பிரபாகரனைப் பற்றிய என்னுடைய முந்தய வலைப் பதிவை படித்த நண்பரொருவர், வேறு எங்கேனும் இதைப் போலவே முக்கிய தலைவரின் மரணத்தில் குழப்பம் வந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிரண்டு இல்லை, ஏராளமான குழப்பங்கள் இருந்திருக்கின்றன; முக்கியமான ஒரு தலைவர், நம்முடைய சுபாஷ் சந்திர போஸ். இவருடைய மரணத்தில் ஏராளமான சந்தேகங்கள் இதுவரை தீர்க்கப் படாமலேயே இருக்கின்றன.
இரண்டாவது உலகப் போரின் நடுவே, ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் அவர் இறந்து விட்டதாக செய்திகள் பரவலாக இருந்தாலும் இதுவரை பெரும்பாலான இந்தியர்கள் அதை நம்பவில்லை.
அடுத்ததாக, ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டு இறந்தபோது இதேபோல பெரிய குழப்பம் இருந்தது. ஹிட்லர் இறந்ததாக சொல்லப்பட்ட பின் சில வருடங்கள் கழித்து ஒரு ஓவியம் ஏலத்துக்கு வந்தபோது பெரும் சர்ச்சை வெடித்தது; அந்த ஓவியம் ஒரு கரிக் கோடு ஓவியமாகும் [charcoal line drawing]. ஹிட்லர் அதைப் போல் ஓவியங்கள் சிலவற்றை பொழுதுபோக்காக வரைந்திருந்தார். கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் ஒரு ஓவியம் 1950 இல் ஏலத்துக்கு வந்த போது, பெரும்பாலான செய்தித் தாள்கள் இது ஹிட்லர் வரைந்த ஓவியம் என்றால் அவர் தற்கொலை செய்து கொண்டு இறக்கவில்லை, உயிரோடுதான் இருக்க வேண்டும் என திகில் கிளப்பின. இதற்கு முக்கிய காரணம் அந்த ஓவியத்தில் இருந்த ஒரு இடிந்த கட்டிடம்; ஹிட்லர் தற்கொலை செய்துகொண்ட பின்னர் அந்த ஓவியத்தில் இருந்த கட்டிடம் Allied Nations தாக்குதலில் சேதமுற்றது. எனவே அந்த சேதமுற்ற கட்டத்தை அப்படியே வரைய வேண்டும் என்றால் நிச்சயம் ஹிட்லர் உயிரோடு இருந்தால் மட்டுமே முடியும் என conspiracy theory உலா வந்தது.
நல்ல வேளையாக அந்த ஓவியம் ஹிட்லரின் ஸ்டைலைப் பார்த்து அப்படியே வரைந்த [copy cat] ஒரு ஓவியரின் கைவண்ணம் என்று தெரிந்து மக்கள் பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தை மிக அழகாக தன்னுடைய கற்பனையைக் கலந்து பிரபல ஆங்கில எழுத்தாளர் Irwing Wallace, The Seventh Secret என்று ஒரு அருமையான நாவலை எழுதினார்.
இதைப் போல இன்னும் ஏராளமான சந்தேகங்கள், conspiracy theories ஆகியவை இன்றும் இருக்கின்றன.

Comments