ஆகஸ்டில் சிங்கப்பூரில் ஒரு "கொல்டி" ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றபோது இந்த அதிசய படம் கண்ணில் பட்டது. உடனே க்ளிக்கினேன். நெடிதுயர்ந்த உயரம். சிவனின் புலித்தோல் ஆடை, தலையில் பிறை, வலது கையில் சூலாயுதம் மற்றும் உடுக்கை, நடராஜரின் நாட்டிய நிலை, கழுத்தில் பின்னிக் கிடக்கும் நாகம், விஷ்ணுவின் சங்கு, சக்கரம், நெற்றியில் ஸ்ரீசூர்ணம், இடது கையில் ராமரின் வில், மற்ற இரு கைகளில் கிருஷ்ணரின் புல்லாங்குழல்... யாரு சாமி நீ? எங்கே இந்த மாதிரி வினோத கோலத்தில் இருக்கிறாய்? இந்த படத்திற்கு விளக்கம் சொல்ல அங்கு யாருக்கும் தெரியவில்லை. முதலாளி இல்லை. அவருக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம் என்று ஒருவர் யூகம் செய்தார்.
பரவாயில்லை. இப்போது நவம்பரில் போகும்போது கேட்டுவிடலாம் என இருக்கிறேன்.
Comments
This is kannan, Mr Murugan's co-brother's son ... Shocked to see the above. HERE IS THE SECRET REVELATION:
"பண்ணிரு தேவ சன்னதஙஙள் (தங்கள் திருக்கரங்களில் ரேகைகளாக) பெற்று வரும் அவதார மூர்தியே சிவன்" - வீரப்பிரம்மம்
மேலே னீஙகள் குறிப்பிட்டுளள உருவம், மிக அரிய தீர்க்க தரிசனம்.
உலகின் கடைசி காலத்தில் வரும் க்லகி ( Naaradha maha munivar - hinduism) ; மஹ்தி (Prophet Muhammad - islam);
கடைசி மெசையா (as told by - Deniel - judaism), இயேசுவின் இரண்டாம் வருகை (as told by -Jesus Christ);மைத்ரேய புத்தர் (as told by - Lord Buddha - buddhism);
வீரபோக வசந்தராயர் -சிவன் (as told by - veera brahmam - andhra); சாலை ஆண்டவர் (as told by - ramalinga vallalar - vadalur) - WILL BE HAVING THE ABOVE SAID தேவ சன்னதஙஙள் (explicitly in his hands)
1.உலகில் இதுவரை யாரும் பெறாத கில்னாமம் (தலையில் பிறை)
2. பூமி அதிரும் ஓசையை உடைய கடல் அரியாத திரு வலம்புரிச்சங்கு
3. ராமரின் கோதன்டம் (வில்)
4.பராஙுசம்
5.திருமுருகரின் வேல்
6.யமனின் பாசம்
7.உயிர் சக்கரம்
8.கவனக்குளிகை
9.திரிசூலாயுதம்
10. தன்டாயுதம்
11.மாயயை ஆய்ந்து மேந்துரங்கும் இருபுரமும் கருக்கேரிய பட்டயம்
12.துடிஉடுக்கை
இப்படிப்பட்ட ஏகநாயகன் என்னும் சர்வ சாட்சி வித்தாகிய சர்வேஸ்வரனால் முத்திரை அங்க சன்னதங்கள் பெற்றுள்ளவரர்கள் - மெய்வழி சாலை ஆண்டவர்கள் .
சாலை ஆண்டவர்கள் மார்க்கம்பட்டியில் பிறந்தவர்கள், துவக்கத்தில் சுமார் 24 ஆண்டுகள் கடுமையான தவமும், தம் வாழ்நாள் முழுவதிலும் சுமார் 72 ஆண்டுகள் கடுமையான தவமும் புரிந்து இதுவரை எவரும் அடையமுடியாத ஞானத்தின் எல்லையையும் அதைத்தாண்டி பண்ணிரு தேவ சன்னதஙகளையும் அடைந்தவர்கள். அதற்கு சாட்சியாக அவர்கள் இயற்றியுள்ள மிகவும் ஆழமான தமிழிலே ஆன வேதநூல்களும், அவற்றில் அவர்கள் விளக்கிய ஞானபோதனா மந்திரங்களும் சாட்சியாக விளங்குகின்றன. சுமார் 1901 (கலியுக முடிவு - 5000) லிருந்து சாலை ஆண்டவர்களால் உருவாக்கப்பெற்ற மெய்வழிச்சாலை, ஆண்டவர்கள் பூரணசமாதி அடைந்து இருப்பதால், ஆண்டவர்களால் நியமிக்கப்பெற்ற கமிட்டி உறுப்பினர்களால் நடத்தப்பெற்று வருகிறது.
