டேஜா வூ என்ற ஆங்கில சொல்லுக்கு அர்த்தம் ஒரு நிகழ்வு நம்மைச் சுற்றியோ, அல்லது நமக்கே நடக்கும்போதோ நம்மில் பலருக்கு இந்த நிகழ்வு/அனுபவம் ஏற்கனவே நிகழந்த/அனுபவித்த ஒன்று போல இருக்கிறதே என்றுதோன்றும் ஒரு விஷயம்.
என் நண்பர் நாகுவுக்கு இந்த டேஜா வூ சற்று வேறுமாதிரி நிகழ்கிறது. அவருக்கு சமீப காலமாக சில ஆங்கிலப் படங்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த படத்தின் கதை அப்படியே எழுத்தாளர் சுஜாதாவின் கதையை சுட்ட மாதிரி இருக்கிறதே என்ற உணர்வுதான் அது.
சில நாட்களுக்கு முன், Shutter Island என்ற ஆங்கில படத்தைப் பாத்துவிட்டு இதன் கதை அப்படியே சுஜாதா எழுதி 1971 இல் வெளிவந்த "ஒரு அராபிய இரவு" என்ற சிறுகதை போலவே உள்ளது என்றார். பிறகு, ஸ்டார் மூவீஸ் சானலில் The Day The Earth Stood Still என்ற படத்தைப் பார்த்து விட்டு, இதன் கதை சுஜாதா எழுதி (வருடம் ஞாபகம் இல்லை) வெளிவந்த "திசை கண்டேன், வான் கண்டேன்" என்ற கதையைப் போலவே உள்ளது என்றார். இதைப் போன்ற டேஜா வூ வரக் காரணம், நண்பர் நாகுவுக்கு (என்னைப் போலவே) அறிவுஜீவி எழுத்தாளர் சுஜாதா மேலிருக்கும் ஒரு அபரிமிதமான அபிமானம், மரியாதை.
Shutter Island நாவல் ஆங்கிலத்தில் மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் "Denis Lehane" எழுதி 2003 இல் வெளிவந்தது. டெனிஸ் மிகப் பெரிய எழுத்தாளர், அவருக்கு தமிழ் தெரிந்த யாராவது ஒருவர், சுஜாதாவின் அராபிய இரவு கதையை சொல்லியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவே. இரண்டாவது, இரண்டு கதைகளின் கருவுமே எல்லோருக்கும் தெரிந்த "delusion" என்ற ஒருவித மன வியாதியின் பின்புலம்தான். மூன்றாவது, மார்டின் ஸ்கோர்ஸேஸே (Martin Scorsese) போன்ற முதல் தர இயக்குனர் நாடும் எழுத்தாளர்கள் இதைப் போல கதை திருட மாட்டார்கள்.
அடுத்தது, The Day The Earth Stood Still படம் ஏற்கனவே 1951 இல் வெளிவந்த ஒரு படத்தின் ரீமேக் ஆகும். அந்தப் படம், 1940 இல் வெளிவந்த "Farewell to the Master" என்ற விஞ்ஞானச் சிறுகதையைத் தழுவி எடுத்தாகும்.
சுஜாதா ஒரு மிகத் தேர்ந்த எழுத்தாளர். கிட்டத்தட்ட எல்லாவிதமான கதைகளையும் அவர் எழுதிவிட்டார். எனவே அவருடைய தீவிர ரசிகர்களுக்கு இதைப் போல தோன்றுவதில் தவறில்லை.
