Skip to main content

இந்தியாவுக்குள் ஊடுருவிய சில தீவிரவாதிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழில் வரும் பெரும்பாலான வலைப்பூக்களை இருவகையாக பிரித்து விடலாம். சினிமா, சினிமாவென்று சினிமாவை தவிர வேறு எதைப் பற்றியும் கவலையேபடாத வலைப்பூக்கள்தான் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவை. சிறுபான்மையாக மருத்துவம், பொது அறிவு, அரசியல் அல்லது அவியலாக எல்லாவற்றையும் சேர்த்து தரும் சில வலைப்பூக்கள். இவற்றில் மிகச் சிலவே சுவாரசியமாக இருக்கின்றன. 

நான் 2007-இல் என்னுடைய வலைப்பூவை தொடங்கிய போது  என்னுடைய விருப்பம் என்னவோ அதை மட்டுமே எழுத ஆரம்பித்தேன். பின்னர், முழுவதும் தமிழ் என்று மாறிய பின்னர் என்னுடைய எங்கேயும் எப்போதும் வலைப்பூ படிக்கும் எல்லோருக்கும் சுவாரசியமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். தொடர்ந்து எழுத முடியவில்லை என்றாலும் அவ்வப்பொழுது எழுதி வருகிறேன். 

என்னுடைய மனம் கவர்ந்த பதிவுகளையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறேன். என்னைப்பொறுத்த வரை எவ்வளவு பேர் நம்முடைய வலைப்பூவுக்கு வருகை தருகிறார்கள் என்பது முக்கியமல்ல. அது எவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது, எவ்வளவு தூரம் ரசிக்கப்படுகிறது என்பதே முக்கியம். 

இதோ அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான பதிவு. விறுவிறுப்பு என்ற வலைப்பூவிலிருந்து எடுத்தது. 



இந்தப் பதிவில் உள்ள விஷயங்கள் எவ்வளவு தூரம் உண்மை என்பது எனக்குத் தெரியவில்லை. படிக்க விறுவிறுப்பாகவே இருந்தது.

பாகிஸ்தான் தலிபான்காரர்கள், மத்திய கிழக்கில் இருந்து வந்த ஆட்களை இந்தியாவுக்குள் அழைத்துச் செல்வது குறித்து ஆயுதக் கடத்தல்காரர்களுடன் டீல் பேசியது பற்றி முதல் பாகத்தில் எழுதியிருந்தோம். ஆயுதக் கடத்தல்காரர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? இவர்களுடன் பேரம் பேசுவது போல பேசிக்கொண்டு, இப்படியான விவகாரம் ஒன்று நடப்பதை பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.யிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்கள்.

ஐ.எஸ்.ஐ., உடனே சுடச்சுட விஷயத்தை சி.ஐ.ஏ.வின் காதில் போட்டுவிட்டது. இந்தத் தகவல் வந்ததும் சி.ஐ.ஏ. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதுபோல, அல்-காய்தா ஆபிரிக்க பிரிவின் அறிவிப்பையும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ இவர்கள் எடுக்கும் முயற்சியையும் ஒன்றாக முடிச்சுப்போட்டு, “ஆகா.. இவர்கள் இந்தியாவுக்குள் வைத்துத்தான் விளையாட்டுக் காட்டப்போகிறார்கள்” என்று ஊகித்து விட்டார்கள்.

ஊகித்தது சரி. ஆனால் ஆட்களைப் பிடிக்க வேண்டாமா? அதுதான் முடியவில்லை. காரணம், அல்-காய்தா ஆபிரிக்க பிரிவு, தலிபான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதே தவிர, தங்களது ஆட்களை மத்திய கிழக்கில் இருந்து அனுப்பவே இல்லை. இதனால் எல்லாமே பேச்சுக்களோடு நின்றதே தவிர, ஆட்கள் பாகிஸ்தானுக்கு வரவுமில்லை. எல்லைப்பக்கம் நடமாடவும் இல்லை.

கதை, சி.ஐ.ஏ.வைப் பொறுத்தவரை அந்த இடத்தில திரிசங்கு சொர்க்கத்தில் நிற்க,
மத்திய கிழக்கு குழு ஓசைப்படாமல் வேறு ஒரு ரூட்டில் தனது ஆட்களை இந்தியாவு உள்ளே அனுப்பிவிட்டது என்று உளவு வட்டாரங்களில் இப்போது கூறப்படுகிறது!

