Skip to main content

Posts

Showing posts from 2014

புத்திசாலி விஜய சேதுபதி !!

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ச்சியாக 4 பம்பர் ஹிட் கொடுத்து டோட்ல் கோடம்பாக்கத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருப்பவர் விஜய்சேதுபதி. வில்லன்களுடன் மோதல் இல்லை, நடிகைகளுடன் கட்டிப்புடி சண்டையில்லை, தேவையில்லாத பில்டப் இல்லை.ஆனால் நானும் ஹீரோதான் என்று சொல்லும் விஜயசேதுபதி, ஒரு வித்தியாசமான சேதுபதிதான். தினமலர் இணையதளத்துக்காக அவருடன் நடத்திய உரையாடல் இதோ... * தொடர் வெற்றிக்கு பின்னால் விஜயசேதுபதியின் நிலை என்ன? கூத்துப்பட்டறையில் இருந்து சினிமாவில் நடிக்க சான்ஸ் கேட்டு அலைந்தபோது, ஒரு சிறிய கேரக்டர் கிடைக்காதா என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் நான் ஹீரோ ஆவேன் என்று நினைத்தே பார்த்ததில்லை. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் என்னையும் ஹீரோவாக்கினார் சீனுராமசாமி சார். தேசிய விருது பெற்ற ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமானது பெருமையாக இருந்தது. அதன்பிறகு நான் கமிட்டான படம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். அதன்பிறகு பீட்சா. இந்த படங்களில் நடித்தபோது பெரிய எதிர்பார்ப்பில்லை. ஆனால் வித...

பிணந்தின்னிக் கழுகுகள்

சுழல் காற்றில் சருகுகள் பறக்கிறதோ எனக் கவனித்துப் பார்த்தால் அத்தனையும் பட்டாம்பூச்சிகள், வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் நாளில், கிழக்கு தொடர்ச்சி மலை ஆசனூர் பகுதிகளிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை ஆனைகட்டி வரை பட்டாம்பூச்சிகள் வலசை போய்க் கொண்டிருந்தன. எங்கள் கலைப் பிரச்சார வாகனம் மிதமான வேகத்தில் தளமலையை அடைந்தது. தமிழகத்தில் அருகி வரும் ‘பாறு’ வகையைச் சேர்ந்த வெண்முதுகுப் பாறு (White-backed Vulture), நீண்ட அலகுப் பாறு (Long billed Vulture ), செந்தலைப் பாறு (Red headed Vulture), மஞ்சள் திருடிக் கழுகு (Egyptian Vulture) ஆகிய ஊனுண்ணிக் கழுகுகளின் வாழ்க்கையை, அவை வாழ வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தப் பயணித்துக்கொண்டிருந்தோம். பாறுகள் வாழும் பகுதியில் வசிக்கும் மக்களைச் சந்தித்துக் கழுகுகள் சந்தித்து வரும் அழிவை இயல், இசை, நாடக வடிவில் விளக்கினோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரமாயிரமாய் வனங்களில் வட்டமடித்த பாறுகள், இன்றைக்கு நூற்றி ஐம்பதுக்குள் எண்ணிக்கை சரிந்து போனதைக் குறிப்பிட்டபோது மக்களின் கவலை தோய்ந்த முகங்களைக் காண முடிந்தது. கிராமங்கள்தோறும் ஆயிரக்கணக்கில் க...

சென்னை புத்தகக் கண்காட்சி 2014-ம் தலைவர் சுஜாதா பரிந்துரைத்த கொக்கோகம் புத்தகமும் :

கடந்த 27 வருடங்களாக வருடம் தவறாமல் இங்கு செல்கிறேன். கடந்த வருடம் குறிப்பட்டது போல புத்தகம் வாங்குவது இப்போது மிக எளிதாகி விட்டது. எல்லோருமே ஆன்-லைன் வசதிக்கு வந்து விட்டதால் நமக்கு அலைச்சல் /பெட்ரோல் செலவு மிச்சம். ஆன்-லைன் என்றதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அமேசான்/ப்லிப்கார்ட் போன்ற ஆன்-லைன் நிறுவனங்கள் 48-60 மணிக்குள் புத்தகங்களை வீட்டில் சேர்த்துவிடுகின்றன. "Pay on delivery " என்ற வசதி வேறு.    சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த டிஸ்கவரி புக் பாலஸில் சில புத்தகங்களை ஆன்-லைனில் ஆர்டர் செய்து நெட்-பேங்கிங் மூலம் பணமும் செலுத்தியாகிவிட்டது. இது நடந்தது ஜனவரி 2-ம் தேதியன்று. இன்று தேதி 17. 15 நாட்களுக்கு பிறகும் டெலிவரி செய்யவில்லை. புத்தக் கண்காட்சியில் இவர்களது ஸ்டாலை பார்த்தவுடன் உள்ளே நுழைந்து சண்டை போடலாம் என்று நினைத்தேன். பிறகு, வேண்டாம் பொது இடத்தில எதற்கு என்று விட்டுவிட்டேன். முதல் சுற்றில் வாங்கிய புத்தகங்கள்: வெக்கை - பூமணி 18 வது அட்சக் கோடு -அசோகமித்திரன் சீரோ டிகிரி- சாரு நிவேதிதா பிகாசோவின் கோடுகள்-எஸ்.ராமகிருஷ்ணன் அயல் சினிமா...

