Skip to main content

புவி வெப்பமயமாவதைத் தடுக்க அரிசிக்கு பதில் உருளைக் கிழங்கு



பூமியின் தென்துருவமான அன்டார்டிக், புவிக்கோளத்தின் 20% பரப்பை உள்ளடக்கிய பெரும்பரப்பு. உறைபனிப் போர்வையும், பல்லாயிரக்கணக்கில் மிதக்கும் பனிப்பாறைகளும் காணக்கிடக்கும் இந்தக் கடல்பகுதியில் தற்போது வெப்பம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

 1958-இல் இருந்த வெப்பத்தைக் காட்டிலும் தற்போது இருமடங்கு அதிகமாகிவிட்டது. 2.24 டிகிரி கூடியுள்ளது. இதனால் பனிப்போர்வைக்கு அடியில் பிளவுகள் ஏற்படத் தொடங்கிவிட்டன.

 கடந்த ஜூலை மாதம், அன்டார்டிக் பனிப் போர்வைக்கு அடியில் மிகப்பெரிய பிளவு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். அதாவது 1.5 கிலோ மீட்டர் ஆழம், 10 கிலோ மீட்டர் அகலம், 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்தப் பிளவு இருக்கிறது. கடலுக்குள்ளான மாற்றத்தை ராடார் உதவியுடன் ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள் இவற்றை மிகத் துல்லியமாக தெரிவித்துள்ளனர்.

 இந்தப் "பெரும்பள்ளம்' அல்லது பெரும் பிளவினால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப பனிப்போர்வை கரைந்து உருகும் என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், "நிச்சயமாக இதனால் கடல் மட்டத்தில் மாற்றம் ஏற்படும்' என்றும், "கடல் நீர்மட்டம் உயர்ந்து பல தீவுகள் மூழ்கிப்போகலாம்,  சில கடலோர நகரங்களையும் கடல் விழுங்கும்' என்கிறார்கள். ஆனால், அது இப்போது நடக்காது. சில தலைமுறைகள் ஆகும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
 பசிபிக் பெருங்கடல் மற்றும் தெற்குக் கடலில் ஏற்பட்டுள்ள வெப்பக் காற்றின் காரணமாகத்தான் அன்டார்டிக் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும், இந்த நிலைமைக்குக் காரணம் மனிதர்களின் தவறுகளா? என்று கேட்டால் மழுப்புகிறார்கள். அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்பதுதான் அவர்களது பதில்.
 இங்கே ஆராய்ச்சிக்கூடங்கள் அமைத்திருப்பதும், அதிநவீனக் கருவிகள் கொண்டு ஆய்வுகள் செய்வதும் அமெரிக்கா, ரஷியா, கனடா, டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள்தான். வளர்ந்த நாடுகளின் விஞ்ஞானிகள் தங்கள் நாட்டைக் காட்டிக்கொடுப்பார்களா?

புவிவெப்பம் அதிகரிக்கக் காரணம் வளர்ந்த நாடுகளின் சுயநலத்தால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்புகள்தான். புவிவெப்பம் உயர்வதை 2 சென்டிகிரேட் அளவுக்கும் கீழாக, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், வளர்ந்த நாடுகள் தங்களது கரியமிலவாயு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால், அவர்கள் அந்தச் சுமையை வளரும்நாடுகள் மேல் போட்டுவிட்டு, அன்டார்டிகாவில் ஆராய்ச்சி செய்கிறார்கள். நம்மை அச்சுறுத்துகிறார்கள்.

புவிப்போர்வையைப் பாதிக்கும் கரியமில வாயுவைக் காட்டிலும், மிக மோசமானது மீதேன் வாயு. இந்த மீதேன்வாயு வேளாண்மையில்தான் அதிகமாக வெளிப்படுகிறது. குறிப்பாக நெல் சாகுபடியில்! ஆகவே, வேளாண்மையில் சில கட்டுப்பாடுகளை விதித்து, புவிவெப்பத்தைக் குறைக்கலாம் என்று வளர்ந்த நாடுகள் கூறியதை உலகின் எந்த நாடுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. உணவுத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்பதால் இதற்கு இந்தியா உள்பட வளரும் நாடுகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும்கூட, இந்த முடிவைக் கைவிடாமல், அடுத்த கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறார்கள்.

 இதற்கிடையில், அரிசி சாப்பிடும் ஆசிய நாடுகளின் உணவுத்தட்டுப்பாட்டை நீக்க ""அரிசிக்கு மாற்றாக உருளைக்கிழங்குதான் மிகநல்ல உணவு; இதற்குத் தண்ணீர் தேவை மிகவும் குறைவு'' என்று ஐரோப்பாவில் நடந்த உருளைக்கிழங்கு மாநாட்டில் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.






அடுத்த எட்டு ஆண்டுகளில் கரியமில வாயு குறைப்புக்கான எந்தவித சரியான திட்டமும் இல்லாமல், போதிய நிதியையும் ஒதுக்காமல், புதிய தொழில்நுட்பங்களையும் வழங்காமல் இன்னமும் பேசிக்கொண்டே இருக்கின்றன வளர்ந்த நாடுகள்.

இது ஒருபுறம் இருக்க நம்முடைய கவலையெல்லாம் கங்கை நதிக்கு மூலாதாரமாகிய கங்கோத்ரி வேகமாக உருகத் தொடங்கிவிட்டது; யமுனை நதிக்கு ஆதாரமான கோமுக் பனிச்சிகரம், தனது "பசுமுகத்தை' இழந்துவிடும் அளவுக்கு உருகிவிட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுதான். கடந்த பத்து ஆண்டுகளில் இவ்வாறு இருசிகரங்களும் வேகமாகக் கரைவது அதிகமாகிவிட்டது.

உலகளாவிய புவிவெப்பம் இமாலயத்தையும் பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளின் சுயநலத்துக்கு எங்கோ இருக்கும் கங்கோத்ரியும் கோமுக் சிகரமும் வேகமாகக் கரைகின்றன.  அன்டார்டிக் பனிப் போர்வைக்கு அடியில் உறைந்த கடல் பாளம் பாளமாகப் பிளந்து நிற்கிறது. கடல்காற்று வெப்பமாகிறது. பருவமழையை  பெரும் புயல் விரட்டுகிறது.

உலகத்தில் ஏதோ ஒரு நாடு, சுற்றுச்சூழலுக்கு எதிராக எதையோ செய்கிறது என்று சும்மா இருக்க முடியாது. அதனால் புவி முழுவதையும் பாதிக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த இயற்கை மகத்தானது. தன்னைச் சீர்குலைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினையை முன்வைக்கிறது. "நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே' என்று சொல்லும் சக்தி படைத்த இயற்கை மனிதருக்குச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால் மனிதனோ, ""நான்'' எனும் அகந்தையை நடத்துவோனாகவே நீடிக்கிறான்.

 அனுபவிப்பதுவரை அனுபவித்துவிட்டு நாம் போய்விடுவோம், வருங்கால சந்ததியினர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று நாம் வாளாவிருந்துவிட முடியாது. நமது முன்னோர்கள் நாம் சந்தோஷமாக வாழ மாசுபடாத பூமியை விட்டுச் சென்றனர். நாமும் நமது சந்ததியினருக்கு மாசுபடாத பூமியை விட்டுச் செல்வதுதானே நியாயமாக இருக்கும். நாம் ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டிய இன்றியமையாத பிரச்னை இது!

நன்றி: தினமணி தலையங்கம் - 27/12/2012

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...