அந்த ரூட், மத்திய கிழக்கில் இருந்து (அநேகமாக துபாய் என்கிறார்கள்) விமானம் மூலம் நேபாளத்தின் தலைநர் காத்மண்டு வந்து, அங்கிருந்து, விமானம் மூலமாக ஒரு குரூப்பும், தரை எல்லையை கடந்து ஒரு குரூப்பும் இந்தியாவுக்குள் வந்தது என்று இப்போது தெரிகிறது.
சமீபகாலமாக நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல் செய்வது அதிகரித்துள்ளது. சில வாரங்களுக்கு முன், நேபாள எல்லையில் வைத்து, சிலரை கைது செய்த விஷயத்தை விறுவிறுப்பு.காமில் எழுதியிருந்தோம். அந்த நபர்களும், துபாயில் இருந்துதான் காத்மண்டு வந்து, இந்தியாவுக்குள் நுழைந்திருந்தனர்.

அவர்கள் ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய குரூப் என்பதால், இந்திய மத்திய உளவுத்துறைகள் அவர்கள் மீது கண்வைத்து, பிடித்தது. ஆனால், மத்திய கிழக்கில் இருந்து வந்த ஆபிரிக்க அல்-காய்தா ஆட்கள், இந்திய உளவுத்துறைக்கு புதிய ஆட்கள். இதனால், நேபாள – இந்திய எல்லையில் இவர்களை கோட்டைவிட்டது மத்திய உளவுத்துறை என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

இப்படி சந்தடி சாக்கில் இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள், இந்தியாவுக்குள் மக்களோடு மக்களாக கலந்து போய்விட, ஆட்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் மத்திய உளவுத்துறையினர் தேடத் தொடங்கியிருப்பதே, தற்போது டில்லி, மும்பாய், கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய நான்கு நகரங்களில் சல்லடை போட்டு தேடிக்கொண்டிருக்கும் விவகாரம்.

மத்திய உளவுத்துறை இந்த 4 நகரங்களிலும் “ஊடுருவிய தீவிரவாதிகளை தேடுகிறோம்” என்று சொல்கிறதே தவிர, தீவிரவாதிகள் யார்? எந்த குரூப்? என்றெல்லாம் கூறவில்லை என்பதை கவனியுங்கள்.

சரி. ஊடுருவல் இப்படி நடைபெற்றிருக்கலாம் என்று இந்திய உளவுத்துறையால் ஊகிக்கப்படலாமே தவிர, 100 சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட முடியாது அல்லவா? அப்படியிருந்தும் இவர்கள் இந்தியாவுக்குள் உள்ளார்கள் என்று எப்படி நம்புகிறது இந்திய உளவுத்துறை?

இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.
முதலாவது காரணம், நேபாளத்தில் இருந்து கொல்கத்தா விமான நிலையத்துக்கு சந்தேகத்துக்கு இடமான சிலர் வந்ததாகவும், அவர்கள் யாருடைய பெயரும் உள்துறை அமைச்சு தயாரித்த தீவிரவாதிகள் பட்டியலில் இல்லாத நிலையில், இந்தியக் குடிவரவு அதிகாரிகள் சில மணிநேரம் அவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

குடிவரவு அதிகாரிகள் தகவல் கொடுக்க, மத்திய உளவுத்துறையின் ஆட்கள் சிலர் கொல்கத்தா விமான நிலையம் வரை சென்று இவர்களை விசாரித்திருக்கிறார்கள். அவர்களாலும் இந்தச் சந்தேக நபர்கள் பற்றி உறுதியான முடிவு ஏதும் எடுக்கப்பட முடியவில்லையாம். எனவே, “கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்” என்ற பிளானில் இந்த ஆட்களை இந்தியாவுக்குள் அனுமதித்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்குள் இவர்கள் யாரைச் சந்திக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள மத்திய உளவுத்துறை தனது ஆட்களை ஏற்பாடு செய்திருந்ததாம். அதையடுத்து, நேபாளத்தில் இருந்து வந்து, கொல்கத்தாவில் தங்கியிருந்த ‘தீவிரவாதிகள்’, மத்திய உளவுத்துறையின் ஆட்களால் கண்காணிக்க பட்டிருக்கிறார்கள்.
ஆனால், 24 மணி நேரத்துக்குள், மத்திய உளவுத்துறையின் ஆட்களுக்கு நூல் கொடுத்துவிட்டு, அவர்கள் கொல்கத்தாவை விட்டே இரவோடு இரவாக மாயமாகி விட்டார்கள்.

