Skip to main content

Posts

Showing posts from November, 2010

முன்னாள் அமைச்சர் ராஜா இந்த நாட்டைத் திருடியது எப்படி?

   வடை போச்சே!?  இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியாகி உள்ள "How A Raja robbed the nation," என்ற கட்டுரையின் தமிழாக்கம்: ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து, சி.ஏ.ஜி. (CAG) விடுத்த அறிக்கை, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.அதில் பதவியில் உள்ள செல்வாக்கான அரசியல்வாதிகள் பணத்தாசை பிடித்து நம்முடைய அரசியல் அமைப்பின் மூலம் எவ்வளவு தூரம் போது மக்களை சுரண்ட முடியும் என்றும், எப்படி பெரிய நிறுவனங்கள் இந்தக் கொள்ளையில் கூட்டு சேருகின்றன என்றும், பிற கட்சிகளின் உதவியுடன் நடக்கும் மத்திய அரசு, ஆட்சி கலைந்து விடக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் வளைந்து கொடுக்கிறது என்றும் புள்ளிவிவரங்களை மிகத் தெளிவாக இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தபோது அமைச்சர் ஏ ராஜா, பிரதமர் மற்றும் சக அமைச்சர்களின் ஆலோசனைகளை லட்சியம் செய்யவில்லை. "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்த போது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரியவந்தன. இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடு...

என்கௌண்டர் மற்றும் சட்ட சிக்கல்கள்

சமீபத்தில் எல்லோரையும் மிகவும் வருத்தமடையச் செய்த கோவை இரட்டை கொலை வழக்கில் கைதான அரக்கன் முத்து கிருஷ்ணன் நேற்று கோவை அருகே காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். இதை பொதுமக்கள் முழு மனதோடு வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த முத்து கிருஷ்ணன் கொடூரமாக ஒரு 10 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்றதோடு இல்லாமல், அந்த சிறுமியின் 7 வயது தம்பியையும் கொன்றுள்ளான். இந்த கொலைகாரனை விசாரணை செய்ய அழைத்துச் சென்ற போது அவன் கூட சென்ற இரு காவல் அதிகாரிகளை சுட்டுவிட்டு தப்ப முயன்ற போது மற்ற காவல் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். உண்மையிலேயே இது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம். எந்த ஒரு குற்றவாளிக்கும் இது வரை சரியான தண்டனை கிடைத்ததாக இந்தியாவில் சரித்திரம் இல்லை. சட்டம் மிகவும் சோம்பேறித்தனமாக செயல்படும் போது நம் நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. Justice can be delayed, but it can't never be denied என்று எப்போதோ ஒரு சோம்பேறி சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நம்முடைய சட்டம் யாரையுமே சரிவர விசா...

கமல் விஜய் டி.வியில் தீபாவளியன்று உளறிய சில கருத்துக்கள்.

நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார். அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில: 1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது. 2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர். 3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார்.  என்ன தப்பு? 4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர். இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன...

மாடலிங்

ஏஷியா மோனே - அமெரிக்க மாடல் இப்போது எந்த விளம்பரத்தைப் பார்த்தாலும் அதில் பெரும்பாலும் திரைப்பட நடிகர்/நடிகைகளே இருக்கிறார்கள். தொழில்முறை (professional) மாடல்களே இல்லாமல் போய்விடுவார்களோ என அஞ்சும் அளவு திரைத்துறையினரின் ஆதிக்கம் மிக, மிக அதிகமாக இருக்கிறது. மாடலிங் 1852 ல் சார்லஸ் பிரெடெரிக் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய துணிக் கடையை பிரபலப்படுத்த தன்னுடைய மனைவியான மேரி வெர்நெட் என்ற பெண்மணியை விதவிதமாக துணிகளை உடுத்த வைத்து, அதை வித, விதமான வண்ணங்களில் படமாக வரைந்து ஊரெங்கும் வைத்து கடைக்கு விளம்பரம் செய்தார். இந்த யுக்தியே பிற்பாடு மாடலிங் துறைக்கு முன்னோடியாக இருந்தது எனச் சொல்லலாம். மாடலிங் இன்று எங்கேயோ வளர்ந்து விட்ட நிலையில் celebrity endorsement என்ற பிரபலங்களை வைத்து விளம்பரப்படுத்தும் முறை நம் நாட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட அத்தனை விளம்பரங்களிலும் நடிகர்/நடிகைகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். இவர்களைத் தவிர விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் நிறைய விளம்பரங்களில் வர ஆரம்பித்து விட, தொழில்முறை விளம்பர மாடல்கள் நிறையப் பேர் வே...