உலக அழகிகள் என்று முதலில் பெண்களைத் தேர்வு செய்து பட்டம் சூட்டினார்கள், பின்பு இது முன்னேறி, சிறந்த கூந்தல் அழகி, சிறந்த பல் அழகி, சிறந்த கண் அழகி என்றெல்லாம் பல்வேறு விதமாக, படிப்படியாக, விதவிதமான அழகிகளை தேர்வு செய்து பட்டம் சூட்டி விட்டு, சமீபத்தில் உலகின் சிறந்த "பின்" அழகி யார் என்று போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றுள்ள அழகிகளின் தரப் பட்டியலை "World's Best Bum 2010" என்ற பெயரில் லண்டனிலிருந்து வரும் தி சன் என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த அழகிகளின் "பின்" அழகுப் படங்கள் சரிவரக் கிடைக்காத நிலையிலும் சற்றும் மனம் தளராமல் வலைப் பக்கங்களை மேய்ந்து அந்த அழகிகளின் புகைப் படங்களைக் கீழே கொடுத்துள்ளேன்.
இந்தப் போட்டிக்கு அவர்கள் வைத்த பெயர்தான் சற்று நெருடலாக இருக்கிறது, "the Holy Grail of Hindquarters," என்பதில் Hindquarters என்றால் பின்புறம் என்று எல்லோருக்கும் தெரியும்,
ஆனால், Holy Grail என்பது ஒரு புனிதமான கிறிஸ்துவக் குறியீடு: கிறிஸ்துவ மத நம்பிக்கையின்படி ஏசு கிறிஸ்து அவருடைய "கடைசி விருந்து" (Last Supper) நடந்த சமயம் அவர் தண்ணீர் பருகிய ஒரு சிறிய பாத்திரம். இந்த ஹோலி க்ரைலுக்கு எக்கச்சக்கமான அதிசய சக்தி உண்டு என்பது கிறிஸ்துவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அப்பேற்பட்ட ஒரு பெயரை இதைப் போன்ற ஒரு அழகிப் போட்டிக்கு வைக்க வேண்டுமா?
சரி, சரி இந்த மாதிரி புனித விஷயங்களை விட்டுவிட்டு நம் அழகிகளுக்கு வருவோம். இதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள எல்லா ஹாலிவுட் அழகிகளுமே 40 வயதைத் தாண்டியவர்கள்தான். முன் அழகோ, பின் அழகோ வயது ஒரு தடையில்லை எனவே உங்கள் பார்வைக்கு அழகிகளின் படங்கள்.
|
முதல் இடத்தை பிடித்த அழகி கிம் கர்டஷியன் (Kim Kardashian) |
|
|
இரண்டாவது அழகி ஜென்னிபர் லோபெஸ் (Jennifer Lopen) |
|
|
|
மூன்றாவது அழகி-பியான்ஸ் நோயல்ஸ் (Beyonce Knowels) |
|
|
|
நான்காவது இடம்-ஜெசிக்கா பியல் (Jessica Biel) |
|
|
|
ஐந்தாவது இடம் லேடி ககா (Lady Gaga) |
இந்த உருப்படியான பதிவை தமிழ் கூறும் நல்லுலகுக்கு (நன்றி: எழுத்தாளர் அமரர் சுஜாதா) காணிக்கையாக தருவதற்காக நான் பெரும் சிரத்தையுடன் பதிந்து கொண்டிருந்தபோது, என் முதுகில் சுளீரென ஒரு அடி விழுந்தது, பார்த்தால் என் அன்பு மனைவி!! "வைகுண்ட ஏகாதசியும் அதுவுமா இது என்ன கண்றாவி வேலை?" என்று கோபித்துக் கொண்டதால், மக்களே, இந்த ரேங்கிங் சரியா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
Comments