ஆங்கிலத்தில் நிறையவே hi-tech படங்களைப் பார்த்தாயிற்று. ஆனாலும் நடுநடுவே சில அதி அற்புதமான படங்கள் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
2004 இல் நான் பார்த்து வியந்த இந்த மாதிரியான futuristic hi-tech thriller "The Day After" என்ற படம். ஆங்கிலப் படங்களில் கதையும், கதைக் களமும்தான் ராஜா. கதாநாயகன்/நாயகி எல்லோரும் அப்புறம்தான். கதைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய சித்தமாக இருக்கிறார்கள்.
"The Day After" படத்தில் உலக நாடுகள் எவ்வாறு இயற்கையை உதாசீனம் (neglect) செய்கின்றன, அதனால் என்னவெல்லாம் நடக்கலாம் என்று நம்மை பயப்பட வைக்கும் ஒரு உன்னதமான sci-fi thriller.
இதற்கு பிறகு இப்போது சமீபத்தில் பார்த்த "I am Legend" படத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
தீடிரென்று ஒரு நாள் காலை சென்னை மாநகரிலேயே நீங்கள் மட்டுதான் உயிரோடு இருக்கிறீர்கள். உங்கள் துணைக்கு போனால் போகிறதென்று உங்கள் நாய் மட்டும் கூட இருக்கிறது. ஊரெங்கும் உங்கள் காரில் சுற்றுகிறீர்கள், யாருமே உயிரோடு இல்லை, தெருக்கள் வெறிச்சோடி கிடக்கின்றன, கார்கள், லாரிகள், பஸ்கள் எல்லாம் அனாதையாக நிற்கின்றன. கடைகள் திறந்து கிடக்கின்றன. உங்களிடம் இருக்கும் வயர்லெஸ் கருவி மூலம் யாரவது பதில் அளிக்கிறார்களா என்று தினமும் முயற்சி செய்கிறீர்கள், பலன் இல்லை. உலகிலேயே நீங்கள் ஒருவர்தான் உயிரோடு இருக்கிறீர்களோ என உங்களுக்கு சந்தேகம்/பயம் வந்து அல்லாடுகிறீர்கள்.
தெருவில் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு மான் கூட்டம் ஓடுகிறது. சரி, அடித்து ஒன்றை வீட்டுக்கு எடுத்து போய் சமைத்து சாப்பிடலாம் என்று நினைத்து துப்பாகியால் ஒரு மானை குறி பார்க்கும்போது, திடீரென ஒரு சிங்கம் எகிறி குதித்து அந்த மானைக் கடித்து குதறுகிறது.
மாலை நேரத்தில் வீட்டுக்கு சென்று, அத்தனை கதவுகளையும் சாத்திக்கொண்டு பயத்தோடு நாயுடன் தூங்குகிறீர்கள், ஏன்? இங்கேதான் வருகிறது ஆச்சரிய கொக்கி!
ஒரு மிகக் கொடூரமான வைரஸ் தாக்கி உலகமே சுடுகாடாகி விடுகிறது. ஆனால் நீங்கள் மட்டும் சாகவில்லை, எப்படி? அப்படி என்ன special சக்தி உங்களிடம்? மாலை ஆனால் ஏன் பயப்பட வேண்டும்? ஆச்சரியமான, ஆனால் நம்பத்தகுந்த பதில்களுடன் வந்திருக்கிறது இந்த படம்.
வில் ஸ்மித் (Will Smith) என்ற Super Star நடித்த இந்த படம், உலகெங்கிலும் போனமாதம் ஒரே நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரே ஒரு மனிதனை மட்டும் படம் முழுவதும் காட்ட அசாத்திய தைரியம் வேண்டும், இந்த பட இயக்குனருக்கு அது இருக்கிறது. இப்படியெல்லாம் கூட புதுமையாய் படம் எடுக்க முடியுமா என நாம் ஆச்சரியத்தில் ரசிக்கும் போதே படம் சட்டென முடிகிறது.
அமர்களமான இசை, வில் ஸ்மித்தின் அலட்டல் இல்லாத, இயல்பான நடிப்பு, வெறிச்சோடி இருக்கும் New York நகரம் தான் கதைக் களம்.
வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல "ஒக்காந்து யோசிப்பாயிங்களோ!" மறக்க முடியாத ஒரு அருமையான படம்.
Comments