Skip to main content

ரஜினி வாக்களிப்பதை படமாக்கிய மீடியாவின் அடாவடி செயல்


தேர்தலில் வாக்களிப்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. யாருக்கு வேண்டுமானாலும் அவர்கள் வாக்களிக்கலாம். ஆனால் அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்ற ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம்.
ஆனால் தமிழ் சினிமாவில் உச்ச அந்தஸ்தை 30 ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்துவரும் சூப்பர் ஸ்டார் ரஜினி, ஏதோ ஒரு கட்டத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிடமாட்டாரா என ரசிகர்களால் (இன்னமும்) நம்பப்படும் இந்த விஷயத்தில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களும், அரசியல்வாதிகளும் அவருக்கு சங்கடத்தை உண்டு பண்ணுவதில் குறியாக இருக்கிறார்கள்.

நேற்று அவர் வாக்களித்த போது, எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் அம்பலமாகிவிட்டது. பொதுவாக அவர் வாக்களிக்க வரும்போது, ரசிகர்களை மிஞ்சும் அளவுக்கு மீடியாக்காரர்கள் மொய்த்துக் கொள்வார்கள். நேற்றும் அப்படித்தான் நடந்தது.

அவர் வாக்களிக்கும் இடத்துக்குச் சென்றபோதும் காமிராக்கள் துரத்தின. அவர்களை அப்புறப்படுத்த ரஜினியும் முயற்சிக்கவில்லை. அவருடன் வந்திருந்தவர்களும் முயற்சிக்கவில்லை. இதனால் அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்பதை அப்படியே தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துள்ளனர் புகைப்படக்காரர்களும் தொலைக்காட்சி கேமராமேன்களும். அவர் திமுகவுக்கு வாக்களிக்கவில்லை!

ஓட்டுப் போட்ட கையோடு, வாக்குச் சாவடியில் எதுவும் பேசாமல் நேராக வீட்டுக்குப் போனவரை, ஆங்கிலச் சேனல்கள் வாயைப் பிடுங்க, அவரும் ஊழல், விலைவாசி, விவசாயிகள் நலன், அடுத்த முதல்வர் என்றெல்லாம் அடித்துவிட்டார்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடவில்லை. அதன்பிறகுதான் ஆரம்பித்தது. ரஜினி வாக்களிப்பதை படம் பிடித்தவர்களில் சிலரது ஒளிநாடாக்கள் கோபாலபுரத்துக்கும், முக்கிய தொலைக்காட்சி சேனல்களுக்கும் போய்ச் சேர, ஆட்சி மேலிடம் ஏக அப்செட். 

இந்த நிலையில், நேற்று மாலையே முதல்வர் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் பார்க்க வேண்டிய சூழல் ரஜினிக்கு. ரஜினி ஓட்டுப் போட்ட விவகாரம் முதல்வருக்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், ரஜினி வருவாரா மாட்டாரா என்று எல்லோரும் காத்திருந்தார்கள். ஒருவழியாக வந்தார். ஆனால் முதல்வருடன் அவரால் சகஜமாக இருக்க முடியவில்லை என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள்.

முதல்வருடன் இருந்த ஒரு முக்கிய அதிகாரி நம்மிடம் இப்படிச் சொன்னார்: "படம் ஆரம்பிக்குமுன், அங்கு நின்றிருந்த வைரமுத்துவிடம், 'நீங்களெல்லாம் இந்த மனிதருக்கு (ரஜினிக்கு) எந்த அளவு பரிந்து பேசியிருக்கிறீர்கள். ஆனால் இவர் செய்திருக்கிற வேலையைப் பார்த்தீர்களா... இவரது நம்பகத்தன்மை தெரிகிறதா.. வாக்களிப்பது அவர் இஷ்டம். ஆனால் அதைப் படம்பிடிக்கவும் அனுமதித்திருக்கிறார்கள். அடுத்து அவர் அளித்த பேட்டி.. விலைவாசி நாடெங்கும் உள்ள பிரச்சினை. ஆனால் நமது அரசு அதைத் தீர்க்க எடுத்த முயற்சிகள் தெரியாதா.. விவசாயிகளுக்கு இந்த அரசை விட அதிகம் செய்தது யார்.... இதெல்லாம் சரிதானா?", என்று முதல்வர் கேட்க, இருக்கையில் உட்கார முடியாமல் நெளிந்த ரஜினி, படம் முடிந்த கையோடு, காரில் ஏறிப் பறந்தாராம்!

