மாஸ்டர் ப்ளாஸ்டர் (Master Blaster) சச்சின் இன்று இன்னுமொரு மகத்தான சாதனை நிகழ்த்தியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை யாருமே செய்யாத சாதனையை சச்சின் இன்று செய்திருக்கிறார்.
தென் ஆப்ரிக்காவில் சென்சூரியனில் நடைபெற்று வரும் முதல் test போட்டியில் தனது 50 வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். 1990 இல் இங்கிலாந்துக்கு எதிராக முதல் சதம் அடித்து தன் சாதனையை ஆரம்பித்து வைத்த சச்சின், இன்று 20 வருடம் கழித்து சென்சூரியனில் தனது 50 வது சாதனையைச் செய்துள்ளார். வாழ்க சச்சின்!
2G ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த் போட்டிகளின் நிகழ்ந்த அவமானம், காசு மட்டுமே சம்பாதிக்க நினைக்கும் நம் கேவலமான அரசியல்வாதிகள் ஆகிய பல்வேறு விஷயங்களால் தலை குனிந்திருக்கும் இந்தியர்கள் பெருமையுடன் தலை நிமிர இதோ ஒரு மகத்தான காரணம்.
Comments