ஒரு அட்டகாசமான அரையிறுதி ஆட்டம் முடிந்தது. இதற்கு முன் இலங்கை-நியூசிலாந்து இடையே நடந்த போட்டியைப் போல இந்தப் போட்டி உப்புசப்பு இல்லாத ஆட்டமாக இல்லாதது ஒரு பெரிய ஆறுதல். சச்சின், சேவாக், சுரேஷ் ரைனா ஆகியோர் மிக அற்புதமாக விளயாடி இந்தியாவின் ஸ்கோரை 260 ரன்களுக்கு உயர்த்த உதவி செய்தனர் என்பதை மறுக்க முடியாது என்றாலும், நம்முடைய பௌலர்கள் ஐவரும் ஆளுக்கு தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார்கள்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் அப்ரிதி ஆரம்பம் முதல் மிகவும் மிதப்பாகவே இருந்தது போல எனக்கு தோன்றியது. பாகிஸ்தான் அணி இதற்கு முன் நம்முடன் மோதிய எந்த உலகக்கோப்பை போட்டியிலும் வென்றதில்லை என்பதை மறந்துவிட்டு எதோ இந்தியாவை ஏற்கனவே தோற்கடித்துவிட்ட மாதிரி ரொம்பவும் தெனாவெட்டாக இருந்ததாலோ என்னவோ போட்டியில் அசிங்கமாகத் தோற்க நேர்ந்தது என நினைக்கிறேன்.
உலககோப்பை இறுதி போட்டிக்கு செல்லும் இந்தியாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இங்கு சில நெருடலான விஷயங்களையும் சொல்ல வேண்டும்.

- பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பும் விராத் கோலி இன்னமும் நம் அணியில் இருக்க வேண்டுமா?
- தோனியின் பேட்டிங் இன்னமும் தேறவில்லை. பரிதாபமாக இருக்கிறது. என்ன ஆயிற்று தோனி?
- பீல்டிங்கில் இன்னமும் தேர்ச்சி வேண்டும். குறிப்பாக, ஹர்பஜன் சென்னை 28 இல் வரும் பிரேம்ஜி மாதிரி ஒரு பந்தைக்கூட பிடிக்க முடியாது திணறுகிறார். ஜாக்கிரதை பாஜி.
- இறுதிப் போட்டியில் கௌதம் காம்பிர் இன்னமும் ஜாக்கிரதையாக விளையாட வேண்டும்.
Comments