Skip to main content

Posts

Showing posts from February, 2011

உலகக் கோப்பை முதல் போட்டி-இந்திய அணியின் வெற்றி-ஒரு அலசல்

உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்றைய லீக் போட்டியில் வங்கதேச பந்துவீச்சை அடித்து நொறுக்கிய சேவக் அதிரடியாக சதம்(175 ரன்) கடந்தார். இவருக்கு பக்கபலமாக ஆடிய விராத் கோலியும் சதம் (100) விளாச, இந்திய அணி, வங்கதேசத்தை 87 ரன்கள் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது. மிகவும் நன்றாக விளையாடி நம் அணி வெற்றி பெற்றபோதும் எனக்கு சில விஷயங்கள் உறுத்தலாக இருந்தன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகிறேன். சச்சினின் பரிதாப அவுட் : சச்சினைப் பற்றி புதிதாக புகழ எதுவும் தேவையில்லை என்றாலும் அவர் அவுட்டான விதம் மிகவும் அமெச்சூர்த்தனமாக இருந்தது. இத்தனைக்கும் அவரும் சேவாக்கும் நிறைய போட்டிகளில் சேர்ந்து விளையாடி ரன்களை குவித்து சாதனை புரிந்திருக்கிறார்கள், அப்படி இருக்கும் போது, சச்சின் ஏன் அந்த ஒற்றை ரன்னை எடுக்க அவ்வளவு அவசரப்பட வேண்டும்? ஏன் அப்படி பரிதாபமாக அவுட் ஆக வேண்டும்? சத்தியமாக எனக்கு புரியவில்லை. ஸ்ரீசாந்தின் கேவலமான பௌலிங் : ஸ்ரீசாந்தை முதலில் உலகக் கோப்பை அணியில் சேர்க்காத போது கங்கூலி முதல் எல்லோரும் ஸ்ரீசாந்தை ஏன் சேர்க்கவில்லை என பெரிய ...