சாமி இல்லை, பூதம் இல்லை என்றெல்லாம் சொல்லி பகுத்தறிவுக் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் திமுக வின் சன் மற்றும் கலைஞர் தொலைக் காட்சி சானல்கள் இரவு 10 மணியளவில் தினமும் நிஜம் என்ற பெயரில் நடத்தும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் மக்களின் மூட நம்பிக்கைகளை வைத்து பணம் பார்க்கும் நோக்கோடுதான் நடத்தப்படுகின்றன.
தினமும் ஏதாவது ஒரு கிராமத்தில் பேய் உலாவுகிறது, பாம்பு சாமிக்கு பூசை செய்கிறது, மக்கள் மர்மமான முறையில் இறக்க காரணம் பழைய சாபம், பாம்புப் பெண்கள் பாம்பைப் போலவே சட்டை உரிக்கிறார்கள் என்றெலாம் ஏதாவது ஒரு கட்டுக் கதையை வைத்துக்கொண்டு மக்களின் மூட நம்பிக்கையை exploit செய்து பணம் சேர்க்கும் வேலையை இந்த இரண்டு சானல்களும் செய்கின்றன.
இந்த மூட நம்பிக்கை வியாபாரத்தை ஆரம்பித்து வைத்த புண்ணியம் விஜய் டிவியைச் சேரும். இப்போது, ஜெயா டிவி உட்பட எல்லா சானல்களும் இதைபோன்ற உடான்ஸ் நிகழ்ச்சிகளை தினமும் ஒளிபரப்புகின்றன.
மற்ற சானல்களை விட இந்த நிகழ்ச்சிகளை சன் மற்றும் கலைஞர் டிவி ஒளிபரப்பும்போது இது பெரும்பாலான மக்களை சென்று அடைகிறது. ஒரு பக்கம் சாதியே இல்லை என்று சொல்லிக் கொண்டு சாதி அடிப்டையில் சென்சஸ் எடுக்கச் சொல்லும் இதே திராவிட கட்சிதான் பகுத்தறிவு வளர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இதைப் போல மூட நம்பிக்கைகளை வைத்து பணம் சம்பாதிக்கிறது.

Comments