ஆகஸ்டில் சிங்கப்பூரில் ஒரு "கொல்டி" ரெஸ்டாரன்டில் சாப்பிட சென்றபோது இந்த அதிசய படம் கண்ணில் பட்டது. உடனே க்ளிக்கினேன். நெடிதுயர்ந்த உயரம். சிவனின் புலித்தோல் ஆடை, தலையில் பிறை, வலது கையில் சூலாயுதம் மற்றும் உடுக்கை, நடராஜரின் நாட்டிய நிலை, கழுத்தில் பின்னிக் கிடக்கும் நாகம், விஷ்ணுவின் சங்கு, சக்கரம், நெற்றியில் ஸ்ரீசூர்ணம், இடது கையில் ராமரின் வில், மற்ற இரு கைகளில் கிருஷ்ணரின் புல்லாங்குழல்... யாரு சாமி நீ? எங்கே இந்த மாதிரி வினோத கோலத்தில் இருக்கிறாய்? இந்த படத்திற்கு விளக்கம் சொல்ல அங்கு யாருக்கும் தெரியவில்லை. முதலாளி இல்லை. அவருக்கு ஒரு வேளை தெரிந்திருக்கலாம் என்று ஒருவர் யூகம் செய்தார். பரவாயில்லை. இப்போது நவம்பரில் போகும்போது கேட்டுவிடலாம் என இருக்கிறேன்.
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!