நான் கமலின் நடிப்புக்கு தீவிர ரசிகன், ஆனால் அவரிடம் பேட்டி என்று யாரும் மைக்கைக் கொடுக்கக் கூடாது, கொடுத்தால் அவர் தீபாவளி அன்று விஜய் டி.வியில் பேசியதைப் போல விதண்டாவாதம் தான் பேசுவார்.
அவருடைய "அறிவார்ந்த" கருத்துக்களில் சில:
1. ஆத்திக உணர்வுகளை, படுக்கையறை உணர்வுகள் போல கருத வேண்டும். அது, ஒரு மனிதனின் தனிப்பட்ட விஷயம். அதை, அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்வது ஆபாசமானது; அர்த்தமற்றது.
2. தூணிலும், துரும்பிலும் கடவுள் இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, திருப்பதிக்குப்போய் தான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்கின்றனர்.
3. பெருந்தெய்வங்களைப் போற்றும் ஆன்மிகவாதிகள், கருப்பசாமி, மாடசாமி போன்ற கிராம தெய்வங்களைக் கண்டுகொள்வதில்லை. திருப்பதி சாமி, உண்டியல்பணத்தை எடுத்துக்கொள்கிறார். சுடலை மாடசாமி சாராயத்தைக் குடித்துக்கொள்கிறார். என்ன தப்பு?
4. மண்ணையும் தெய்வமாக மதிப்பவர்களைப் புறக்கணித்து, ஆகம விதிகள் எனும் வட்டத்துக்குள் தள்ளுகின்றனர்.
இதைப் போன்ற பிதற்றல்கள்தான் அவர் வாயிலிருந்து எப்போதுமே வரும். இவ்வளவு நாத்திக வாதம் செய்து இந்துக் கடவுள்களை நிந்திக்கும் கமல், கலைஞர் போன்ற மேதாவிகள் என்றைக்காவது கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ தாக்கிப் பேச முடியுமா? முடியாது. ஏனென்றால் இந்துக்கள் எல்லோருமே ஏமாளிகள், எக்கச்சக்கமான சகிப்புத் தன்மை உடைய முட்டாள்கள். அதனால்தான் இதைப் போன்ற "அறிவுஜீவிகளின்" உளறல்களை எல்லாம் கேட்க வேண்டிய பரிதாப நிலையில் நாம் இருக்கிறோம்.
இரண்டாவதாக, ஆத்திக உணர்வுகளை படுக்கையறை உணர்வுகள் போல கருதவேண்டும் என்றால், நாத்திக உணர்வுகளை வெளிப்படையாக சொல்ல என்ன அருகதை இருக்கிறது? கமலை போன்றவர்கள் படுக்கை அறையையே வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர்கள். தன்னுடைய எந்த படுக்கை துணையையும் கமல் வெளியே கூட்டிக்கொண்டு வராமல் இருந்ததில்லை. கேட்டால் அவர் ரொம்ப வெளிப்படையானவர் என்று சொல்லி தப்பித்துக் கொள்வார்.
உன்னுடைய படுக்கை அறை உணர்வுகளையே அந்தரங்கத்தில் வைத்துக் கொள்ளத் தெரியாமல் இருக்கும் நீ, எதற்கு தேவையில்லாமல் இந்துக் கடவுள்களை இழுக்கிறாய்?
பக்தி, மதம் போன்றவை உலகெங்கிலும் உள்ளவை, இந்தியாவில் மட்டும்தான் என்றில்லை. உனக்கு மதம், பக்தி, கடவுள் போன்ற நம்பிக்கைகள் இல்லை என்றால் மூடிக் கொண்டு போ, அநாவசியமாக அதைப் பற்றி நம்பிக்கை வைத்திருப்பவர்களை விமரிசனம் செய்யாதே.
பெருந்தெய்வங்கள் பற்றியும், குறுந்தெய்வங்கள் பற்றியும், தெய்வ நம்பிக்கையே இல்லாத கமலுக்கு என்ன கவலை? யார், யாரைக் கும்பிட்டால் என்ன? இவர் ஏன்குறுந்தெய்வங்களுக்காக வக்காலத்து வாங்குகிறார்?
அப்படி என்றால்,குறுந்தெய்வங்கள் இருப்பதை ஒப்புக்கொள்கிறாரா? இவர் குறிப்பிடுவது போல,எங்கேயாவது குறுந்தெய்வங்களுக்கு, அவமரியாதை நடந்திருக்கிறதா? அல்லது,சுடலை மாடசாமி சாராயம் குடிப்பதைப் பற்றி, பெருந்தெய்வங்களைப் போற்றும்ஆன்மிகத் தலைவர்கள் யாராவது இவரிடம் ஆதங்கப்பட்டார்களா?
