கிரிக்கெட் அரங்கில் மீண்டும் ஒருமுறை சாதனை மன்னனாக ஜொலித்தார் சச்சின். மொகாலி டெஸ்டில் தூள் கிளப்பிய இவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார்.
முதலில் லாராவின் உலக சாதனையை முறியடித்த சச்சின் பின்னர், அதே வேகத்தில் மற்றொரு மைல்கல்லையும் எட்டினார்; 12,000 ரன்கள் குவித்து, 12,000 ரன்களை கடந்த முதல் சாதனையையும் எட்டினார்.
உலக சாதனை படைத்து உற்சாகத்தில் இருக்கும் சச்சின், விமர்சகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். தன் மீது எறிந்த கற்களை மைல்கற்களாக மாற்றியிருப்பதாக கூறியுள்ளார்.இது குறித்து சச்சின் கூறியது:
எனக்கு சாதனைகள் முக்கியமல்ல. ஆனாலும் என்னை சந்திப்பவர்கள் எல்லாம் சாதனையை பற்றி தான் நினைவுபடுத்தினர். லாராவின் சாதனையை முறியடிக்க 15 ரன் தான் வேண்டும் என்பது எனக்கும் தெரியும். இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மிகுந்த கவனத்துடன் ஆடினேன். டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்தது, எனது 19 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையின் மிகப் பெரும் சாதனையாக அமைந்தது. இது ஒரேஇரவில் நடக்கவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஏற்றம், இறங்கங்களை சந்தித்துள்ளேன். என்னை நோக்கி விமர்சன கற்களை எறிந்துள்ளனர். இதனை தற்போது மைல்கற்களாக மாற்றி காட்டியுள்ளேன். சாதனைகள் முறியடிப்பதற்கு தான். நான் 16 வயது இளம் வீரராக கிரிக்கெட்டில் காலடி எடுத்த வைத்த போது சாதனை பற்றி நினைக்கவில்லை. எந்த இலக்கையும் நிர்ணயித்துக் கொள்ளவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது.
சாதனை பற்றி எண்ணாமல் இன்னொரு 16 வயது வீரர் கூட அறிமுகமாகலாம். சவுரவ் கங்குலியும் நானும் நிலைத்து நின்று விளையாட முடிவு செய்தோம். இரண்டாம் நாள் தொடர்ந்து விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் 88 ரன்களில் அவுட்டானது மிகுந்த ஏமாற்றம் அளித்தது. இவ்வாறு சச்சின் கூறினார்.
இந்த வலைப் பதிவின் தலைப்பு சொல்வது போல இந்தியாவில் பெரும்பாலான ரசிகர்களுக்கு கிரிக்கெட்தான் மதம், சச்சின்தான் கடவுள். இந்த உலக சாதனை படைத்த சச்சினால் இந்தியாவுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் மகத்தான பெருமை.
Sachin, We Salute You!
எதிர்காலத்தில் இந்த சாதனை ரிக்கி பாண்டிங் என்ற குரங்கினால் முறியடிக்கப்படலாம், ஆனால், சச்சினின் இந்த சாதனை நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய ஒன்று.
with inputs from dinamalar.com
Comments