சென்னையில் வாழும் ரசிகர்களின் ரசனையும், ருசியும் அலாதியானது. நல்ல சாப்பாடு, சங்கீதம், எழுத்து, நாடகம், நாட்டியம், ஓவியம் எல்லாவற்றையுமே அவரவர்களின் தேடலுக்கு ஏற்ப அணு அணுவாக ரசிக்கும் ரசனை உடையவர்களில் முதலிடம், சென்னைவாசிகளுக்கே உண்டு. ரசனை - ரசிக்கும் தன்மை மக்களிடையே நல்ல உறவை வளர்க்கும். பரஸ்பர அன்புடன் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க முடியும். "அப்புசாமி - சீதா பாட்டி' இசைக் கூடல் அமைப்பும், ரசனையை வளர்க்கும் நல்லதொரு விஷயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அமைப்பாகும் . இந்த இசைக் கூடலில், சிறந்த சமூக சேவகியான டாக்டர் ஷ்யாமா, பத்திரிகையாளர் காந்தலட்சுமி சந்திரமவுலி, தேஜோமயி கல்வி மையங்களின் தலைவர் உமாயோகேஸ்வரன் இவர்களுடன், பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர். அக்கறை என்னும் அமைப்பையும் இவர்கள் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. "அப்புசாமி - சீதா பாட்டி' நகைச்சுவை பாத்திரத்தை உலவவிட்டு நிலை நிறுத்தியவர் எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன் ஆவார். அவர் இதை நடத்தும் குழுவில் முக்கியமானவர். மகாத்மா காந்தி பிறந்...
காலை Japan இல் காஃபி, மாலை New York இல் காபரே, இரவில் Thailand இல் ஜாலி!, இனிமேல் நமக்கென்ன வேலி? என்றும், என்றும் இன்ப மயம்!