1. சிறந்த பொழுதுபோக்கு படம் :
நிச்சயமாக களவாணி படம்தான். அறிமுக இயக்குனர் சற்குணம் ஒரு நல்ல திரைக்கதையுடன், பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் தைரியமாக இயக்கி வெளியிட்டு வெற்றிபெற்ற ஒரு நல்ல பொழுதுபோக்கு படம்.
2. சிறந்த எதிர்பாராத படம்:
மைனா. என்னதான் இயக்குனர் பிரபு சாலமன் ஒரு நன்கு அறிந்த இயக்குனர் என்றாலும் இவர் இதற்கு முன் இயக்கிய படங்கள் எல்லாம் பெரியஅளவில் பேசப்பட்டவை அல்ல. "இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ் படங்களின் எதிர்காலம் நல்ல இயக்குனர்களின் கையில் இருக்கிறது என்று நிம்மதியாக நான் இன்று தூங்குவேன், " என்று உலகநாயகன் கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டிய ஒரு நல்ல முயற்சி. சிறந்த ஒளிப்பதிவு, நல்ல பாடல்கள், லாஜிக்கை மீறாத திரைக்கதை என்று இலக்கணம் மாறாமல் வந்து இப்போது வசூலிலும் சாதித்துக்கொண்டிருக்கும் ஒரு நல்ல படம்.
3. சிறந்த சரித்திர படம்
மதராச பட்டினம். சரித்திர படம் என்றாலே அட்டைக் கத்தி, வெத்துக் கிரீடம், பக்க பக்கமாக வசனம் என்ற இலக்கணத்தை உடைத்து 1940 களில் இருந்த சென்னையை நம் கண்முன் கொண்டுவந்த இயக்குனர் விஜய்க்கு ஒரு சபாஷ். இப்படி ஒரு சென்னையை நாமும் பார்க்க மாட்டோமா என்று ஏங்க வைத்த படம். கதை என்னமோ Titanic படத்தின் உல்டாதான் என்றாலும் ரசிக்கவைத்த படம். மருதநாயகம் படத்தின் ட்ரைலரைப் பார்த்துதான் இந்த படம் இயக்கும் எண்ணம் வந்தது என்று ஒருமுறை இதன் இயக்குனர் விஜய் சொன்னார். எப்படியெல்லாம் இயக்கக்கூடாது என்று அதைப் பார்த்து தெரிந்துகொண்டு சிறப்பாக இயக்கி வெற்றியும் பெற்றுவிட்டார்.
4. சிறந்த ரசிகர் விருப்ப படம்:
எந்திரன். ரஜினிதான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை என் போன்ற தீவிர கமல் ரசிகர்களும் ஒப்புக்கொள்ள வைத்த ஒரு விறுவிறுப்பான படம். இதைப் போன்ற மெகா பட்ஜெட் படங்களை இயக்க தகுதியான ஒரே இயக்குனர் ஷங்கர்தான் என்று மறுபடியும் நிரூபித்த படம். மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி வெளிவந்த கடைசி படம். இந்த மாபெரும் அறிவுஜீவியை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
கமல் இதில் நடிக்க வந்த அருமையான வாய்ப்பை விட்டுவிட்டு, சமீபத்தில் ஆனந்த விகடன் கேள்வி பதில் பகுதியில், ஒரு வாசகர் "எந்திரன் படத்தில் நாம் நடிக்கவில்லையே என்று எப்போதாவது நினைத்தீர்களா?" என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, " நினைத்திருந்தால் நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்," என்று கமல் கூறிய பதிலில் அவருடைய ஆற்றாமை (frustration) தெரிகிறது.
இதனால்தானோ என்னவோ சமீபத்தில் ஒரு பேட்டியில், "எந்திரன் வெற்றிக்குக் காரணம் அதன் கதையோ, இயக்குனரோ இல்லை, சன் டி.வியின் மார்கெட்டிங் திறமைதான்" என்று கமல் சொல்லக் காரணங்கள் இரண்டு; 1) வெளிப்படையாக ரஜினிதான் வெற்றிக்கு காரணம் என்று ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை என்றுமே கமலுக்கு இருந்ததில்லை, 2) சன் டி.வியைப் புகழ்ந்தால் அதன் மூலம் கலைஞர், ஸ்டாலின், அவர் மகன் உதயநிதி, சன் டி.வி. நிறுவனர் கலாநிதி மாறன் என்று பலருக்கும் ஜால்ரா போட்ட மாதிரியும் ஆயிற்று. நாளைக்கே இவருடைய நின்று (படுத்துப் போன?) போன மர்மயோகி அல்லது மருதநாயகம் படத்துக்கு பொருளுதவி வேண்டும் என்றால் ஷங்கரோ, ரஜினியோ உதவப்போவதில்லை, மாறாக கலாநிதிமாறன் மனது வைத்தால் முடியுமே. நமக்கு என்னப்பா பெரிய இடத்து வம்பு?
