Skip to main content

Posts

Showing posts from July, 2011

பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளில் ரூ.400 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள்!

திருவனந்தபுரம்:  பத்மநாப சுவாமி கோவிலில், பூமிக்கடியில் அமைக்கப்பட்டுள்ள ஆறு அறைகளில், மூன்று அறைகளை திறந்து கணக்கெடுத்ததில், 400 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர, மரகத, வெள்ளி நகைகளும், மதிப்பு மிக்க கலைப் பொருட்களும் இருப்பது தெரியவந்தது.  கேரளா, திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இக்கோவிலில், பூமிக்கடியில் ஆறு அறைகள் உள்ளன. இவற்றில், இரு அறைகளில் ஒன்றில் நித்ய பூஜைக்கான பொருட்களும், மற்றொன்றில் கோவில் உற்சவத்திற்கு பயன்படும் பொருட்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நித்ய பூஜைக்கான பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை, தினமும் திறக்கப்படும். உற்சவ பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறை, ஆண்டுக்கு ஐந்து முறை மட்டுமே திறக்க...