Skip to main content

நகைச்சுவை மன்னன் நாகேஷ்




தமிழ் திரையுலகம் பல நகைச்சுவை நடிகர்களை தந்திருக்கிறது. ஆனால் இன்று நாம் யோசித்தால் நான்கு அல்லது ஐந்து பேருக்கு மேல் நம் நினைவில் நிறைய நடிகர்கள் நிற்கவில்லை.

சந்திரபாபு: மறக்கமுடியாத ஒரு நடிகர். இவர் படங்களில் நகைச்சுவைக்கு மேல் வெஸ்டர்ன் டான்ஸ் மற்றும் மெட்ராஸ் தமிழ் [பெரும்பாலான படங்கள்] மேலோங்கி நிற்கும்.

பாலய்யா: இவருடைய நகைச்சுவை பெரும்பாலும் ஒரு வில்லத்தனம் கலந்தே இருக்கும். ஆனாலும் ரசிக்க முடிந்த காரணம் அவருடைய அமர்க்களமான "பாடி லாங்க்வேஜ்."

தங்கவேலு: மிகப் பிரமாதமான டயலாக் டெலிவரி இவர் பலம். கல்யாணப் பரிசு, அறிவாளி, தேன்நிலவு ஆகிய படங்களில் இவருடைய காமெடியை ரசிக்காமல் எப்படி இருக்க முடியும்?

சோ: நகைச்சுவை கலந்த சடைர் வகை காமெடி இவருடையது. நக்கல், நையாண்டி இல்லாமல் இவரால் காமெடி செய்ய முடியாது. இவரும், நாகேஷும் சேர்ந்து கலக்கிய நினைவில் நின்றவள் மற்றும் பல படங்களை அடிக்கடி பல சானல்களில் ரசிக்க முடிகிறது.

கலைவாணர் என் எஸ் கே [என் எஸ் கிருஷ்ணன்] பற்றி ஏன் எழுதவில்லை என்று கேட்காதீர்கள். இதுவரை அவருடைய படம் எதுவும் நான் பார்த்ததில்லை.

இவர்களுக்கெல்லாம் மேலாக இன்னும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத காமெடி நாகேஷின் திறமை. நாகேஷின் காமெடி ஒரு வகைபடுத்தமுடியாத காமெடி.

அலுக்க அலுக்க படங்களில் இப்போதெல்லாம் காமெடி சீன்கள் வருகின்றன. விடாமல் பிரபல ஹீரோக்களின் படங்களை காபி அடித்து கேனத்தனமாக [பத்மஸ்ரீ விருது என்ற அசிங்கம் வேறு] உருப்படாத காமெடி செய்யும் விவேக், அரைத்த மாவையே அரைக்கும் வடிவேலுவின் வில்லங்க காமெடி...இவையெல்லாம் இன்னும் ஒரு இரண்டு வருடங்களுக்கு மேல் தாங்காது.


இதில் கஞ்சா கருப்பு, ரப்பர்வாயன் சந்தானம், அலட்டல் கருணாஸ் ஆகியோரையெல்லாம் காமெடியன் லிஸ்டில் சேர்ப்பது ரொம்ப கஷ்டம். இவர்கள் படங்களை பார்த்து தீரவேண்டியது நம் தமிழ் ரசிகர்களின் தலையெழுத்து!

காமெடி என்றால் அது நிச்சயம் நாகேஷின் காமெடிதான். எவ்வளவு படங்கள், எவ்வளவு வேடங்கள், எல்லாமே அலுக்காத விருந்து. இவருடைய காமெடி யாரையும் பார்த்து காபி அடிக்காத ஒரு உன்னதமான காமெடி. வார்த்தைக்கு வார்த்தை தன்னுடைய குரு "ஜெர்ரி லூயிஸ்" என்று நாகேஷ் சொல்லி வந்தாலும் எனக்கு தெரிந்து எந்த படத்திலும் நாகேஷ் அவரை காபி அடித்ததில்லை.

