப் போகிறது என்று உலகமெங்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. நம் அரசு ஊழல் செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்யாமல் இருக்கிற பட்சத்தில் நாமெல்லாம் பெருத்த அவதிக்குள்ளாகப் போகிறோம். இதைவிடவா என்று கேட்டால், ஆமாம் இதை விட இன்னும் மோசமாகத்தான் போகிறது நிலைமை.
Comments
அவர்கள் எங்களுக்கு விலை கட்டுபடி ஆகவில்லை என்று என்றைக்கு கடையை சாத்தினார்களோ அன்றே அரசியல்வாதிகளிடம் இது போல விலை நிர்ணயிக்கும் பேரத்தை ஆரம்பித்து இப்போது வெற்றியும் அடைந்துவிட்டார்கள். இதுவும் ஒருவிதமான பிளாக் மெயில்தான். இப்போது விலை நிர்ணயம் செய்வதெல்லாம் அவர்கள் தான். அரசு எண்ணெய் பொதுதுறையை குறைச் சொல்ல இதில் எதுவும் இல்லை. நமது மானம் கெட்ட இந்தியர்கள் அந்த தனியார் எண்ணெய் கடைகளை மொத்தமாக பகிஷ்கரிப்பு செய்தால்தான் அவர்களுக்கும் இந்த பரதேசி அரசியல்வாதிகளுக்கும் அறிவு வரும். நமக்கு ஏது சூடும் சொரணையும்?