அன்பு பொங்க, ஆனந்தம் பொங்க, இனிமை பொங்க, என்றென்றும் உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்க, மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள் !!

நாடறிந்த நம்மாழ்வாரை நாம் அறிவோமா ???

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் சமீபத்தில் காலமானார். அவரைப் பற்றி சில சுவையான, நாம் அதிகம் அறியாத செய்திகள்:  #லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம்பற்றிக் களமிறங்கிக் கற்றுக்கொண்டது பாண்டிச்சேரி ஆரோவில்லில் இருக்கும் பெர்னார்டுவிடம்தான். மேற்கத்திய நாடுகளின் விவசாய முறைகள், அங்குள்ள இயற்கை விவசாயம்குறித்த நிறைய புத்தகங்களை நம்மாழ்வாருக்கு அறிமுகம்செய்து வைத்தவரும் இவரே. #பாரம்பரிய விதை ரகங்களை அதிகம் நேசித்தவர் நம்மாழ்வார். அதைப் பற்றிப் பேச்சு வரும்போதெல்லாம், மத்திய நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநராக இருந்த ராதேலால் ஹெர்லால் ரிச்சார்யாவைக் குறிப்பிட்டுப் பேசுவார். ரிச்சார்யா இந்தியாவின் 22,972 பாரம்பரிய நெல் ரகங்களை வெளிநாடுகள் கைக்குச் செல்லாமல் பாதுகாத்தவர். அதனாலேயே தனது பணியையும் இழந்தவர். ரிச்சார்யா மற்றும் இயற்கை விஞ்ஞானிகளின் கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அத்தனை பாரம்பரிய நெல் ரகங்களையும் பன்னாட்டு நிறுவனமான ஸின்ஜெண்டாவிடம் 2003-ல் அரசு ஒப்படைத்தபோது, கண்ணீர்விட்டு அழுதார் நம்மாழ்வார். #நம்மாழ்வாரை அதிகம் ஈர்த்தவை...

எகிப்து எங்கே செல்கிறது? - நன்றி: தமிழ் இந்து

பிரமாண்டமான பிரமிடுகள் முன் நின்றுகொண்டிருந்தேன். பழைய உலகின் ஏழு அதிசயங்களில் இன்று வரை அழியாமல் இருப்பது பிரமிடுகள் மட்டும்தான். ஏசு பிறப்பதற்கு 2,500 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டவை. சிந்துச் சமவெளி நாகரிகத்துக்குக் கிட்டத்தட்ட சமகாலத்தியவை. இந்த நாகரிகத்தின் குழந்தைகளாகத்தான் இன்றைய எகிப்தியர்களில் பெரும்பாலானோர் தங்களைக் காண்கிறார்கள். நாங்கள் மதத்தால் இஸ்லாமியர். ஆனால், பிரமிடுகளும் எங்கள் கலாச்சாரத்தின் முக்கியமான அங்கம் என்று அவர்கள் சொல்கிறார்கள். 2008-ல் எகிப்து சென்றிருந்தபோது திரும்பிய இடமெல்லாம் சுற்றுலாப் பயணிகள். பிரமிடுகளைச் சுற்றிலும் நெருக்கி நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள். இப்போதோ பிரமிடுகள் வெறிச்சோடியிருந்தன. பயணிகளை விட சில்லறைப் பொருள்களை விற்பனை செய்பவர்கள் அதிகமாக இருந்தார்கள். பேரம்பேசினால் கையில் இருப்பவற்றை எல்லாம் ஒரு டாலருக்குக் கொடுத்துவிட்டு ஓடிவிடுவார்கள் என்று தோன்றியது. எகிப்து முழுவதும் இந்த நிலைமைதான் என்று தெற்கில் இருக்கும் அரசர்களின் பள்ளத்தாக்கைப் பார்த்துவிட்டு வந்திருந்த நண்பர் ஒருவர் சொன்னார். அவர் இருந்த நட்சத்திர ஓட்டலில் 200...
வலையுலக நண்பர்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த (சற்றே தாமதமான) புத்தாண்டு வாழ்த்துக்கள்