சிகரெட்டினால் என்னென்ன தீமைகள் விளையலாம் என்று பட்டியலிட்டாலும் படித்தவர்களே அதையெல்லாம் லட்சியம் செய்யாதபோது, மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது? என்னதான் பொது இடங்களில் புகைப்பது குற்றம் என்று அரசு அறிவித்தாலும், சிகரெட் விற்பனை ஒன்றும் குறைந்தமாதிரி எனக்குத் தெரியவில்லை.
சிகரெட் சம்பந்தமான சில சுவையான [?] தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைகிறேன்.
முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரே ஒரு சிகரெட்டில் 4400 வெவ்வேறு ரசாயனப் பொருட்கள் [chemicals] இருக்கின்றன; இவற்றில் கிட்டத்தட்ட 599 addictive வகையைச் சார்ந்தவை [அதாவது, மறுபடியும், மறுபடியும் உங்களைப் புகைக்க வைக்கக் கூடிய போதைப் பொருட்கள்], இந்த 599 இல் 43 பொருட்கள் புற்றுநோய் [cancer] உண்டாக காரணமாக இருப்பவை.
இவற்றில் சில மிக, மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியவை; அவை, Carbon Monoxide, Nitrogen Oxide, மற்றும் Hydrogen Cyanide ஆகியவை.
இவை எல்லாவற்றையும் மீறிய பிரதான வில்லன், நிகோட்டின் [Nicotine] . நிகோட்டின் போதை உண்டாகக் காரணம் அது உடனடியாக நம் உடம்பில் உள்ள epinephrine என்ற ஹார்மோனைச் அதிக அளவில் சுரக்கச் செய்து, அதன் மூலம் சிகரெட் புகைப்பவர்களுக்கு "கிக்" உண்டாக வழி வகுக்கிறது. இதுவே பின்னர் அந்த பழக்கம் நிரந்தரமானதாக மாற காரணமாகிறது.
இதில் இன்னொரு ஆச்சரியமான சங்கதி இருக்கிறது; நம்மைச் சுற்றிலும் இருப்பவர்கள் பெரும்பாலான நேரம் சிகரெட் புகைத்துக் கொண்டே இருந்தால், அருகில் இருக்கும் நமக்கும் எல்லாவிதமான கெடுதல்களும் நேர வாய்ப்பு இருக்கிறது என்பது மட்டுமிலாமல், நாமும் அந்த secondary smoke க்கு அடிமையாக [addict] வாய்ப்பு இருக்கிறது. நாம் நேரடியாக புகைக்க மாட்டோம் என்றாலும், அந்த புகையை சுவாசிக்க மாட்டோமா என்று ஏங்க ஆரம்பிக்கும் ஒரு அபாயம் இருக்கிறது.
இதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்; பெங்களூரில் உள்ள என் நண்பி ஒருவருக்கு இந்தப் பழக்கம் இருந்தது. அவருடைய பாஸ், மற்றும் வேறு சில சக ஊழியர்கள், அவருடைய சிறிய office இல் புகைத்து, புகைத்து, அந்த புகையை நேரடியாக சுவாசித்து வந்ததால், அது ஒரு பழக்கமாக ஆகிவிட்டது.
அவருடைய பாஸ் தீடீரென இறந்த பிறகு, என் நண்பி சொந்தமாக ஒரு கன்ஸல்டன்சி ஆரம்பித்து விட்டார். எனவே இப்போது அந்த பழக்கம் அவருக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இதில் கொடுமை என்னவென்றால், இதைப் போன்ற ஒரு பழக்கம் அவருக்கு இருந்தது என்பது அவருடைய வீட்டில் அவர் கணவர் உட்பட யாருக்கும் தெரியாது என்பதுதான்.
புள்ளி விவரங்களின்படி [statistics] புகைப்பதை விட்டு ஒழிக்க வேண்டும் என நினைப்பவர்களில் 7% மட்டுமே வெற்றி பெறுகிறார்களாம். நிறைய புத்தகங்களிலும், தொலைக் காட்சியிலும் காட்டுவதைப் போல படிப்படியாக சிகரெட் பழக்கத்தை விடவே முடியாது. இந்த சனியனை விட்டொழிக்க ஒரே வழி, அதை அப்படியே abrupt ஆக நிறுத்துவதுதான்.
என்னுடைய நெருங்கிய நண்பர்கள் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக இதை விட முடியாமல் இருப்பதைப் பார்க்கிறேன். என் அருமை நண்பர், ரவி, எனக்குத் தெரிந்து ஒரு நாளைக்கு 20-30 சிகரெட்டுகள் வரை ஊதித் தள்ளுவார். அவருடன் சிறுது நேரம் இருந்து விட்டு வந்தால் என்னுடைய தலைமுடி, சட்டை, பனியன் வரை அந்த நாற்றம் இருக்கும்.
ஆனால், ஒரு நாள் அவர் திடீரென அந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். இன்று வரை அவர் அதை மறுபடியும் ஆரம்பிக்கவில்லை. மற்ற நண்பர்கள் "இப்போதெல்லாம் நான் ஒன்றோ, இரண்டோ தான் புகைக்கிறேன்" என்றெல்லாம் சாக்கு சொன்னாலும், அவர்களால் அதை விட முடியவில்லை என்பதுதான் உண்மை.
Comments
Thanks again Sridhar for giving me a space to post my comment.