Skip to main content

Posts

Showing posts from January, 2010

2010 சுட்டெரிக்குமா சுகம் தருமா?

இந்த ஆண்டு எப்படி இருக்கும்? பணம் கொட்டுமா...பதவி உயர்வு வருமா...கார் வாங்குவோமா என் றெல்லாம் தான் நம்மைப் போன்ற சாமானியர்கள் கணக்கு போடுவோம். புத்தாண்டு ஜோதிடத்தை பெரும்பாலும் நம்பி முடிந்தவரை கோயில், குளம் என்று செல்லுவோம், அல்லது நம் சார்பில் நம்முடைய மனைவிகள் அவரவர் இஷ்ட தெய்வங்களை தூக்கத்திலிருந்து எழுப்பி வேண்டுவர் [எங்க வீட்டுல அவருக்கு இப்போ ஏழரைச்சனி] ஆனால், 2010ல் உண்மையில் கவலைப்பட வேண்டியது எது பற்றி தெரியுமா, 2009 போலவே 2010 சுட்டெரிக்குமா என்பது தான். புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கின்றனரே... அது பற்றி ஒவ்வொரு மனிதனும் முன்னெச்சரிக்கையுடன் களம் இறங்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது. அட, நம்ம தலைமுறையிலா விபரீதம் வரப்போகிறது...? "2012" என்று ஒரு ஹாலிவுட் படம் வந்து நம்மையெல்லாம் பீதி கிளப்பியதே, அதுபோல, உலகம் அழிந்து விடுமோ, என்று தான் நினைக்கின்றனர் பலர். ஆனால், உலக வெப்பமயமாதல் என்பது, கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களை, இந்த பூமியை கொல்லும் மெகா கொடூரன். சர்வதேச அளவில் விஞ் ஞானிகள் கூட்டம் போட்டு, ஆராய்ச்சி ச...
முதலில் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த புத்தாண்டு எல்லோருக்கும் நலமாக அமைய எல்லாம் வல்ல ஆண்டவன் துணை புரியட்டும். பல்வேறு சொந்த காரணங்களால் சென்ற ஜூன் மாதத்திற்குப் பிறகு என்னால் புதிய பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இதற்கு முக்கிய காரணம் என்னுடைய சோம்பேறித்தனம் என்று கூட சொல்லலாம். இந்தப் புத்தாண்டில் என்னுடைய முதல் மற்றும் முக்கிய தீர்மானம் என்னுடைய இந்த பதிவுகளை எக்காரணம் கொண்டும் இடைவெளி இல்லாமல் வெளியிடுவதுதான். இந்தப் பதிவுகளை நான் சற்று இடைவெளி விட்டு பதியாமல் இருந்தபோது நிறைய நண்பர்கள் என்னுடன் நேரில் சந்திக்கும்போதும், தொலைபேசியில் உரையாடும்போதும் இதைக் குறிப்பிட்டு கேட்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. குறிப்பாக ஒரு அமெரிக்க நண்பர் [நான் முன்பின் சந்தித்ததில்லை] எனக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி என்ன காரணம் என்று கேட்டுவிட்டு, இணைய தளத்தில கோடிக்கணக்கான பதிவுகள் இருந்தாலும், தமிழில் அவை மிகக் குறைவு என்றும், அதிலும் பெரும்பாலானவை வெறும் reporting ஆக மட்டுமே உள்ளன, அதிலும் முக்கியமாக பதிவாளர்கள் பெரும்ப...