நாகேஷ் உயிரோடு இருக்கும் போதும் எந்த விருதும் தராமல் இருந்துவிட்டது நம் அரசு என்று நம் பத்திரிக்கைகள் எல்லாம் இப்போது புலம்புகின்றன. அதற்கு அவசியமே இல்லை, ஏனென்றால் ரசிகர்களின் நெஞ்சில் அவருக்கு இருக்கும் ஒரு அசையாத இடமே எல்லா விருதுக்கும் மேலானது.

நாகேஷ் நடித்து வெளிவந்த படங்களை நிறைய பார்த்திருக்கிறேன், நிறைய முறை பாத்திருக்கிறேன். என்னுடைய டாப் 10 இதோ:

1. காதலிக்க நேரமில்லை: எவ்வளவு முறை பார்த்தாலும் அலுக்காத ஒரு படம். இரட்டை அர்த்தம் மட்டுமே காமெடி என்று இப்போதிருக்கும் நிலையில் நம்முடைய திரையுலக படைப்பாளிகள் இது போன்ற ஒரு க்ளீன் காமெடியை முயற்சி செய்து பார்க்கலாம். படத்தில் பாலையாவுக்கு கதை சொல்லு ஒரு சீன் போதும். பிறகு சச்சுவுடன் ஆடும் அந்த ஆட்டம்! அடேங்கப்பா, பிரமாதம்.

2. ஊட்டி வரை உறவு: மறுபடியும் பாலையாவுடன் அட்டகாசமான காமெடி. இந்த முறை சிவாஜியும் சேர்ந்து அமர்க்களப்படுத்துவார். நாகேஷ் டாக்டராக வந்து, உடன் நர்சாக வரும் சச்சுவை "அலமேல், அலமேல்" என்று கூப்பிடுவதே தனி அழகு.

3. தில்லானா மோகனாம்பாள்: பெரும்பாலான ரசிகர்கள் நாகேஷ் முதன்முதலில் வில்லத்தனமான ரோலில் நடித்தது அபூர்வ சகோதரர்கள் என்று நினைப்பார்கள். நாகேஷின் தில்லானா மோகனாம்பாள் கதாபாத்திரம் [வைத்தி என்று ஞாபகம்] ஒரு அட்டகாசமான ரோல். சிவாஜியைப் போன்ற ஒரு உன்னதமான நடிகரையே நக்கல் செய்யும் அளவுக்கு "powerful role." அதை அநாயசமாக செய்திருப்பார்.

4. சர்வர் சுந்தரம்: மறக்க முடியாத படம், மறக்க முடியாத கதாபாத்திரம். அட்டகாசம் செய்திருப்பார். காமெடியுடன் உன்னதமான நடிப்பும் தனக்கு வரும் என்று நாகேஷ் நிரூபித்த படம். "அவளுக்கென்ன, அழகிய முகம்" என்ற அட்டகாசமான பாடலுக்கு நாகேஷ் பிரமாதமாக ஆடுவார்.

5. அன்பே வா: மறைந்த எம்.ஜி.ஆருடன் நாகேஷ் நடித்த நிறைய படங்கள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது, அன்பே வா. சிம்லாவில் எம்ஜிஆர் வீட்டை வாடகைக்கு விட்டு சம்பாத்தியம் செய்யும் போது, எம்ஜிஆருக்கே அந்த வீட்டை வாடகை விட்டு கேப்மாரித்தனம் செய்யும்போது எம்ஜிஆருடன் சேர்ந்து நாமும் சிரிப்போம்.

6. அபூர்வ சகோதரர்கள்: எப்போதுமே வித்தியாசமாக சிந்திக்கும் கமல்ஹாசன், இந்த படத்தில் நம்பியார் லெவலுக்கு நாகேஷை கொடுமையான வில்லனாக காண்பித்து ஒரு மிகப் பெரிய ரிஸ்க் எடுத்தார். ஆனால், நாகேஷின் அட்டகாசமான நடிப்பினால் அந்த ரோல் பல வருடங்களுக்கு பேசப்படும். ஸ்ரீவித்யாவிடம், "புடவைய உருவறதுல நான் மன்னன் தெரியுமா" என்பாரே அந்த ஒரு சீன் போதும்.