ஆட்சியாளர்களிடம் மிகுந்த நெருக்கமாக இருந்த ரஜினியின் இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம், அந்த 'பத்திரிக்கை ஆசிரியரான அரசியல் தரகர்' கம் விமர்சகர்தான் என்றும் உடன் படம் பார்த்தவர்களிடம்  சோவைப்பற்றி  கமெண்ட் அடித்தாராம் முதல்வர்! 
 
இதென்ன காமெடி? எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே தெரியாத அளவு ரஜினி முட்டாளா என்ன? தனியொரு நபர் வாக்களிப்பதை புகைப்படம் எடுக்க முயன்ற போது, அந்த வாக்குச் சாவடிக்குள் இருந்த தேர்தல் கமிஷன் அதிகார்களும், காவல் துறையும் என்ன செய்தார்கள்? இவர்களை விட்டுவிட்டு ரஜினி மேல் பாய்வது அனாவசியம்.

ஏற்கெனவே 2004ம் ஆண்டு தேர்தலில் பாமக மீதான கோபத்தில், அதிமுக- பாஜக கூட்டணிக்கு வாக்களித்தேன் என வெளிப்படையாகக் கூறி ரஜினி சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

Comments

Unknown said…
ரஜினியின் ஒரு ஓட்டு எதையும் பெரிதாய்த் தீர்மானித்துவிடப் போவதில்லை. ஆனால், இன்னொரு முறையும் கருணாநிதி ஆட்சியமைத்தால் அவருக்கு நடக்கும் பாராட்டு விழாக்களில் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்து கை தட்டி ரசிப்பார். அம்மா முதல்வரானால் தைரியலட்சுமி என்று புகழாரம் சூட்டுவார். அவருடைய பழைய காலக் காய்த்தல் உவத்தல் எல்லாம் மறக்கவும் மன்னிக்கவும் படும்.
Ram Sridhar said…
நண்பர் சொல்வது அப்பட்டமான உண்மை என்றாலும், ரஜினியைப் போன்ற நடிகர்கள் அரசியல் தலைவர்களை அனுசரித்துப் போகாவிட்டால் பிழைப்பு நடத்த முடியாது. நான் சொல்ல வந்தது யாராயிருந்தாலும் அவர்களுக்கு ஓட்டு போடும் தார்மீக உரிமை இருக்கிறது. அவ்வாறு போடும்போது அதை காமிரா வைத்து படம் எடுத்து தொலைக்காட்சியிலும், செய்தித்தாள்களிலும் போடுவது கண்டிக்கத்தக்க செயல் என்பதுதான்.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

சேவல் சண்டை : தமிழ்நாட்டின் தனி அடையாளம்

முடிகள் அனைத்தும் சிலுப்பிக் கொண்டு நிற்க, வலது காலில் பதம் தீட்டப்பட்ட கத்தியை போர் வீரனைப் போல் ஏந்திக் கொண்டு, கூர்மையான அலகால் கொத்துவதற்கு தயாராக நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் சேவல்களின் சண்டையை நேரில் பார்த்திருக்கிறீர்களா? இதெல்லாம், கிராமத்திலும், சினிமாவிலும் மட்டுமே காணக் கிடைக்கும் காட்சி என்று நீங்கள் காரணம் சொன்னால், தயவு செசய்து உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளுங்கள், கிராமங்களை விட அதிக அளவில் சேவல் சண்டை நடப்பது வடசென்னை பகுதியில் தான். ஜல்லிக்கட்டிற்கும், சேவல் சண்டைக்கும்; சங்க இலக்கியத்தில் குறிப்பு, பிராணிகள் வதை காரணம் காட்டி தடை; என சில ஒற்றுமைகள் உண்டு. தடை நிலை இருந்தாலும், இந்த இரண்டும் நிழல் போல, தமிழர்களின் வாழ்வை பின் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சண்டைகள் சண்டைகளாக இருந்த போது கூட இல்லாத விமர்சனங்கள், அது சூதாட்டமாக மாறிய போது பல்வேறு காரணங்களுகாக நிராகரிக்கப்பட்டது. (?) மறைமுக சண்டை : ராயபுரம், சூளை, பெரம்பூர், வியாசர்பாடி, எண்ணூர், திருவொற்றியூர், வால்டாக்ஸ் ஆகிய பகுதிகளில், தொன்று தொட்டு சேவல் சண்டைகள் நடந்து வருகிறது. இங...