(நான் பட்டயாவில் தங்கியிருந்த Furama Jomtien Beach Resort முன் இருந்த நம் பிரம்மாவின் அழகான சிலை. இதை அவர்கள் புத்தர் என்கிறார்கள்)
என்னுடைய சமீபத்து பதிவு ஒன்றில் தமிழ் நம்மீது திணிக்கபடுகிறது என்று குறை கூறியிருந்தேன். அதை இப்போது, என்னுடைய தாய்லாந்து பயணத்திற்கு பிறகு, தவறு என்று உணருகிறேன்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரம் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் பார்த்தபோது இருந்ததைவிட பல மடங்கு முன்னேறியுள்ளது. அருமையான சாலைகள், வசதியான மேம்பாலங்கள், நல்ல தண்ணீர் என்று பல்வேறு வகையிலும் முன்னேற்றம்.
ஆனால் எனக்கு மிகவும் எரிச்சலூட்டிய விஷயம் ஒன்று இருக்கிறதென்றால் அது தாய்லாந்து நாட்டின் மொழி வெறி.
எல்லா இடங்களிலும் தாய் மொழி (அதாவது தாய்லாந்து மொழி) தவிர வேறு எதுவும் இல்லை. சாலை மற்றும் கடைகளின் பெயர்கள் உட்பட எல்லாமே அவர்களின் மொழி மட்டுமே. ஒரு இடத்தில கூட ஆங்கில மொழியை நாங்கள் பார்க்கவில்லை. தாய் மொழி முக்கியத்துவம் புரிகிறது, அதற்காக வெளிநாட்டு பயணிகள் புரிந்து கொள்ள ஏதுவாக ஒரு இடத்தில கூட ஆங்கில மொழி இல்லாமலா செய்ய வேண்டும்? இரண்டாவது டாக்சி ஓட்டுனர் உட்பட யாருக்கும் ஆங்கிலம் தெரியவில்லை. மிகவும் கடினமான நிலையில் இனி தப்பித் தவறி கூட இந்த மாதிரி கேடுகெட்ட இடத்திற்கு போகக் கூடாது என நினைத்துள்ளேன்.
இந்த மாதிரி ஒரு மொழி வெறியர்களைப் பார்க்கும் போது நாம் தமிழ் உபயோக்கிக்க வேண்டும் என்பதில் எந்தத் தவறுமில்லை.
Comments
That is not "Mozhiveri"
Without English the small country Thailand developed this much. But our Tamil Nadu.....Shame..Shame...
First change your rubbish mind man.
SR Balaji
balajiazp@yahoo.co.in