Skip to main content

2010 ம் ஆண்டின் சிறந்த தமிழ் படங்களுக்கான அவார்ட்ஸ் - என் பார்வையில்

1. சிறந்த பொழுதுபோக்கு படம் :

நிச்சயமாக களவாணி படம்தான். அறிமுக இயக்குனர் சற்குணம் ஒரு நல்ல திரைக்கதையுடன், பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் தைரியமாக இயக்கி வெளியிட்டு வெற்றிபெற்ற ஒரு நல்ல பொழுதுபோக்கு படம்.

2. சிறந்த எதிர்பாராத படம்:

மைனா. என்னதான் இயக்குனர் பிரபு சாலமன் ஒரு நன்கு அறிந்த இயக்குனர் என்றாலும் இவர் இதற்கு முன் இயக்கிய படங்கள் எல்லாம் பெரியஅளவில் பேசப்பட்டவை அல்ல. "இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ் படங்களின் எதிர்காலம் நல்ல இயக்குனர்களின் கையில் இருக்கிறது என்று நிம்மதியாக நான் இன்று தூங்குவேன், " என்று உலகநாயகன் கமல்ஹாசன் மனம் திறந்து பாராட்டிய ஒரு நல்ல முயற்சி. சிறந்த ஒளிப்பதிவு, நல்ல பாடல்கள், லாஜிக்கை மீறாத திரைக்கதை என்று இலக்கணம் மாறாமல் வந்து இப்போது வசூலிலும் சாதித்துக்கொண்டிருக்கும் ஒரு நல்ல படம்.

3. சிறந்த சரித்திர படம்

மதராச பட்டினம். சரித்திர படம் என்றாலே அட்டைக் கத்தி, வெத்துக் கிரீடம், பக்க பக்கமாக வசனம் என்ற இலக்கணத்தை உடைத்து 1940 களில் இருந்த சென்னையை நம் கண்முன் கொண்டுவந்த இயக்குனர் விஜய்க்கு ஒரு சபாஷ். இப்படி ஒரு சென்னையை நாமும் பார்க்க மாட்டோமா என்று ஏங்க வைத்த படம். கதை என்னமோ Titanic படத்தின் உல்டாதான் என்றாலும் ரசிக்கவைத்த படம். மருதநாயகம் படத்தின் ட்ரைலரைப் பார்த்துதான் இந்த படம் இயக்கும் எண்ணம் வந்தது என்று ஒருமுறை இதன் இயக்குனர் விஜய் சொன்னார். எப்படியெல்லாம் இயக்கக்கூடாது என்று அதைப் பார்த்து தெரிந்துகொண்டு சிறப்பாக இயக்கி வெற்றியும் பெற்றுவிட்டார்.

4. சிறந்த ரசிகர் விருப்ப படம்:


எந்திரன். ரஜினிதான் உண்மையான சூப்பர் ஸ்டார் என்பதை என் போன்ற தீவிர கமல் ரசிகர்களும் ஒப்புக்கொள்ள வைத்த ஒரு விறுவிறுப்பான படம். இதைப் போன்ற மெகா பட்ஜெட் படங்களை இயக்க தகுதியான ஒரே இயக்குனர் ஷங்கர்தான் என்று மறுபடியும் நிரூபித்த படம். மறைந்த மாபெரும் எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி வெளிவந்த கடைசி படம். இந்த மாபெரும் அறிவுஜீவியை தமிழ் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

கமல் இதில் நடிக்க வந்த அருமையான வாய்ப்பை விட்டுவிட்டு, சமீபத்தில் ஆனந்த விகடன் கேள்வி பதில் பகுதியில், ஒரு வாசகர் "எந்திரன் படத்தில் நாம் நடிக்கவில்லையே என்று எப்போதாவது நினைத்தீர்களா?" என்று ஒரு ரசிகர் கேட்டதற்கு, " நினைத்திருந்தால் நடிக்கும் வாய்ப்பு இருந்தது. நடிக்கவில்லை விடுங்கள்," என்று கமல் கூறிய பதிலில் அவருடைய ஆற்றாமை (frustration) தெரிகிறது.

இதனால்தானோ என்னவோ சமீபத்தில் ஒரு பேட்டியில், "எந்திரன் வெற்றிக்குக் காரணம் அதன் கதையோ, இயக்குனரோ இல்லை, சன் டி.வியின் மார்கெட்டிங் திறமைதான்" என்று கமல் சொல்லக் காரணங்கள் இரண்டு; 1) வெளிப்படையாக ரஜினிதான் வெற்றிக்கு காரணம் என்று ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை என்றுமே கமலுக்கு இருந்ததில்லை, 2) சன் டி.வியைப் புகழ்ந்தால் அதன் மூலம் கலைஞர், ஸ்டாலின், அவர் மகன் உதயநிதி, சன் டி.வி. நிறுவனர் கலாநிதி மாறன் என்று பலருக்கும் ஜால்ரா போட்ட மாதிரியும் ஆயிற்று. நாளைக்கே இவருடைய நின்று (படுத்துப் போன?) போன மர்மயோகி அல்லது மருதநாயகம் படத்துக்கு பொருளுதவி வேண்டும் என்றால் ஷங்கரோ, ரஜினியோ உதவப்போவதில்லை, மாறாக கலாநிதிமாறன் மனது வைத்தால் முடியுமே. நமக்கு என்னப்பா பெரிய இடத்து வம்பு?

