Skip to main content

வாழ நினைத்தால் வாழலாம் -Part 1-பணம் கொட்டும் ஆன்லைன் புத்தக வியாபாரம்

தில்லியைச் சேர்ந்த சச்சின் பன்ஸால் மற்றும் பின்னி பன்ஸால் என்ற இரண்டு நண்பர்களும் தில்லி ஐ.ஐ.டியில் படித்தவர்கள். இருவருமே ஒன்றாக அமெரிக்காவை சேர்ந்த அமெஸான் (Amazon) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் பணிபுரிந்தவர்கள்.

அமெஸான் நிறுவனத்தைப் பற்றி அறியாதவர்கள் குறைவு. 1995 இல் Jeff Bezos என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகெங்கிலும் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு ஆன்லைன் பல்பொருள் அங்காடி அமெஸான்.

மேற்சொன்ன இரு பன்ஸால் நண்பர்களும் செப்டம்பர் 2007 இல் Flipkart என்ற ஆன்லைன் புத்தக நிறுவனத்தை நிறுவினர்.

Pic courtesy: www.business.in.com

இன்றைய இயந்திரத்தனமான உலகில் அருகில் இருக்கும் புத்தகக் கடைக்கு செல்ல நேரம் இல்லாமல் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு Flipkart ஒரு மிக வசதியான தேர்வாகும். ஒரு புத்தகத்தையோ, திரைப்பட, மற்றும் இசை டீவிடீயோ, மொபைல் பேசியோ எதுவாக இருந்தாலும் www.flipkart.com சென்று உங்களுக்கு பிடித்த பொருளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்துவிட்டால் அது குரியர் மூலம் உங்கள் வீடு தேடிவந்து விடும்.

நீங்கள் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாகவோ அல்லது நெட் பாங்கிங் மூலமாகவோ அல்லது வீட்டில் பெற்றுக் கொண்டபின் பணம் செலுத்தும் முறையிலோ (cash on delivery) பெற்றுக் கொள்ளலாம். இது ஒன்றும் ரொம்ப புதிதான அல்லது அதிசயமான விஷயம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம். உண்மை, ஏனென்றால் டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்து ஆகிய நாளிதழ்களும் மற்றும் பல்வேறு நிறுவனங்களும் தற்போது இந்தியாவில் இதே முறையில் இயங்குகின்றன.

என்னைப் பொறுத்தவரையில் Flipkart எப்படி வேறுபடுகிறது என்றால், நான் பெரும்பாலான புத்தகங்களை லேண்ட்மார்க் (Landmark) புத்தகக் கடையில்தான் வாங்கிவந்தேன். எனக்கு தேவையான புத்தகங்களை தேடித் பிடித்து எடுக்க வேண்டும், ஸ்பென்சரில் உள்ள லேண்ட்மார்க்கில் கேட்டால், 'ஸாரி சார், நீங்கள் கேட்கும் புத்தகம் எங்கள் நுங்கம்பாக்கம் கிளையில் உள்ளது" என்பார்கள். அங்கு சென்றால், "ஸாரி சார், அது விற்றுவிட்டது, வேண்டுமென்றால் ஒரு நடை ஸிட்டி சென்டரிலுள்ள லேண்ட்மார்க் சென்று பாருங்கள்," என்பார்கள்.

இதுபோன்ற அலைக்கழிப்பு Flipkart இல் இல்லை. இன்டர்நெட்டில் ஆர்டர் செய்துவிட்டால் சில நாட்களில் அழகாக பேக் செய்து அனுப்பிவிடுகிறார்கள். பலமுறை லேண்ட்மார்க் விலையைவிட Flipkart விலை குறைவு என்பதையும் உணர்ந்தேன்.

இது போன்ற user friendly முறைகளால் 2008-09 இல் ரூ.5 கோடிக்கு விற்பனை செய்த Flipkart நிறுவனம், 2009-10 இல் ரூ.20 கோடி மதிப்புள்ள விற்பனையை செய்தது. இந்த வருடம் அதன் விற்பனை ரூ.100 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சண்டிகாரில் சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சச்சின் மற்றும் பின்னி நண்பர்கள் ஆரம்பித்த Flipkart, 3 வருடங்களிலேயே புத்தக விற்பனையில் இந்தியாவின் No.1 இடத்தைப்  பிடித்துள்ளது. தினசரி கிட்டத்தட்ட 5000 புத்தகங்கள் இந்த நிறுவனத்தின் ஆன்லைனில் விற்கப்படுகின்றன.

இந்தியாவில் புத்தக விற்பனையின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.7000 கோடி என மதிப்பிடப்படுள்ளது. Flipkart அதன் விற்பனையை பன்மடங்கு பெருக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

வானம் எப்போதுமே தொட்டுவிடும் தூரம்தான். என்ன, நாம் முயற்சிக்க வேண்டும், அவ்வளவுதான்.

வாழ நினைத்தால் வாழலாம் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற இந்திய சாதனையாளர்கள் பற்றி எழுதும் எண்ணம் இருக்கிறது.

Comments

-Saran said…
Good to know about Flipkart. Thanks for sharing the details.
Swami said…
You can visit www.landmarkonthenet.com and order for anything which they usually make you go to other stores for. Shipping is free and they ship quite fast; being in Madras, you should get it faster than me. Since it is online, you can compare with flipkart and choose the cheaper one!
Ram Sridhar said…
Siva, I have already done that. Comparatively, Landmark online is also more expensive than Flipkart. Secondly, it is not the question of being in Chennai or elsewhere. If the book is available it will be sent to us immediately, if not it will take time. Flipkart is also giving free delivery throughout India.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்