7.திருவிளையாடல்: தருமியாக வந்து சிவாஜியுடன் தகராறு செய்யும் சீன்கள் எல்லாமே அட்டகாசம். "ஏழையா பொறக்கவே கூடாதுப்பா" என்பாரே அந்த நடிப்பை எப்படி மறக்க முடியும்?

8.மைக்கேல் மதன காமராஜன்: கமல்ஹாசனின் பணத்தை கையாடல் செய்துவிட்டு, அவரிடம் உதார் விடும் இடங்கள் எல்லாமே சிரிப்புதான். அதிலும், காமேஸ்வரனாக வரும் கமலின் முதல் இரவில் உள்ளே புகுந்து கலாய்க்கும் சீன் அட்டகாசம் என்றால், ராவணன் எப்படி வீணை வாசிப்பார் என்று கமல் பாடி நடித்துக் காட்டும்போது , "நான் என் கஷ்டத்தைச் சொல்ல உங்ககிட்ட வந்தா, நீங்க என்ன சார் இவ்வளவு கர்ண கொடூரமா பாடுறீங்க" என்பது இன்னும் அமர்க்களம்.கிரேஸி மோகனின் வசனம் இந்த படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.

9. மேஜர் சந்திரகாந்த்: மிக சமீபத்தில்தான் இந்த படத்தை முழுமையாக ராஜ் டீவீயில் பார்த்தேன். முழுக்க, முழுக்க நாகேஷ் மட்டுமே தெரியும் இந்த படத்தில் மேஜர் சுந்தர ராஜன், ஜெயலலிதா ஆகியோரும் நடித்துள்ளனர். தன் தங்கையின் [ஜெயலலிதா] சாவுக்கு காரணமான சுந்தரராஜனின் மகனை [ஸ்ரீகாந்த் என நினைக்கிறேன்] கொன்று விட கொலைவெறியுடன் அலையும் நாகேஷின் நடிப்பு அட்டகாசம்.மிக வித்தியாசமான படம்.

10. மகளிர் மட்டும்: எந்த விதமான வசனமும் பேசாமல், விதவிதமான பாவனைகள் காட்டாமல், உறைந்து போன ஒரே முக பாவத்துடன் ஒரு பிணமாக பின்னி பெடலெடுதிருப்பார் நாகேஷ். இவர் வரும் நேரம் மிகவும் கம்மி என்றாலும் இந்த மாதிரியான ஒரு ரோலை, இவ்வளவு நன்றாக செய்ய நாகேஷால் மட்டுமே முடியும்.

நாகேஷின் இன்டர்வ்யூ ஹிந்து நாளிதழில் 2007 ம் வருடம் வந்தபோது , நாகேஷ் சொன்ன ஒரு விஷயம் அவர் நடிப்புக்கு அப்பாற்பட்டு ஒரு புத்திசாலி என்பதை நிரூபிக்கும். "“Life works on three premises — I don’t like something that you like, so you don’t like me. You don’t like something but I like it. Hence you don’t like me. You like something, which I also like a lot and there again you don’t like me. So anyway, there will always be people who dislike you. You just have to make your choices and move on.”

Comments

Unknown said…
அபூர்வ சகோதரர்களில் வில்லன் நடிப்பையும், மேஜர் சந்திரகாந்த்தில் வித்தியாசமான நடிப்பையும் சேர்த்ததில், நம்மவர் படத்தில் வந்த அட்டகாசமான நடிப்பையும் சேர்த்திருக்கலாம்.
Enil said…
மேஜர் சந்திரகாந்த் ஸ்ரீகாந்த் அல்ல Avm rajan

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...