சந்தடி சாக்கில் அப்படியே என் படத்தையும் போட்டு விடலாம். |
நண்பரே, blog பதிவு எனக்கு ஒரு creative வடிகால். நாள் முழுக்க அலுவலக வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, தப்பித் தவறி கூட வீட்டிலிருந்து கொண்டு எந்த அலுவலக வேலைகளையும் நான் செய்வதில்லை. அதே போல, என்னுடைய நிறைய பதிவுகளை முழுக்க, முழுக்க நானே தயாரிப்பதில்லை (தட்டச்சுவதில்லை).
எப்போதெல்லாம் சுவாரசியமான பதிவுகளைப் பார்க்கிறேனோ, அப்போதே அதை draft ஆக சேமித்து விடுகிறேன். பிறகு நேரம் கிடைக்கும் போது, அதை தூசு தட்டி, கொஞ்சம் நகாசு வேலைகளையும் (என் பங்குக்கு) சேர்த்து அதை அப்படியே பதிந்து விடுகிறேன். அந்தப் பதிவு நேரம் காலை 8 மணியாக இருக்கலாம், அதற்காக நான் 8 மணிக்குத்தான் அதை நான் தயார் செய்கிறேன் என்று அர்த்தமல்ல.
பெரும்பாலான சுவாரசியமான தகவல்கள் ஏராளமான வலைத் தளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. என் பணி அவற்றை அலசிப் பார்த்து ஏதாவது news worthy யாக இருந்தால் அதை பதிந்துவிட்டு அந்தந்த வலைத் தளங்களுக்கு நன்றியும் சொல்லி விடுகிறேன். களவாணி விமரிசனம் ஒரு உதாரணம்; என்னதான் நான் அந்தப் படத்தை மிகவும் ரசித்திருந்தாலும், ஒரு தேர்ந்த விமரிசகர் அதைப் பற்றி நன்றாக எழுதியிருக்கும் போது, அதை பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என நினைக்கிறேன். அதே சமயம், என்னுடைய எண்ணங்களையும் நான் அதனுடன் சேர்க்கத் தவறுவதில்லை. மறக்காமல் அந்தந்த வலைத் தளங்களுக்கு என்னுடைய நன்றியையும் சொல்லிவிடுகிறேன்.
என்னுடைய பல நண்பர்கள், நண்பர் ரவியைப் போலவே ஆர்வமாக அது எப்படி தமிழில் இவ்வளவு எழுத முடிகிறது எனக் கேட்கிறார்கள்.இந்த ஆர்வத்தின் முதல் பின்னணி, நம்மில் பலபேர் தமிழ் மொழியை மறந்து வருவது, இரண்டாவது, தமிழில் எழுதுதுவது என்பதே எதோ நடைமுறைக்கு ஒவ்வாத செயல் என நினைப்பது, மூன்றாவது, தமிழில் எழுதுவது என்பது எதோ ஒரு மட்டமான வேலை என நினைப்பது.
முயன்று பாருங்கள். இது ஒன்றும் மலையைப் புரட்டும் வேலை இல்லை.
Comments