மெய்வழி சாலை ஆண்டவர்கள் ஸ்தாபித்தருளிய மதச்சார்பினையுடைய மக்களே அடைந்து உய்யும் உய்கின்ற பெரும்பதப் பேரின்ப சாகாக்கலை பெற்றவர்கள் ஜீவப்பிரயாணம் ஆன தூல அடையாளம்:
உலகத்தில் செத்தவர்களுக்கு இறுதி நேரத்தில் தீட்டு என்று ஏற்படுகிற ஆணுக்கு சுக்கில ஜலமாகிய கசப்பு ஜலம் வெளியாகிப்பிண நாற்றம் எழும்புகிறதும் பெண்ணுக்கு சுரோணிதக் கசப்பு ஜலம் வெளியாகி பிண நாற்றம் எழும்புகிறதும் இல்லாமல் பரிசுத்தமாக மணத்துடன் இருப்பார்கள் சாகாக்கலை பெற்றவர்கள்.
ஜீவப்பிரயாணம் ஆன பின்னும் தேகத்தில் கேசாதி பாதம் வெத்துவென்று சூடிருக்கும். விறைத்து விறுவிறுப்பு ஏறாது. உரித்த வாழைத்தண்டை வெய்யிலில் போட்டால் எப்படி துவளுமோ ஆப்படியே கை கால் முதலிய அங்கங்கள் எல்லாம் துவண்டபடி இருக்கும்.
பாவக்கனம் ஏறாமல் தேகமானது பூக்கூடையைத் தூக்குவது போல இருக்கும்.
கை கால்களில் சொடுக்கு எடுத்தால் நெட்டி வரும்.
ஆண்டவர்களின் பாடல்களோ திருவாக்கியங்களோ திருநாமமோ ஜீவப்பிரயாணம் ஆன தூல பிம்பம் இருக்கும் எல்லையில் ஆரவாரத்துடன் ஒலிக்கப்பெறும் நேரங்களில் அவர்கள் மேனியில் துடைக்கத் துடைக்க வியர்வை மேலும் மேலும் கொப்பளிக்கும்.
வயோதிகமாய் உள்ளவர்கள் ஜீவப்பிரயாணமாகி நேரம் அதிகம் ஆக ஆக அவர்கள் முகத்தில் இளமை பூத்து பசுமஞ்சள் வர்ணம் உலாவும்.
பிராணன் நீங்கியவுடன் தொண்டை அடைத்துக்கொண்டு ஒரு சொட்டு ஜலம் கூட உள்ளே இறங்காதே அந்த அடையாளம் இல்லாமல் மெய்வழித் தெய்வமவர்களின் சன்னிதியில் இருந்து காஷாய தீர்த்தம் கொண்டுவரப்பெற்று கொடுத்தால் அதை சாப்பிடுவார்கள். ஒரு மாதம் சென்று கொடுத்தாலும் இக்காரியம் நடக்கிறது.
பிராணன் நீங்கும் முன் கூனிக்குறுகி இருந்தவர்கள் கால்கை வராமல் இருந்தாவர்கள் புண் முதலியவற்றால் துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தாவ்ர்கள் அத்தேகக் குறைகளும் நாற்றமும் நீங்கி சாகாக்கலையின் வைபவச்சிறப்புடையவர்களாக ஆகின்றார்கள்.
அடக்காமானபின் வெளியே நாற்பது நாட்கள் போட்டு வைத்திருந்தாலும் தேகம் கெடுவதில்லை. இது நாங்கள் நேரில் பார்த்த அடையாளம்.
மண்ணில் புதைத்தால் தேகத்தை மண்தீண்டாது. இவைதான் சாகாக்காலை பெற்றவர்களின் தூல அடையாளங்கள் . தேகத்தை மண் தீண்டாததிலும் மூவகை அடையாளங்கள் இருக்கும் என்று சன்னிதியில் வெளியாகியுள்ளது."
இத் தேவ அடையாளங்கள் ஆண்டவர்களின் வெறுப்புக்கு இலக்காகாமல் அவர்களின் நிகரற்ற கிருபையை இறுதி நேரம்வரு பெற்றவர்களுக்கே கைபலிதமாக நடந்து வருகிறது. இது சத்தியம்.