Orkut எனப்படும் வலைத் தளத்தில் கமல் ரசிகர்கள் ஒரு குழுமம் ஒன்று வைத்துக் கொண்டு தினசரி கமல் துதி பாடி வருகிறார்கள். இதிலும் தவறேதும் இல்லை. ஆனால், கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு ரசிகர் "Bourne Identity" படத்தைப் பார்த்துவிட்டு அது கமல் நடித்து '80 களில் வெளிவந்த "வெள்ளி விழா" படத்தின் காப்பி என்று சொன்னதும் இதே டேஜா வூ ரகம்தான். காரணம், கமல் நடித்த வெள்ளி விழா படத்தின் இயக்குனர் பிரதாப் போத்தன் பார்ப்பதற்கு கேனயன் போல இருப்பாரே தவிர, நல்ல புத்திசாலி. இவர் '80 களின் ஆரம்பத்தில் வெளிவந்து மிகப் பிரபலமான "Bourne Identity" நாவலைத் தழுவிதான் வெற்றி விழாவை எடுத்தார். அந்த நாவல் புகழ் பெற்ற எழுத்தாளர் ராபர்ட் லுட்லம் (Robert Ludlum) எழுதியது.
ஆங்கிலத்தில் இந்த நாவலை 2002 இல் தான் படமாக எடுத்தார்கள். பிறகு அவரே "Bourne Supremacy" "Bourne Ultimatum" என்றெல்லாம் நாவல்கள் எழுதி அவையனைத்தும் திரைப் படங்களாக வந்து மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. இதே போல orkut வலைத் தளத்தில் Tom Hanks நடித்து 1994 இல் வெளிவந்த "Forrest Gump" என்ற படம் கமல் நடித்து '80 களில் வெளிவந்த சுவாதி முத்யம் (சிப்பிக்குள் முத்து) என்ற படத்தின் காப்பி என்று சின்னப் பிள்ளைத்தனமாக குறிப்பிடப்பட்டிருந்தது. Forrest Gump 1986 ம் வருடம் அதே பெயரில் வெளிவந்த நாவலைத் தழுவி எடுத்ததாகும். எனவே இதவும் ஒரு தவறான ஆர்வக் கோளாறில் ஏற்பட்ட டேஜா வூ கேஸ்தான். மேலும் orkut இணைய தளத்தில் இந்த கமல் குழுமத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் பள்ளி/கல்லூரி மாணவர்கள். எனவே அவர்களிடம் அவ்வளவாக exposure இருக்கும் என எதிர்பாக்க் முடியாது.
இதே போல ஆங்கிலத்தில் மற்றொரு புகழ் பெற்ற எழுத்தாளர் "Irwing Wallace" எழுதி 1982 இல் வெளிவந்த "The Miracle" என்ற நாவலைத் தழுவி "ஆத்மா" என்ற பெயரில் பிரதாப் போத்தன் ஒரு படம் வெளியிட்டார். இது இன்னும் ஆங்கிலத்தில் படமாக வரவில்லை. எதிர்காலத்தில் வந்தால் யாரவது இதை பிரதாப் போத்தனின் படமான ஆத்மாவின் காப்பி என்று டேஜா வூ வந்து சொல்லலாம்.
நம்மில் பெரும்பாலோருக்கு நம்முடைய அரசியல் நிகழ்வுகளைப் பார்க்கும் போது இது ஏற்கனவே நடந்த நிகழ்வு போல இருக்கிறதே எனத் தோன்றலாம். அது நிச்சயமாக டேஜா வூ கிடையாது. அது உண்மையாகவே ஏற்கனவே நிகழ்ந்திருக்கும். காரணம், அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

Comments
அது என்ன நண்பா!! "அங்கிருந்துதான் இங்கே" காப்பி அடிக்க முடியும்; "இங்கிருந்து அங்கே" முடியவே முடியாது'ன்னு ஒரு மனப்பான்மை. Even yesterday I saw the movie "Bullet proof monk" whose end credits had the lyrics of Bhagawad Gita. ஸ்பஷ்டமாக ஒரு வெள்ளைக்கார பெண்மணி "பரித்ராணாய சாதூனாம்" பாடுகிறார். அதே போல் SHUTTER ISLAND டைரக்டர்; உப டைரக்டர் எவனாவது ஒருத்தன் அந்த சிறு கதையை படித்திருந்தால் போதுமே. அதற்க்கான சாத்தியக்கூறு நிச்சயமாக இருக்கிறது.