(இந்த அருமையான சந்திப்பை காமிரா இல்லாமல் நடத்தியதால் பழைய படங்களை இங்கே கொடுத்திருக்கிறேன்.)
நண்பன் குமார் வெகு நாட்களுக்குப் பிற்கு இந்தியா வந்திருப்பதால், நண்பர்களுடன் ஒரு சந்திப்பு ரெசிடன்சி ஹோட்டலில் நடந்தது. நண்பர்கள் நாலு பேர் வெகு நாட்களுக்குப் பிற்கு ஒன்று சேர்ந்தால் மனம் விட்ட பேச எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். துரதிருஷ்டவசமாக இவ்வளவு பெரிய சென்னை மாநகரில் அதெற்கென ஒரு அமைதியான இடம் இல்லை.விதிவிலக்கில்லாமல் ரெசிடன்சி ஹோட்டலிலும் திடும் திடும் என அதிர்ந்திடும் காட்டுக் கத்தலான ஆங்கில இசை போட்டு வெறுப்படிக்கவே, அனைவரும் சட்டென சிறிது நேரத்திலேயே வெளியேறினோம்.
பிற்கு குமாரின் வேண்டுகோளின் பேரில் ப்ரில்லியண்ட் டுடோரியல்ஸ் வாசலில் உள்ள கையேந்தி பவனுக்கு சென்றோம். குமார், ஷங்கர், சாயீ,நரசிம்மன், ரவி, முருகன், செழியன், நான் என எல்லோருமே ஏறக்குறைய ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகும்,பாசாங்கு ஏதும் இல்லாத நட்பு மட்டுமே இதைப் போன்ற சந்திப்புகளுக்கு வழிவகுக்க முடிகிறது.
நைஜீரியாவிலிருந்து வந்திருக்கும் குமாரும், GRT Grand போன்ற பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கும் ஷங்கரும் மற்ற எல்லா நண்பர்களும் எந்த வசதியும் இல்லாத இதைப் போன்ற கையேந்தி பவன்களில் சாப்பிட ஒத்துக் கொள்வதின் முக்கிய காரணம், அதிலிருக்கும் ஒரு த்ரில் மட்டுமில்லை, எந்த இடமாக இருந்தாலும் நண்பர்கள் ஒன்றாக இருந்தால் அசௌகரியங்கள் பெரிதாகத் தெரியாது என்பதுதான்.
இந்த அருமையான சந்திப்பை miss செய்த ராஜ்குமார், ஸ்ரீதர், குஞ்சிதபாதம் ஆகியோருக்கு இந்த blog message உதவும் என நம்புகிறேன்.
-விழுப்புரத்திலிருந்து பஸ் பிடித்து லொங்கு லொங்குவென்று ஓடி வந்த நண்பன் முருகனுக்கு special நன்றி.
-எல்லா சந்திப்புக்கும், by default absent ஆகும் செழியன் இதில் கலந்துகொண்டு எங்கள் எல்லோரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க வைத்ததற்கு தேங்க்ஸ் ஒ தேங்க்ஸ்!
-பாங்காக் சென்று மூன்று மாதம் இருந்து பிஸினஸ்(!!!) வளர்க்கப் போகும் சாயீ சத்தியனுக்கு வாழ்த்துக்கள்! (பாங்காக் வாசிகளே உஷார்!)
-எல்லோருக்கும் நிலா தோசை ஊட்டிய நரசிம்மனுக்கு நன்றி!
-நிறைய "நல்ல" பழக்கங்களை விட்டுவிட்டாலும் எங்களுக்காக பொறுமையுடன் கூடவே இருந்த சத்புருஷர் ரவிக்கு மனமார்ந்த (வேறென்ன?) நன்றி!
-அடுத்த மாதம் என்னுடைய பாலி (இந்தோனேசியா) பயணத்தில் என்னை சந்திக்க முடிவு செய்திருக்கும் ஷங்கருக்கு, "தேங்க்ஸ் மாப்பிளே, பாலி கலங்கப்போகுது!"
-சிங்கப்பூர் ரவி, என்னப்பா நீயும் பாலி வர ஏற்பாடு செஞ்சாச்சா?
நண்பர்கள் எங்கே இருந்தாலும் நட்பு மட்டும் ஒரே இடத்தில்தான் இருக்கும்! சந்திப்போம் மறுபடியும்.
Comments
natpirku nandri etharku?
Sridhar How do I post my comment in Tamil. Please help. It should not be difficult for reading a tamil verse in english.
கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.
சத்புருசக்ர் என்ற பெரிய பெயர எல்லாம் எனக்கு வேண்டாம் . உங்கள் நட்பை மதித்து தன் நான் வந்தேன் . ரம்யா அரம்பதிலேருந்து இருக்கும் நண்பன் என்ற பெயரில் என்றும் சென்னைஎல் எந்த ஒரு சந்திப்பு நடந்தாலும் நான் கடையம் சேந்து உங்கள் நட்பில் களிப்பேன் .
நட்பிற்கு நன்றி எதற்கு?
http://www.google.com/transliterate/indic/Tamil
ரவி இந்த இணைய தளத்திற்கு சென்று நீ மேல எழுதியதை அப்படியே தட்டவும், அவ்வளவு தான், நீ நினைத்ததை கொட்டி விடலாம்.
நன்றி, மீண்டும் சந்திப்போம்.
சத்புருஷர் என்ற பெரிய பெயர எல்லாம் எனக்கு வேண்டாம் . உங்கள் நட்பை மதித்து தான் நான் வந்தேன் . ரம்யா ஆரம்பதிலேருந்து இருக்கும் நண்பன் என்ற பெயரில் என்றும் சென்னையில் எந்த ஒரு சந்திப்பு நடந்தாலும் நான் கட்டாயம் சேந்து உங்கள் நட்பில் களிப்பேன் .
நட்பிற்கு நன்றி எதற்கு?
ரவி (சிங்கப்பூர்): Berger ரவியின் கருத்துக்களை தமிழில் மொழிபெயர்த்ததற்கு நன்றி. சில சிறிய தவறுகளைக் களைந்து, மறுபடியும் தந்துள்ளேன்
vasu