Skip to main content

Posts

Showing posts from July, 2016
சிலை சிலையாம் காரணமாம் - 1:  கடல் தாண்டி விரியும் கடத்தல் வலை... 2011 அக்டோபர் 30... பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் (Frankfurt) பன் னாட்டு விமான நிலையம். இன்னும் சற்று நேரத்தில் அங்கிருந்து நியூ யார்க் புறப்படுவதற்காக, முதலா வது ஓடுதளத்தில் தன்னை ஆயத் தப்படுத்திக் கொண்டிருக்கிறது யுனை டெட் ஏர்லைன்ஸ் விமானம். அதில் பயணிக்கக் காத்திருக்கும் பயணி களுக்கு இமிக்ரேஷன் சடங்குகளை முடிப்பதற்காக அவசரகதியில் இயங் கிக் கொண்டிருக்கிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். ஆண்டுக்கணக்கில் கூண்டுக்குள் சிக்க வைக்கப் போகும் ஆபத்து தன்னை நெருங்கிக் கொண்டிருப்பது தெரியா மல், 60 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவர் கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென பரபரப்பாகிறது விமான நிலையம். வந்திருப்பது சர்வதேச போலீஸான ‘இன்டர்போல்’ என்றதும் வணக்கம் வைத்து வழிவிடுகிறார்கள் விமான நிலைய அதிகாரிகள். அடுத்த சில நிமிடங் களில் ‘இன்டர்போல்’ (Interpol) வாகனத்தில் இறுக்கமான முகத்துடன் பயணித் துக் கொண்டிருந்தார் சுபாஷ் சந்திர கபூர் என்ற அந்தப் பெரியவர். சுபாஷ் சந்திர ...