5. சிறந்த காமெடி படம்:
இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். சிம்புதேவன் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை மறுபடியம் நிரூபித்த படம். இதுவரை யாருமே கைவைக்கத் துணியாத Western Cowboy genre படத்தை நகைச்சுவையோடு கொடுத்த ஒரு கலகலப்பான படம். ராகவேந்திர லாரன்ஸ் இதற்கு நல்ல தேர்வு என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
6. சிறந்த மொக்கைப் படம்:
தமிழ்படம். சிவா போன்ற deadpan முகமுள்ள நடிகரை வைத்துக் கொண்டு பெரும்பாலான மாஸ் ஹீரோக்களை spoof செய்து அதில் வெற்றியும் பெற்ற படம். நிச்சயமாக இந்த படத்தின் இயக்குனர் இரண்டாவது படத்தையும் இதே போல எடுத்தால் ஊற்றிக்கொள்ளும். இந்த ஒரு படம் வெற்றி பெற்றவுடன் சிவா இதே போல இருக்கும் படங்களாக ஒப்புக்கொள்ள, அடுத்து வந்த வ.க்வாட்டர் கட்டிங் ஊற்றி மூடியது நாடறிந்த செய்தி. ரேடியோ மிர்ச்சியின் டீ.ஜேயாக இருப்பதே சிவாவுக்கும் நமக்கும் நல்லது.
7. சிறந்த மசாலா படங்கள்:
சிங்கம், பையா மற்றும் நான் மகான் அல்ல. விறுவிறுப்பான திரைக்கதை, நல்ல ஒளிப்பதிவு, ஹிட் பாடல்கள், சூர்யா மற்றும் கார்த்தியின் கமிட்மென்ட்.
8. சிறந்த வெத்துப் படம்:
ராவணன். மணிரத்னம் இயக்கினாலும், விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்தாலும் ஒரு படம் நல்ல திரைக்கதை இல்லை என்றால் ஊற்றி மூடிவிடும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் படம். இதற்கு வந்த மணிரத்னம் படங்களில் எல்லாம் சுஜாதா வசனம் எழுதியிருந்தார். மணிரத்னம் பாலகுமாரன் அல்லது அட்லீஸ்ட் பட்டுக்கோட்டை பிரபாகரையாவது எழுதச் சொல்லியிருக்கலாம். சுகாசினி எழுதி கேவலமான முறையில் தோற்ற படம்.
9. சிறந்த இசைப் படம் (musical) :
விண்ணைத் தாண்டி வருவாயா. நடிக்கவே தெரியாத சிம்பன்சி, ஓ...ஐயம் ஸாரி, சிம்புவை நடிக்க வைத்த படம். அட்டகாசமான பாடல்கள், மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகியவை, சுமாரான திரைக்கதையுடன் வந்த இந்தப் படத்தின் பெரிய பலம்.
10. சிறந்த யதார்த்த படம்:
அங்காடிதெரு. வசந்தபாலன் ஒரு சென்சிடிவ் இயக்குனர் என்பதை மறுபடியும் சுட்டிக்காட்டிய வெற்றிப் படம். யதார்த்தத்தை மீறாத கதை அமைப்பு, சிறந்த திரைக்கதை, அலட்டிக் கொள்ளாத புதுமுகங்கள், சீரான இயக்கம். நல்ல படம் என்பதற்கு ஒரு உதாரணம்.

Comments
Similarly the climax of MMA will not be accepted by common people. "Love" is not so cheap. As if they are chaging shirts the main characters change their love. This will be the reason for the failure of MMA.
தற்போதைய காதல் பெரும்பாலும் "one night stand" அல்லது "living together" என்ற சமாச்சாரங்களோடு முடிந்துவிடுகிறது. எனவே எவ்வளவோ இடங்களில் மன்மதன் அம்பு போன்ற சீப்பான காதல் ஜோடிகளைப் பார்க்கலாம்.