தற்செயலாகத்தான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அவருடைய பெயர் ஸ்டீஃபான் ஹினிக்கன். கனடாவுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் குடிபெயர்ந்த ஐரிஷ்காரர் . இசை வாத்தியங்களைச் சேகரிப்பவர். தபால் தலை சேகரிப்பவர்கள், காசுக் குற்றிகள் சேகரிப்பவர்கள் என்று பார்த்திருக்கிறேன். இசை வாத்தியங்கள் சேகரிப்பவரை எங்கே காண முடிகிறது? அவர் வாழ்நாள் முழுக்கச் சேகரித்த வாத்தியங்கள் அவருடைய வீட்டுக்குச் சென்றபோது பார்வையிடக் கிடைத்தன. ஆறடி உயரமான மனிதர். மெலிந்த ஆனால் வலுவான தேகக்கட்டு. வயது 50 - 55 இருக்கலாம். ஒன்பது வயதுப் பையனைப் போல முகத்தில் சிவப்புச் சிரிப்புடன் குதூகலமாக வரவேற்றார். அந்த அறை முழுக்க ஒருவித ஒழுங்குமில்லாமல் வாத்தியங்கள் கிடந்தன. சில உயரத்தில் மரப்பலகைகளில் அடுக்கப்பட்டுக் காணப்பட்டன. சில தரையில். எத்தனை வாத்தியங்கள் உள்ளன என்ற கேள்விக்கு “865 வாத்தியங்கள்” எனச் சட்டென்று சொன்னார். அந்தப் பதில் திடுக்கிட வைத்தது. எண்ணிக்கையில் அல்ல; அத்தனை துல்லியமாக அவர் கணக்கு வைத்திருக்கிறார் என்பதை நினைத்தபோது. ஏதாவது புது வாத்தியம்பற்றி கேள்விப்பட்டால் அதை அந்த நாட்டிலிருந்து உடனுக்க...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!