Skip to main content

Posts

Showing posts from December, 2013

சுஜாதாவும் கமலும் - ஒரு சுவையான உரையாடல் - நன்றி: "உலக சினிமா ரசிகன்" வலைப் பதிவு

எண்பதுகளில் [ 1980s ] திரைக்கதிர் என்றொரு பத்திரிக்கை வந்து கொண்டிருந்தது. அப்பத்திரிக்கைக்காக பெங்களூரிலிருந்து வந்த சுஜாதாவும்...  ‘வறுமையின் நிறம் சிவப்பு ’ பட சூட்டிங் முடித்து வந்த கமலும் சந்தித்து உரையாடி இருக்கிறார்கள். அன்று அவர்கள் நடத்திய விவாதம் இன்றும் பொருந்தி வருகிறது. அதிலிருந்து சில தேன் துளிகள்... சுஜாதா :   நான்  'இஸட்'ன்னு  ஒரு பிரெஞ்ச் பிலிம் சமீபத்தில் பார்த்தேன். [ Z \ 1969 \ French \ Directed by : Costa - Gavras ] அரசியலை மையமா வைச்சிகிட்டு ரொம்ப பிரமாதமா எடுத்திருக்காங்க. தமிழ்ல ஏன் அரசியலை சம்பந்தப்படுத்தி படம் பண்ண மாட்டேங்கறீங்க ? கமல் : உங்களுடைய ‘24 ரூபாய் தீவை’ ‘யாரோ பார்க்கிறார்கள்’ என்கிற பெயரில் படமா எடுக்க நினைச்சோம். முடியல. பண்ண முடியாத சூழ்நிலை இருக்கு. யெஸ்....இட் வாஸ் டினைட் [ Yes..It was denied ]. தீடிர்னு அந்தப்படத்தை தடை பண்ணிட்டாங்கன்னா...  டிஸ்டிரிபியூட்டர் மாட்டிக்குவாங்க. வட்டிக்கு வாங்கி படமெடுக்குற புரொடியூசர் காலி. அரசியலை மையமா வைச்சு இங்கே படமெடுக்குறது கஷ்டம். சுஜாதா : ரொம்ப பேர்...

தஞ்சை பெரிய கோயிலில் ‘புதைந்திருக்கும்’ மணல் ரகசியம்: வல்லுநர்கள் புதிய தகவல் - நன்றி: தமிழ் இந்து

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கீழே இரு மடங்கு சுமை பெரிய கோயில் வடிவமைப்பையும் அதன் தரைப்பகுதியையும் சில ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு செய்தோம். அதில் கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. அதாவது, தரையின் மேற்பகுதியில் இருக்கும் கல்லால் ஆன கோயில் கட்டுமானத்தைவிட இரு மடங்கு சுமை கீழே இருக்க வேண்டும். அதன்படி இயற்கையாக அங்கிருந்த சுக்கான் பாறையை தொட்...

நேரு – பட்டேல் விரிசல்: என்ன நடந்தது? - -நன்றி: தமிழ் இந்து

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த புருஷோத்தமதாஸ் டாண்டனின் (Tandon) தாடி எவ்வளவு பிரசித்தமோ அவ்வளவுக்கு அவரது நேர்மையும் சுதந்திரச் சிந்தனையும் பிரசித்தம். ஓர் ஆண்டுக்கு முன்னதாகவே அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு ஆந்திரத்தைச் சேர்ந்த பட்டாபி சீதாராமய்யாவால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். இப்போது டாண்டன் மீண்டும் தலைவர் பதவி ஏற்கத் தாம் தயாராக இருப்பதை அறிவித்தார். பட்டேல் டாண்டனை ஆதரித்தார். ஆனால், நேருவோ டாண்டனைப் பழங்கால ஆசாமி என்றும் தீவிர ஹிந்து என்றும் கருதினார். தமது எதிர்ப்பை அவர் ஒளிக்கவில்லை. பட்டேல் – டாண்டன் இணைப்பு தமது அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் என்று நேரு கருதியிருப்பார் என்பதிலும் சந்தேகமில்லை. வழிக்குக் கொண்டுவர என்ன வழி? டாண்டனை வாபஸ் பெற வைக்க வேண்டும்; இதற்கு என்ன வழி என்று தேடியபோது நேருவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு ஸி.ஆரை அவர் கேட்டார். ஆனால், ஸி.ஆர். அதற்கு இணங்கவில்லை. இந்திய ஜனநாயகத்தின் ஆட்சித் தலைவர் என்ற நிலையிலிருந்து கட்சித் தலைவர் என்ற நிலைக்குக் குதிப்பது அவருக்கு அவ்வள...