5. சிறந்த காமெடி படம்:

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம். சிம்புதேவன் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை மறுபடியம் நிரூபித்த படம். இதுவரை யாருமே கைவைக்கத் துணியாத Western Cowboy genre படத்தை நகைச்சுவையோடு கொடுத்த ஒரு கலகலப்பான படம். ராகவேந்திர லாரன்ஸ் இதற்கு நல்ல தேர்வு என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

6. சிறந்த மொக்கைப் படம்:
தமிழ்படம். சிவா போன்ற deadpan முகமுள்ள நடிகரை வைத்துக் கொண்டு பெரும்பாலான மாஸ் ஹீரோக்களை spoof செய்து அதில் வெற்றியும் பெற்ற படம். நிச்சயமாக இந்த படத்தின் இயக்குனர் இரண்டாவது படத்தையும் இதே போல எடுத்தால் ஊற்றிக்கொள்ளும். இந்த ஒரு படம் வெற்றி பெற்றவுடன் சிவா இதே போல இருக்கும் படங்களாக ஒப்புக்கொள்ள, அடுத்து வந்த வ.க்வாட்டர் கட்டிங் ஊற்றி மூடியது நாடறிந்த செய்தி. ரேடியோ மிர்ச்சியின் டீ.ஜேயாக இருப்பதே சிவாவுக்கும் நமக்கும் நல்லது.

7. சிறந்த மசாலா படங்கள்:

சிங்கம், பையா மற்றும் நான் மகான் அல்ல. விறுவிறுப்பான திரைக்கதை, நல்ல ஒளிப்பதிவு, ஹிட் பாடல்கள், சூர்யா மற்றும் கார்த்தியின் கமிட்மென்ட்.

8. சிறந்த வெத்துப் படம்:

ராவணன். மணிரத்னம் இயக்கினாலும், விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்தாலும் ஒரு படம் நல்ல திரைக்கதை இல்லை என்றால் ஊற்றி மூடிவிடும் என்பதற்கு நல்ல உதாரணம் இந்தப் படம். இதற்கு வந்த மணிரத்னம் படங்களில் எல்லாம் சுஜாதா வசனம் எழுதியிருந்தார். மணிரத்னம் பாலகுமாரன் அல்லது அட்லீஸ்ட் பட்டுக்கோட்டை பிரபாகரையாவது எழுதச் சொல்லியிருக்கலாம். சுகாசினி எழுதி கேவலமான முறையில் தோற்ற படம்.

9. சிறந்த இசைப் படம் (musical) :

விண்ணைத் தாண்டி வருவாயா. நடிக்கவே தெரியாத சிம்பன்சி,  ஓ...ஐயம் ஸாரி,  சிம்புவை நடிக்க வைத்த படம். அட்டகாசமான பாடல்கள், மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகியவை, சுமாரான திரைக்கதையுடன் வந்த இந்தப் படத்தின் பெரிய பலம்.

10. சிறந்த யதார்த்த படம்:


அங்காடிதெரு. வசந்தபாலன் ஒரு சென்சிடிவ் இயக்குனர் என்பதை மறுபடியும் சுட்டிக்காட்டிய வெற்றிப் படம். யதார்த்தத்தை மீறாத கதை அமைப்பு, சிறந்த திரைக்கதை, அலட்டிக் கொள்ளாத புதுமுகங்கள், சீரான இயக்கம். நல்ல படம் என்பதற்கு ஒரு உதாரணம்.

Comments

Unknown said…
The reason for the failure of "RAVANAN" is not the screen play or dialogue. People are prepared to accept Ravan as a good man but will not accept Raman or Lakshmanan as bad guys. The biggest flaw in the story itself is the reason for the failure. These pseudo atheists and pseudo intellectuals should understand that people are smarter than them (in rejecting their movies) if not as intelligent as them.

Similarly the climax of MMA will not be accepted by common people. "Love" is not so cheap. As if they are chaging shirts the main characters change their love. This will be the reason for the failure of MMA.
Ram Sridhar said…
அன்பு நண்பா, கதையின் மிகப் பெரிய தோல்வி என்று நீ குறிப்பிட்ட அதே சமாச்சாரத்தைத்தான் நான் நல்ல திரைக்கதை இல்லை என்று குறிப்பிட்டேன். வசனம் ஒரு கூடுதல் பலம். அதுவும் இந்தப் படத்தில் இல்லை. எனவே நம்முடைய கருத்தில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. மணிரத்னம் அறிவுஜீவிகளுக்காக மட்டும் படம் எடுப்பதை நிறுத்திவிட்டு சாதாரண ரசிகனுக்கும் எடுக்க வேண்டும்.மன்மதன் அம்பு படத்தின் பெரிய வீக்னெஸ் அதன் முடிவல்ல. காதல் ரொம்ப கற்போடு இருந்ததெல்லாம் பழைய காலம்.

தற்போதைய காதல் பெரும்பாலும் "one night stand" அல்லது "living together" என்ற சமாச்சாரங்களோடு முடிந்துவிடுகிறது. எனவே எவ்வளவோ இடங்களில் மன்மதன் அம்பு போன்ற சீப்பான காதல் ஜோடிகளைப் பார்க்கலாம்.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...