அதன் பின்னர்தான், இதையும், சி.ஐ.ஏ.யிடம் இருந்து கிடைத்த தகவலையும் முடிச்சுப் போட்டு, கொல்கத்தா ஊடாக வந்தவர்கள் அல்காய்தா ஆபிரிக்க பிரிவின் ஆட்களாக இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறை நம்புவதாக தெரிகிறது.

அது ஒரு காரணம் என்றால், இரண்டாவது காரணம் ஒன்றும் இருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் இருந்து மும்பாய்க்கு செய்யப்பட்ட ரகசிய ரேடியோ ட்ரான்ஸ்மிஷன் ஒன்று, மத்திய உளவுத் துறையால் ஒட்டுக் கேட்கப்பட்டதாம். அந்த ரேடியோ உரையாடலில், “பெரியபுள்ளி (Big shot)” என்பவரை குறிவைப்பது பற்றிக் கூறப்பட்டதாகவும், தூதரகம், விமான நிலையம் ஆகிய சொற்பதங்கள் உபயோகிக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு.

இந்த இரண்டு காரணங்களையும் வைத்து (வேறு ஏதாவது காரணமும், அல்லது துப்பும் மத்திய உளவுத்துறையிடம் இருந்தாலும் இருக்கலாம்) இந்திய உளவுத்துறை எடுத்துள்ள முடிவுகள் -
1) ஆபிரிக்க அல்-காய்தா தீவிரவாத குழு ஒன்று, மத்திய கிழக்கு ஊடாக இந்தியாவுக்குள் தனது ஆட்களை அனுப்பியிருக்கிறது.
2) அவர்களது தாக்குதல் இலக்கு (“பெரியபுள்ளி”), அமெரிக்க வி.ஐ.பி. ஒருவராக இருக்கலாம்.
3) தாக்குதல் முறை, ஒரு மனித வெடிகுண்டு தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் (ஆபிரிக்க அல்-காய்தாவின் ஸ்பெஷாலிட்டி).
4) தாக்குதல் நடைபெறப்போகும் இடம், இந்திய நகரம் ஒன்றில் உள்ள அமெரிக்கத் தூதரகமாகவோ, அல்லது இந்திய விமான நிலையமாகவோ இருக்கலாம்.

இதன் பின்னர் மத்திய உளவுத்துறை இப்படியான தாக்குதல் சாத்தியம் பற்றி டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திடமும், சி.ஐ.ஏ.விடமும் தெரிவிக்க, இப்போது அனைவரும் அலர்ட்!
அமெரிக்கத் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய உளவுத்துறையுடன் சேர்ந்து சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறுகிறார்கள். சில இந்தியப் பிரஜைகள் ஏற்கனவே விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். விசாரிக்கப்பட்டவர்களில், இந்தியாவுக்கு வந்த சில என்.ஆர்.ஐ.களும் (வெளிநாட்டு இந்தியர்கள்) அடங்குவர்.

மத்திய உளவுப் பிரிவின் ஆட்கள் ஹைதராபாத் வரை சென்று, ஆந்திரப் பொலீசாரின் உதவியுடன் சில தேடுதல்களை நடத்தியதாகவும் தெரிகின்றது. ஆனால் தேடுதலின்போது யாராவது அகப்பட்டார்களா என்பது பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

சமீபகாலமாக, “இந்தியாவுக்குள் ஊடுருவிய சில தீவிரவாதிகள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. அவர்களை வலை வீசி தேடுகிறார்கள்” என்ற செய்தி அடிக்கடி வருவதன் பின்னணி இதுதான்!
இந்திய – நேபாள எல்லையில் ‘வலையை விரித்திருந்தால்’, பட்சிகள் சிக்கியிருக்குமே! 

அங்கே கோட்டை விட்டுவிட்டு, இந்தியாவுக்கு உள்ளே ‘வலை வீசி தேடுவதை’ என்னவென்று சொல்வது?

நன்றி: விறுவிறுப்பு.காம் 

Comments

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...