எம்.ஜி.ஆர் நினைவுகள் - டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாள்

பொதுவாக அந்தக் காலத்து சினிமா ரசிகர்களிடம், குறிப்பாகப் பெண்களிடம், எம்.ஜி.ஆரைப் பற்றிய விமர்சனம் இருந்தது. “பாரேன்.. அழற சீன் வந்தா எம்ஜியார் முகத்தைப் பொத்திக்குவார். ஏன்னா அவரால சிவாஜி மாதிரி அழ முடியாது” என்று சொல்வதை நம்மில் பலர் கேட்டிருக்கிறோம். இயல்பு வாழ்க்கையில்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு மிகை நடிப்புடன், வித விதமான அழுகைகளைப் பார்த்த ரசிகக் கண்களுக்கு எம்.ஜி.ஆர். நடிப்பு ஒவ்வாதுதான். உலகில் எல்லோரும் ஒரே மாதிரியாக அழுகிறார்களா என்ன? நாடகப் பின்புலம் கொண்டவர் என்றாலும் தனது முதல் இயக்குநர் எல்லீஸ்.ஆர்.டங்கன் என்ற அமெரிக்கராய் அமைந்ததாலோ என்னவோ எம்.ஜி.ஆரின் பெரும்பாலான திரைப்படங்களில் அவரிடம் அதீதமான முகபாவனைகளும் விசித்திரமான உடல்மொழிகளும் குறைவாகவேக் காணப்பட்டன (பாடல் காட்சிகளிலும் பிற்காலத்திய படங்களிலும் அவரது நடிப்பில் வேடிக்கையான பாவனைகள் அமைந்தது வேறு கதை). எம்.ஜி.ஆர். நடிப்பில் மிகக் குறைவான கவனம் பெற்றது அவரது அடக்கிவாசிக்கும் (under play) நடிப்பு. பல காட்சிகளை உதாரணமாகக் கூறலாம். மந்திரி குமாரி படத்தில் “எனக்காகப் பேச இங்கு யாருமே இல்லையா?” என்று குமுற...

ஆகாயத்தில் ஓர் ஆலயம் - நன்றி: தமிழ் இந்து

பர்வதகிரி என்றும் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படும் இந்த மலை திருவண்ணாமலையிலிருந்து 37 கி.மீ. தூரத்திலும், போளூரிலிருந்து 22 கி.மீ. தூரத்திலும் உள்ளது. செங்கம் செல்லும் சாலையில் தென்மாதி மங்கலத்திலிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் மலையை நோக்கிப் பயணித்தால் முதலில் வருவது பச்சையம்மன் கோவில். சப்த முனிகள் கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சி நம் கண்களையும் மனதையும் நிறைக்கின்றது. பச்சையம்மன் ஆலயத்தின் உள்ளே சென்றால் மிகுந்த தேஜஸோடு பச்சை நிறத்தில் பச்சையம்மன் காட்சி தருகிறார். வனச்சரக சோதனைச் சாவடியைத் தாண்டி உள்ளே நடந்தால் முதலில் வருவது பஞ்சமுக ஆஞ்சனேயர், ஒரு கையில் கதையும், இன்னொரு கையில் சஞ்சீவி மலையும் ஏந்திய வண்ணம் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார். நாம் வீரபத்திர சுவாமி ஆலயத்தை அடைகிறோம். பெரிய கண்களும் கையில் வாளுமாக வீரபத்திரர் அருள்பாலிக்கிறார். ஆலயத்தின் பின்பகுதியில் நடந்து சென்றால் அங்கே தென்படுகிறது ரேணுகா பரமேஸ்வரி ஆலயமும் ஆகாச கங்கையும். திவ்ய சொரூபிணியான ரேணுகா பரமேஸ்வரி சகல பிணிதீர்க்கும் தீர்த்தக் குளமான ஆகாச கங்கையின் குளக்கரையிலேயே அமர்ந்திருக்கின்றார். சிறிது தூரத்தில...