Skip to main content

மன்மதன் அம்பு - Bull's Eye


ஏற்றுக்கொள்ளும் வேடம் எதுவானாலும் அதை சிரமேற்கொண்டு சிறப்புடன் செய்யும் ஒரு மிகச் சிறந்த நடிகர் கமல் ஹாசன். அவருடைய இன்றைய வெளியீடான மன்மதன் அம்பு அவருடைய அர்பணிப்புக்கு ஒரு உதாரணம். நடிப்பு, பாடல், திரைக்கதை, வசனம் என்று ஏகப்பட்ட பொறுப்புகளை சுமந்தாலும் எல்லாவற்றையும் செவ்வனே செய்திருக்கிறார் நம் உலகநாயகன்.

கமல்-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் எந்தப் படமும் தோற்றதில்லை. இந்தப் படமும் அதை நிரூபிக்கிறது.



எந்த இடத்திலும் தொய்வு விழாமல் கொண்டு செல்லும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களை நிச்சயம் பாராட்டவேண்டும். கமலின் நடிப்பைப் பற்றி நாம் எதுவும் புதிதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் படத்தில் நடிப்பைப் பொறுத்தவரை கமல் மிகவும் மெனக்கெடவில்லை என்றே எனக்குப்படுகிறது.  தொழிலதிபர் மதனகோபாலாக வரும் மாதவன் அழகாக சிரிக்கிறார், அளவாக நடிக்கிறார். ரொம்பவும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்புக்கு ஒரு சபாஷ். அம்புஜாக்ஷியாக வரும் த்ரிஷா மிக அழகாக இருக்கவேண்டும் என்றே ஒரே நோக்கில் ஒரு ஷோகேஸ் பொம்மை மாதிரிதான் வருகிறார். இவர்களைத் தவிர ஏராளமான நடிகர்கள் இந்தப் படத்தில். யாருக்கும் இரண்டு சீனுக்கு மேல் இல்லை.

இசை அமைத்திருக்கும் தேவிஸ்ரீ பிரசாத் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். நல்ல உழைப்பு. கமல் படம் என்பதால் மிகவும் சிரத்தை எடுத்து உழைத்திருக்கிறார், வாழ்த்துக்கள்.


ஒளிப்பதிவாளர் மனுஷ் நந்தன் எழுத்தாளர் ஞானியின் மகன் என்று கேள்விப்பட்டேன். அட்டகாசமான ஒளிப்பதிவு. முதல் படமா என வியக்கவைக்கும் அளவு அருமையான வேலை. வாழ்க வளமுடன்.

மிகச் சிறிய வேடம் என்றாலும் ரமேஷ் அரவிந்த் நன்றாக நடிக்கிறார். ஒரே காட்சியில் வந்தாலும் சூர்யா அசத்திவிட்டு போகிறார்.

நிறைய இடங்களில் வசனத்தில் கிரேசி மோகன் சாயல் தெரிகிறது. பேசாமல் அவரையே எழுதச் சொல்லியிருக்கலாம், இன்னுமொரு அவ்வை ஷண்முகி கிடைத்திருக்கும்.

வில் ஸ்மித் நடித்து 1996 ம் ஆண்டு வந்து ஹிட்ச் (Hitch) என்ற படத்தின் சாயல் என்றாலும், கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும் அதை மறக்கச் செய்துவிடுகிறார்கள்.

மன்மதன் அம்பு-ரசிகர்களின் நெஞ்சில் பாயவேண்டி எய்தது. குறி தப்பவில்லை.

Comments

நச் விமர்சனம்..
ஜெயக்குமார் said…
நானும் படம் பார்த்தேன்.. ஏதோ குறைகிறது, என்னவென்றுதான் தெரியவில்லை. கப்பல்போலவே படமும் நகர்கிறது, மெதுவாக..
Unknown said…
@Jeyakumar.

The climax is not palatable. The way they change the lovers as if they are changing their dress will not be acceptable to common man. It may be acceptable to the intellectuals.

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

'சுஜாதா - எழுத்தின் கோட்பாடு' - சுஜாதாவின் படைப்புகள் பற்றிய புதிய பார்வையில்  ஒரு புத்தகம் 

சுஜாதாவின் சுவாரஸ்யமான படைப்புகளில் 50 படைப்புகளைத் தேர்வு அவற்றைப் பற்றி என்னுடைய பார்வை ' சுஜாதா - எழுத்தின் கோட்பாடு ' என்ற பெயரில் புத்தகமாக விரைவில் வருகிறது. இந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் தேர்ந்தெடுத்த கதைகள் / நாடகங்கள் / திரைப்பட வசனங்கள் பற்றிய பார்வை மட்டுமே இருக்கும். சற்று வித்தியாசமாக, புத்தகத்தின் முகவுரையாக 'சுஜாதாவுடன் நான்' என்ற பெயரில் சுஜாதாவுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்த சில பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். புத்தக வெளியீடு தேதி போன்ற விவரங்கள் இங்கு விரைவில் பகிர்ந்துகொள்ளப்படும். அச்சுப் புத்தகத்திற்கு என்றும் தீவிர ரசிகர்கள் இருப்பதால் அச்சுப் புத்தக விற்பனைக்கு மட்டும் முழுக்கட்டணத்துடன் முன் பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன் பதிவு செய்பவர்களுக்கு வீட்டுக்கு Speed Post மூலம் புத்தகம் அனுப்பிவைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.