Skip to main content

என்கௌண்டர் மற்றும் சட்ட சிக்கல்கள்

சமீபத்தில் எல்லோரையும் மிகவும் வருத்தமடையச் செய்த கோவை இரட்டை கொலை வழக்கில் கைதான அரக்கன் முத்து கிருஷ்ணன் நேற்று கோவை அருகே காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான். இதை பொதுமக்கள் முழு மனதோடு வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடியிருக்கிறார்கள்.

இந்த முத்து கிருஷ்ணன் கொடூரமாக ஒரு 10 வயது சிறுமியைக் கற்பழித்துக் கொன்றதோடு இல்லாமல், அந்த சிறுமியின் 7 வயது தம்பியையும் கொன்றுள்ளான்.

இந்த கொலைகாரனை விசாரணை செய்ய அழைத்துச் சென்ற போது அவன் கூட சென்ற இரு காவல் அதிகாரிகளை சுட்டுவிட்டு தப்ப முயன்ற போது மற்ற காவல் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறான்.

உண்மையிலேயே இது மிகவும் பாராட்டப்படவேண்டிய ஒரு விஷயம். எந்த ஒரு குற்றவாளிக்கும் இது வரை சரியான தண்டனை கிடைத்ததாக இந்தியாவில் சரித்திரம் இல்லை. சட்டம் மிகவும் சோம்பேறித்தனமாக செயல்படும் போது நம் நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகள் கோடிக்கணக்கில் இருக்கின்றன.

Justice can be delayed, but it can't never be denied என்று எப்போதோ ஒரு சோம்பேறி சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நம்முடைய சட்டம் யாரையுமே சரிவர விசாரித்து இதுவரை தண்டிக்கவில்லை. கற்பழிப்பு, கொலை, ஊழல், கொள்ளை போன்ற எந்த குற்றத்தை செய்தாலும் முதலில் அதற்குண்டான விசாரணை சீக்கிரம் முடிக்கப் படவேண்டும். பிறகு அதற்கேற்ற கடுமையான தண்டனை அதைவிட விரைவாக கொடுக்கப்பட வேண்டும். அப்படி செய்யாவிடில் சட்டத்தின் மேல் யாருக்கும் பயமோ, மரியாதையோ இருக்காது. இப்போது நம் நாட்டில் அதுதான் நடக்கிறது.

ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாமல் பலபேரை சுட்டுத் தள்ளிய பாகிஸ்தான் கொலைகாரன் கசாபை இன்னமும் தூக்கில் போடாமல் விசாரணை என்ற பேரில் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டிருக்கிறது நம் அரசு. வேறு எந்த நாட்டிலும் இது போன்ற ஒரு அவலம் நடக்காது.

நம் நாட்டு சட்டம் மற்றும் காவல் துறைக்கு சவாலாக ஒரு பெரிய 5 நட்சத்திர ஹோட்டலை தன் வசமாகிக் கொண்டு அந்த அழகான கட்டிடத்தைக் கொளுத்தி, அதில் ஏராளமான உயிர்களைக் கொன்று வெறியாட்டம் ஆடிய ஒரு காட்டுவெறிக் கும்பலின் அங்கமான கசாபை தண்டிப்பதில் என்ன தயக்கம்? இதற்கு பெயர் ஜனநாயகம் என்றால் அப்பேற்பட்ட ஜனநாயகம், நீதித்துறை நமக்கு தேவையே இல்லை.

போலி என்கௌண்டர் என்ற பெயரில் இதைப் போன்ற கொலைகளை நடத்தும் காவல் அதிகாரிகளை கொலைக் குற்றம் சுமத்தி விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளான ஜஸ்டிஸ் தல்வீர் பண்டாரியும், ஜஸ்டிஸ் தீபக் வர்மாவும் நேற்று கருத்து சொல்லியிருக்கிறார்கள். அய்யா, ரொம்பவும் நியாமான கருத்துதான். ஆனால், உங்களுடைய சட்டம், நீதி எல்லாம் தூங்கப் போய் ரொம்ப நாட்கள் ஆகிவிட்டனவே. நீங்கள் குறட்டை விட்டு தூங்குவதால் என் போன்ற சாமானியர்களுக்கு சட்டத்தின் மேல் உள்ள நம்பிக்கை, மரியாதை இவை எல்லாம் காற்றில் பறந்து போய் வெகு நாட்களாகிவிட்டன.

சட்டத்தை தூசு தட்டி தண்டனைகளை மிகவும் கடுமையாக்குங்கள். நீதி எல்லருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க ஆவன செய்யுங்கள், எந்த ஒரு வழக்கையும் வழவழ என்று வருடக் கணக்கில் ஜவ்வு மாதிரி இழுக்காமல் உடனடியாக தீர்ப்பு வழங்கி அதற்கேற்ற தண்டனையும் வழங்குங்கள். பிறகு இது போன்ற என்கௌண்டர்களைப் பற்றி வாய்கிழிய பேசலாம்.

முத்து கிருஷ்ணனைப் போட்டுத் தள்ளிய காவல் துறையின் செயல் மிக, மிக பாராட்டப்படவேண்டிய ஒரு செயல். காவல் துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்களின் கொந்தளிப்பின் விளைவால் வந்தது என்று சில வழக்கறிஞர்கள் சொல்லி இருக்கிறார்கள். இருக்கட்டுமே. அதில் என்ன தவறு? என்கௌன்டரில் போட்டுத் தள்ளாமல் விசாரணை நடத்தி இருந்தால் இதே வழக்கறிஞர்கள் காசுக்கு ஆசைப்பட்டுக்கொண்டு  இதே குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கி இருக்க மாட்டார்களா?


இவ்வளவாவது மனசாட்சியுடன் காவல்துறை செயல் பட்டது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த மாதிரி மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளைக் கற்பழிப்பது, கொல்வது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடும் முத்து கிருஷ்ணன் போன்ற வெறி நாய்களுக்கு இதுபோன்ற தண்டனை தொடர வேண்டும். எதுவும் செய்யாமல் சம்பளம் மற்றும் லஞ்சம் என்று வாங்கிக் கொண்டு தூங்கி வழியும் சட்டம் மற்றும் நீதித் துறையைச் சேர்ந்த வாய்சொல் வீரர்கள் செயலில் இறங்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்