என்னுடைய வேண்டுகோளை ஏற்று குடும்பத்துடன் இன்று (30/12/07) Hotel Breeze க்கு வருகை தந்த நம் "ரம்யா" நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றி. ஷங்கர் வர முடியாத காரணத்தால் என் சிங்கப்பூர் பயணத்தின் போது ரவி மற்றும் ஷங்கர் குடும்பத்துடன் ஒரு மாலைப் பொழுது "ராஜ்" என்ற பெங்காலி ரெஸ்டாரன்ட்டில் 24 Dec அன்று நன்றாக கழிந்தது. பிறகு இன்று Breeze Hotel களைகட்டியது. குமார், செழியன், பாண்டியன் மற்றும் முருகன் தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியாமல் போனது வருத்தம் என்றாலும், மற்ற அனைவரும் வந்து சேர்ந்தது ஒரு மிக மகிழ்ச்சியான விஷயம். நம்முடைய மனைவியர் நிறைய பேர் ஒருவருடன் ஒருவர் அறிமுகமே இல்லாமல் இருந்தாலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் உடனே பழக ஆரம்பித்தது மிகவும் ஒரு நல்ல விஷயம். குழந்தைகளும் அப்படியே. ஸ்ரீதர் நேற்று என்னுடன் அலைபேசி மூலம் குறுஞ்செய்தி (SMS) அனுப்பி மும்பையில் இருப்பதாகவும் முடிந்தால் கலந்து கொள்வதாக சொல்லி இருந்ததால் என்னுடைய எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. பிறகு ஒரு sweet surprise ஆக அவன் குடும்பத்துடன் கலந்து கொண்டான். குஞ்சிதபாதம், Berger ரவி,...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!