நல்ல வேளை, தோற்கவில்லை மேட்ச் டையில் முடிந்தது என்று சமாதானம் சொல்லிக்கொண்டாலும், இந்த மேட்சில் சுலபமாக இந்திய அணி வெற்றி பெற்றிருக்க முடியும் என்பதே என் கருத்து.
முதலில் மேட்சில் நமக்கு சாதகமாக நடந்த விஷயங்களை அலசி விடுவோம்:
சச்சின்- தொடரும் சாதனைகள்!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிக ரன், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், உலக கோப்பை அரங்கிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், 115 பந்தில் 120 ரன்கள் (5 சிக்சர், 10 பவுண்டரி) எடுத்த சச்சின், உலக கோப்பை வரலாற்றில் அதிக சதம் (5) கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதுவரை இவர், 38 போட்டியில் பங்கேற்று 5 சதம், 13 அரைசதம் உட்பட 1944 ரன்கள் எடுத்துள்ளார். இவரை அடுத்து இந்தியாவின் கங்குலி, ஆஸ்திரேலியாவின் குரங்கு பாண்டிங், மார்க் வா உள்ளிட்டோர் தலா 4 சதம் அடித்து 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
சச்சின், உலக கோப்பை அரங்கில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை இலங்கையின் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியாவின் குரங்கு பாண்டிங் (41 போட்டி), மெக்ராத் (39 போட்டி) ஆகியோர் உள்ளனர்.
உலக கோப்பை அரங்கில், 2000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்ட, சச்சினுக்கு இன்னும் 56 ரன்கள் தேவைப்படுகிறது. இதுவரை இவர் 38 போட்டியில் பங்கேற்று 1944 ரன்கள் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் (47) மற்றும் டெஸ்ட் (51) போட்டியில் சேர்த்து மொத்தம் 98 சதம் அடித்துள்ள சச்சின், இன்னும் இரண்டு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் கடந்து மேலும் ஒரு புதிய சாதனை படைக்கலாம்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில், ஒருநாள் (47) மற்றும் டெஸ்ட் (51) போட்டியில் சேர்த்து மொத்தம் 98 சதம் அடித்துள்ள சச்சின், இன்னும் இரண்டு சதம் அடிக்கும் பட்சத்தில், சதத்தில் சதம் கடந்து மேலும் ஒரு புதிய சாதனை படைக்கலாம்.
இந்தப் போட்டியில் மொத்தம் 10 பவுண்டரி அடித்த சச்சின், தனது 7வது பவுண்டரியை கடந்த போது, உலக கோப்பை அரங்கில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட பவுண்டரி அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர் 38 போட்டியில் 203 பவுண்டரி அடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் 5 சிக்சர் விளாசிய சச்சின், அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார். இவர் இதுவரை 24 சிக்சர் விளாசியுள்ளார். முதலிடத்தில் மற்றொரு இந்திய வீரர் கங்குலி (25 சிக்சர்) உள்ளார்.
இந்தப் போட்டியில் 35 ரன்கள் எடுத்த இந்திய துவக்க வீரர் சேவக், ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். முன்னதாக சச்சின் (1455 ரன்கள்), யுவராஜ் சிங் (1187 ரன்கள்) உள்ளிட்டோர், இப்பெருமை பெற்றனர்.
சரி, நம் அணி எங்கே, எதில் சொதப்பியது என்பதையும் பார்ப்போம்:
- 305 / 4 என்றிருந்த ஸ்கோர் சட்டென 338 ஆல் அவுட் என்று ஆனது பெரிய கொடுமை.
- யூசுப் பதானை முதலில் விளையாட விடாமல் தோனி வந்தது ஏன்?
- தோனி 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தாலும், அந்த இடத்தில் பதான் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க முடியும்.
- விராட் கோலி, பதான் இருவருமே கொஞ்சம் பொறுமையாக விளையாடி இன்னும் ஒரு 15 - 20 ரன்களை சேர்த்திருக்கலாம்.
- ஜாகிர் ஓவர்களை முதலிலேயே காலி செய்துவிட்டு கடைசியில் சாவ்லாவின் ஸ்பின் பௌலிங்கில் இங்கிலாந்து ரன்களை குவிக்க நாமே வழி செய்தது இன்னும் கொடுமை.
- இதைவிட சொதப்பலாக பீல்டிங் செய்ய முடியாது.
ம்ம்ம்ம்...இன்னும் நிறைய போட்டிகள் இருக்கின்றன. இந்திய அணி வெற்றி மேல் வெற்றி பெறட்டும்.
Comments