அப்படி என்னதான் பிஸியோ, என்னதான் ஆயிற்று உன் பதிவுகளுக்கு, ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் சில நல்ல நண்பர்கள் என்னை அலைபேசியில் குடைந்து எடுத்துவிட, இதோ, கிளம்பிடோம்ல? இனிமே நிச்சயம் வாரம் ரெண்டு பதிவாவது இருக்கும் மக்களே.
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு கவிதையை கீழே கொடுத்துள்ளேன்: (அட்ரா சக்க வலைப்பதிவில் நண்பர் சி.பி செந்தில்குமார் கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை என்ற பெயரில் எழுதியது). நண்பருக்கு நன்றி.
ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி
ஜோடனை இல்லாத பிம்பமாய்
உன் முகம் இருக்கும்.
சொர்க்கத்துக்குப்போடப்பட்ட
ஒற்றையடிப்பாதை மாதிரி
உன் தலை வகிடு இருக்கும்.
பளிங்குக்கற்களில் ஊற்றிய
பாதரசம் போல்
அலை பாய்ந்து கொண்டே
உன் கண்கள் இருக்கும்.
நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்
இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்
உன் கூந்தல் இருக்கும்.
ஓஸோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்
உன் நாசி இருக்கும்.
தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்
உன் உதடுகள் இருக்கும்.
பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்
வைத்துக்கட்டியது போல்
நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான
மென்மையில்
உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.
இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்
கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்
நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்
சர்ச்சைப்பொருளாய்,
இல்பொருள் உவமை அணிக்கு
மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்
உன் இடை இருக்கும்.
குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்
ஒளிந்து கொள்ளும் விதமாய்
உன் குரல் இருக்கும்.
நல்லவரோ,கெட்டவரோ
எல்லா மனிதரிடத்தும்
ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி
உனக்கும் ஒரு ஓரத்தில்
ஒரு இதயம் இருக்கும்.
அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?
(இதைப் போன்ற நல்ல கவிதைகளை தொடர்ந்து தர நண்பரை வேண்டுகிறேன்).
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த ஒரு கவிதையை கீழே கொடுத்துள்ளேன்: (அட்ரா சக்க வலைப்பதிவில் நண்பர் சி.பி செந்தில்குமார் கணையாழி கவுரவித்த என் முதல் கவிதை என்ற பெயரில் எழுதியது). நண்பருக்கு நன்றி.
ஒரு பார்வை இல்லாதவன் எழுதிய கவிதை மாதிரி
ஜோடனை இல்லாத பிம்பமாய்
உன் முகம் இருக்கும்.
சொர்க்கத்துக்குப்போடப்பட்ட
ஒற்றையடிப்பாதை மாதிரி
உன் தலை வகிடு இருக்கும்.
பளிங்குக்கற்களில் ஊற்றிய
பாதரசம் போல்
அலை பாய்ந்து கொண்டே
உன் கண்கள் இருக்கும்.
நிறத்தில்,நீளத்தில்,அடர்த்தியில்
இருட்டுக்கு சவால் விடும் கர்வத்தில்
உன் கூந்தல் இருக்கும்.
ஓஸோன் காற்றின் சுத்தீகரிப்புக்கேந்திரமாய்
உன் நாசி இருக்கும்.
தேனில் ஊறிய இரு துண்டுக்ள் போல்
உன் உதடுகள் இருக்கும்.
பருத்திப்பூக்களை இரண்டு பக்கமும்
வைத்துக்கட்டியது போல்
நத்தைக்கு ஒரு ஆழாக்கு அதிகமான
மென்மையில்
உன் கன்னக்கதுப்புகள் இருக்கும்.
இருக்கிறதா,இல்லையா என்ற சந்தேகத்தில்
கடவுளுக்கு அடுத்த சர்ச்சையாய்
நாத்திகவாதிகளுக்கு சவால் விடும்
சர்ச்சைப்பொருளாய்,
இல்பொருள் உவமை அணிக்கு
மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய்
உன் இடை இருக்கும்.
குயில்கள் வெட்கப்பட்டுக்கூட்டுக்குள்
ஒளிந்து கொள்ளும் விதமாய்
உன் குரல் இருக்கும்.
நல்லவரோ,கெட்டவரோ
எல்லா மனிதரிடத்தும்
ஒரு மனித நேயம் மறைந்து கிடப்பது மாதிரி
உனக்கும் ஒரு ஓரத்தில்
ஒரு இதயம் இருக்கும்.
அதில் எனக்கு ஒரு இடம் இருக்குமா?
(இதைப் போன்ற நல்ல கவிதைகளை தொடர்ந்து தர நண்பரை வேண்டுகிறேன்).
Comments