Skip to main content

ராவண் Vs ராவணன்




மணி ரத்னம் இதுவரை இயக்கிய படங்களில் என்னுடைய முதல் மதிப்பெண் மௌன ராகம் படத்திற்குத்தான். கணவன்-மனைவி இடையே நடக்கும் ஒரு மெல்லிய போராட்டத்தை மிக அழகாக, ரசிக்கும்படி சொல்லியிருப்பார். நிறையபேர் அவருடைய Magnum Opus நாயகன் படம்தான் என்பார்கள். உண்மை. ஆனால் அது God Father படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பதால் அதை அவருடைய "பெஸ்ட் ஒரிஜினல் மூவி" என்ற வரிசையில் சேர்க்ககூடாது.

என் நண்பன் நாகு, ராவணன் படத்தைப் பார்த்துவிட்டு "ஒரு ராம நாராயணன் படத்திற்கு எப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  போவாயோ அதே போல இந்த படத்திற்கும் போ, உன்னால் ரசிக்க முடியும்," என்று சொன்னபோது, என் மனதில் இரண்டு எண்ணங்கள் ஓடின. ஒன்று, நான் ராம நாராயணன் படங்களை இது வரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்கும் ஐடியா ஏதும் இல்லை. இரண்டு, அவ்வளவு மட்டமாகவா இந்த படம் இருக்கும்?

இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே ஏராளமான விமரிசனங்கள் வந்துவிட்டதால் நான் ஒரு சிறிய வித்தியாசத்தை செய்யலாம் என நினைத்தேன்; இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தமிழ் வடிவங்களைப் பார்த்துவிட்டு அவை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. நான் சமீப காலமாக ஹிந்தி படங்களைப் பார்ப்பதில்லை. அவை பெரும்பாலும் குப்பையாக இருக்கின்றன என்பது மட்டுமல்ல காரணம், இருக்கின்ற தமிழ் மற்றும் ஆங்கிலப் படங்களைப்  பார்ப்பதற்கே நேரம் இல்லாமைதான்.
  1. இரண்டிலுமே முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய  ஒருவர் என்றால் அது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அவர்கள்தான். அருமையான, கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் எனத் தோன்றும் துல்லியமான ஒளிப்பதிவு.
  2. இசை என்னைப் பொறுத்தவரை மிக, மிக சுமார் ரகம்தான். (உசிரே போகுது பாட்டு ஒரு விதிவிலக்கு)
  3. ஐஸ்வர்யா ராய் ஒரு பொம்மை மாதிரி வந்துபோகிறார். இதற்கு கோடிகளைக் கொட்டி கொடுக்கவேண்டுமா? இதே கதாபாத்திரத்தை ஒரு சினேகா அல்லது தமன்னா செய்திருக்கமுடிய்ம் என்பது என் கருத்து.
  4. ஹிந்திப் பதிப்பில் கோவிந்தா செய்திருக்கும் ரோல் நிச்சயமாக தமிழில் கார்த்திக் செய்ததை விட நன்றாக இருக்கிறது.
  5. பிரபு எதற்க்காக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என தெரியவில்லை. வீணடிக்கப்பட்ட ஒரு ரோல்.
  6. ஹிந்திப் பதிப்பில் விக்ரமின் தேவ் ரோல் மிக அருமை. அதில் பத்தில் ஒரு பங்கு கூட தமிழில் ப்ரிதிவிராஜ் செய்யவில்லை. 
  7. அதேபோல தமிழ் பதிப்பில் விக்ரம் செய்ததை ஹிந்தியில் அபிஷேக் பச்சன் நெருங்கக் கூட முடியாது. இதைப் போல ஒரு சொதப்பல் நடிகரை மறுபடி, மறுபடி தன்னுடைய படங்களில் மணி ரத்னம் எப்படி சான்ஸ் கொடுக்கிறார் என்பது ஒரு பெரிய கேள்விக் குறி. 
  8. இந்த லட்சணத்தில் படத்தில் எடிட்டிங் சரியில்லாமல் போனதால் படம் தோல்வி அடைந்ததாக அமிதாப் அவருடைய blog இல் பிலாக்கணம் பாடியிருக்கிறார். பாவம், அவருடைய பையன்தான் என்றாலும் நடிப்பு வரவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதானே முறை?
  9. இதைப் போல ஒரு கதையை மணி ரத்னம் ஏன் தேர்வு செய்தார் என்பது இன்னுமொரு பெரிய கேள்விக்குறி.
  10. சமீபகாலமாக மணி ரத்னம் படம் என்றாலே சுஜாதா வசனம் என்பது ஒரு கூடுதல் பலமாக இருந்தது. இதில் வசனம் சுஹாசினியாம். அய்யோ பாவம் மணி ரத்னம். ஏன் பாலகுமாரன் போன்ற புத்திசாலிகளை அணுகவில்லை? வசனமா அது? படு உளறல். சொல்லிக்கொள்ளும்படி ஒரு வசனம் கூட இல்லை. 
  11. தேர்ந்தெடுத்திருக்கும் இடங்கள் எல்லாமே அமர்க்களம். இதில் மணி ரத்னம் 100% பெறுகிறார்.
  12. மணி ரத்னத்தின் அடுத்த படம் ஹிந்தியில் என்கிறார்கள். வாழ்த்துக்கள். 
விக்ரம் மற்றும் ஒளிப்பதிவு தவிர இரண்டு பதிப்புகளிலுமே எதுவும் இல்லை. நிச்சயமாக ராவண் படத்தைவிட ராவணன் எவ்வளவோ மேல். முக்கிய காரணம் விக்ரம். 

வரும் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று பார்ப்பதற்காக முறையே Inception (என்னுடைய அபிமான நடிகர் Leonardo DiCapiro, மற்றும் இயக்குனர் Christopher Nolan) , அனந்தபுரத்து வீடு & களவாணி ஆகிய படங்களுக்கு சத்யம் தியேட்டரில் முன்பதிவு செய்துவிட்டேன். இந்தப் படங்களின் விமரிசனங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Comments

மணி அவர்களின் ராவணன் பார்த்த பின் நிறைய பேருக்கு எழுகிற எண்ணம்தான் இது.
Unknown said…
Brother! you have missed the point. When I said "go to the movie as if it is a Ramanarayanan movie", it means do not go with an expectation of a "Mani Ratnam movie". It doesn't mean you should have or you should see a Ramanarayanan movie.

If you go with a Mani-movie mind set up then it will be a very big disappointment. Otherwise the movie is enjoyable
Swami said…
என் ஹிந்தி பேசும் நண்பர் ஒருவர் சொன்னார்: 'பாம்பே படத்துக்கப்புறம் மணியின் எந்தப் படமும் ஹிந்தியில ரசிக்கும்படியா இல்லை. அதனால ராவண் வரும்போதே எங்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஒண்ணும் இல்லை. நீங்கதான் உங்க ஊர்க்காரர் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக quality-யே இல்லைன்னாலும் அவரை கொண்டாடறீங்க."

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...