ஏஷியா மோனே - அமெரிக்க மாடல் |
இப்போது எந்த விளம்பரத்தைப் பார்த்தாலும் அதில் பெரும்பாலும் திரைப்பட நடிகர்/நடிகைகளே இருக்கிறார்கள். தொழில்முறை (professional) மாடல்களே இல்லாமல் போய்விடுவார்களோ என அஞ்சும் அளவு திரைத்துறையினரின் ஆதிக்கம் மிக, மிக அதிகமாக இருக்கிறது.
மாடலிங் 1852 ல் சார்லஸ் பிரெடெரிக் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவருடைய துணிக் கடையை பிரபலப்படுத்த தன்னுடைய மனைவியான மேரி வெர்நெட் என்ற பெண்மணியை விதவிதமாக துணிகளை உடுத்த வைத்து, அதை வித, விதமான வண்ணங்களில் படமாக வரைந்து ஊரெங்கும் வைத்து கடைக்கு விளம்பரம் செய்தார். இந்த யுக்தியே பிற்பாடு மாடலிங் துறைக்கு முன்னோடியாக இருந்தது எனச் சொல்லலாம்.
மாடலிங் இன்று எங்கேயோ வளர்ந்து விட்ட நிலையில் celebrity endorsement என்ற பிரபலங்களை வைத்து விளம்பரப்படுத்தும் முறை நம் நாட்டில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட அத்தனை விளம்பரங்களிலும் நடிகர்/நடிகைகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார்கள். இவர்களைத் தவிர விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும் நிறைய விளம்பரங்களில் வர ஆரம்பித்து விட, தொழில்முறை விளம்பர மாடல்கள் நிறையப் பேர் வேலை வாய்ப்பை இழந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.
திரைப்படங்களில் நடித்து கோடிகளில் சம்பாதிப்பது போதாது என்று இந்த நடிகர்/நடிகைகளும், விளையாட்டு வீரர்களும் விளம்பரங்களின் மூலமாக மற்றவர்களின் பிழைப்பில் மண் போடும் இந்த விபரீத வேலையை கட்டுப்படுத்த அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Comments