கடந்த 27
வருடங்களாக வருடம் தவறாமல் இங்கு செல்கிறேன். கடந்த வருடம் குறிப்பட்டது
போல புத்தகம் வாங்குவது இப்போது மிக எளிதாகி விட்டது. எல்லோருமே ஆன்-லைன்
வசதிக்கு வந்து விட்டதால் நமக்கு அலைச்சல் /பெட்ரோல் செலவு மிச்சம்.
ஆன்-லைன் என்றதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அமேசான்/ப்லிப்கார்ட் போன்ற ஆன்-லைன் நிறுவனங்கள் 48-60 மணிக்குள் புத்தகங்களை
வீட்டில் சேர்த்துவிடுகின்றன. "Pay on delivery " என்ற வசதி வேறு.
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த டிஸ்கவரி புக் பாலஸில் சில புத்தகங்களை
ஆன்-லைனில் ஆர்டர் செய்து நெட்-பேங்கிங் மூலம் பணமும் செலுத்தியாகிவிட்டது.
இது நடந்தது ஜனவரி 2-ம் தேதியன்று. இன்று தேதி 17. 15 நாட்களுக்கு பிறகும்
டெலிவரி செய்யவில்லை. புத்தக் கண்காட்சியில் இவர்களது ஸ்டாலை பார்த்தவுடன்
உள்ளே நுழைந்து சண்டை போடலாம் என்று நினைத்தேன். பிறகு, வேண்டாம் பொது
இடத்தில எதற்கு என்று விட்டுவிட்டேன்.
முதல் சுற்றில் வாங்கிய புத்தகங்கள்:
- வெக்கை - பூமணி
- 18 வது அட்சக் கோடு -அசோகமித்திரன்
- சீரோ டிகிரி- சாரு நிவேதிதா
- பிகாசோவின் கோடுகள்-எஸ்.ராமகிருஷ்ணன்
- அயல் சினிமா-எஸ்.ராமகிருஷ்ணன்
- நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
- க்ரியா - தமிழ் அகராதி
- கொக்கோகம் - அதிவீரராம பாண்டியன்
மேற்குறிப்பிட்ட
நூல்களில், பூமணி, அசோகமித்திரன், ஜி.நாகராஜன் போன்றோரின் குறிப்பிட்ட
படைப்புகள் தலைவர் சுஜாதாவால் பரிந்துரைக்கப்பட்டவை.
கொக்கோகம் நூலைப்
பற்றி சுஜாதா பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். சரி அப்படி என்னதான்
இருக்கிறது என்று பார்க்கலாம் என வாங்கிவிட்டேன்.
இரண்டாவது சுற்று, வரும் சனியன்று.
புத்தக விமர்சனங்களை அதி விரைவில் எதிர்பார்க்கலாம்.
Comments