உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடியாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்கபலமாக ஆடிய விராத் கோலியும் சதம் (100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது.
மிகவும் நன்றாக விளையாடி நம் அணி வெற்றி பெற்றபோதும் எனக்கு சில விஷயங்கள் உறுத்தலாக இருந்தன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகிறேன்.
- சச்சினின் பரிதாப அவுட்: சச்சினைப் பற்றி புதிதாக புகழ எதுவும் தேவையில்லை என்றாலும் அவர் அவுட்டான விதம் மிகவும் அமெச்சூர்த்தனமாக இருந்தது. இத்தனைக்கும் அவரும் சேவாக்கும் நிறைய போட்டிகளில் சேர்ந்து விளையாடி ரன்களை குவித்து சாதனை புரிந்திருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது, சச்சின் ஏன் அந்த ஒற்றை ரன்னை எடுக்க அவ்வளவு அவசரப்பட வேண்டும்? ஏன் அப்படி பரிதாபமாக அவுட் ஆக வேண்டும்? சத்தியமாக எனக்கு புரியவில்லை.
- ஸ்ரீசாந்தின் கேவலமான பௌலிங்: ஸ்ரீசாந்தை முதலில் உலகக் கோப்பை அணியில் சேர்க்காத போது கங்கூலி முதல் எல்லோரும் ஸ்ரீசாந்தை ஏன் சேர்க்கவில்லை என பெரிய குரலில் கூப்பாடு போட்டார்கள். நேற்றைய போட்டியில் அவருடைய பௌலிங் எவ்வளவு மட்டமாக இருந்தது என்பது அந்த மேட்சைப் பார்த்த எல்லோருக்கும் தெரியும். ஒரே ஓவரில் 24 ரன்கள் கொடுத்து எல்லோரையும் கதிகலங்க வைத்தார். இவருக்கு பதிலாக பியுஷ் சாவ்லா எவ்வளவோ பரவாயில்லை.
- சகிர் கான் பௌலிங்: சகிர் கான் இன்னும் பழைய form க்கு வரவில்லை எனும் போது அவரை ஏன் வலுக்கட்டாயமாக பௌலிங் செய்ய சொல்ல வேண்டும்? அஷ்வின் என்ன ஆனார்?
- சொதப்பிய பீல்டிங்: இந்திய அணியின் பீல்டிங்கும் மிக, மிக சராசரியாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
நல்ல வேளையாக சேவாக்கும், விராத் கோலியும் விறுவிறுவென்று ரன்களைக் குவித்ததால் நாம் தப்பித்தோம், இல்லாவிட்டால் 2007 ம் ஆண்டு வங்கதேசத்திடம் உதை வாங்கியதுபோல திரும்பவும் சொதப்பி இருப்போம். வங்கதேச அணி உண்மையிலேயே மிகச் சிறப்பாக ஆடியது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
வரும் போட்டிகளில், வந்கதேசத்தைவிட வலுவான அணிகளுடன் மோத வேண்டியிருப்பதால் "கேப்டன் கூல்" தோனி மேற்கூறிய குறைகளை நிவர்த்தி செய்தால் நல்லது.
சச்சின், உங்களிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம், தயவுசெய்து பார்த்து கவனமாக விளையாடுங்கள். ஆல் தி பெஸ்ட்!
சேவாக், கோலி - தொடரட்டும் உங்கள் அதிரடி ஆட்டம்.
Comments