ஆகம விதிகள் என்பது, அறிவியலை மையமாகக் கொண்டது. ஃபைவ் ஸ்டார்ஓட்டலில் ரூம் போட்டு, பலான, பலான சரக்குகளோடு எழுதப்படும் திரைக்கதைபோன்றது அல்ல. அது தவிர, தங்கள் கோவில் எப்படி கட்டப்பட வேண்டும் என்பது,கோவில் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயமே தவிர,பகுத்தறிவுப் புலிகளுக்கு இதில் வேலை இல்லை.
தன்னுடைய வீட்டை, என்விருப்பப்படி கட்டுவாரா? தன் விருப்பப்படி கட்டுவாரா கமல்? "ஏழைகுடிசைவாசிகளின் ஏக்கத்தைப் புறக்கணித்து, பங்களா கட்டிக்கொண்டுள்ளார் கமல்'என புகார் சொன்னால், அதை நியாயம் என்பாரா?
உன்னுடைய வேலை நடிப்பு, அதைப் பார்த்து எங்களைப் போன்ற ஆத்திகவாதிகள் காசு கொடுக்காவிட்டால் நாளை உன் வயிறு காய்ந்துவிடும். எனவே, உன்னுடைய நாத்திக கருத்துக்களை கருணாநிதியிடம் ஜால்ரா போடும்போது மட்டும் பரிமாறிக் கொள். எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத நீ, எதற்காக பிறந்த நாள் அன்று கருணாநிதியிடம் சென்று ஆசி வாங்க வேண்டும்? நாங்கள் எங்கள் பிறந்த நாளன்று கடவுளிடம் சென்று ஆசி பெறுவதைக் குறை கூற உனக்கு என்ன அருகதை இருக்கிறது?
நீ, எதையோ எதிர்பாத்து கருணாநிதிக்கு ஜால்ரா போடுவது போல, நாங்கள் எங்கள் எதிர்கால் நலனை எதிர்பார்த்து கடவுளுக்கு ஜால்ரா போடுகிறோம்.
(தினமலரில் அதன் வாசகர் ஆர்.ரங்கராஜ் பாண்டே கூறிய சில கருத்துக்கள் என் கருத்துக்களுடன் ஒத்துப் போனதால். இங்கு சேர்த்திருக்கிறேன்)
Comments
ஓ! இதுதான் down to earth ஆ?
Nice comedy.
Kamalum, Kalinarum mattum illa.. Periyar kuda Chiristina, Muslims pathi pesinadhu illa..
First try to understand.. Christianity and Islam both are religion.. But Hinduism is not a Religion.. Its a Dharmam..
Naan Naathiganum illa.. Kadavul paithiyamum illa..
Annal ungalamari aalungala paaka paaka sirippa dhan varudhu..
Birthday annikku Parents kitta, Periyavanga kitta aasi vangaradhu Thappa..
Kovil our samugathoda adayalam.. Its not religious.. and its not for people who believe on God..
//Boss, ungala ninachi sirikkaradha aluvaradha nu therila.. //
எது வருதோ , அத பண்ணுங்க
//Kamalum, Kalinarum mattum illa.. Periyar kuda Chiristina, Muslims pathi pesinadhu illa.. //
இப்ப இருக்கறவங்கள பத்தி தான் பேச்சு !!!
//Birthday annikku Parents kitta, Periyavanga kitta aasi vangaradhu Thappa.. //
ok..பெரியவங்க கிட்ட வாங்கறது தப்பில்ல ..பெரியவங்க வணங்கற கடவுள் கிட்ட ஆசி வாங்கறது தப்பா ?
//Kovil our samugathoda adayalam.. Its not religious.. and its not for people who believe on God..//
இது உங்கள் கருத்து , அதனால் நீங்கள் சொல்வது உண்மை என்று எடுத்துக்கொள்ள முடியாது !!
நீங்கள் தசவதாரம் என்ற படத்தை பார்த்து இருப்பீர்கள் , அதில் ரங்கராஜ நம்பி என்ற கடவுள் பற்றுள்ள oruvaraaga kamal nadithu iruppaar ... ஏன் அந்த பாத்திரத்தை வேறு யாரவது செய்ய சொல்ல வேண்டியது தானே .. இவர் படம் எடுப்பதற்கு மட்டும் கடவுள் தேவை ..
அதே படத்ஹில் கடைசியில் ஒரு dialogue:
நான் கடவுள் இல்லை ன்னு சொல்லல , இருந்த நல்ல இருக்கும்னு சொல்றேன் ..
இப்டி சொன்ன அடுத்த செகண்ட் ,]
கலிபுல்ல character : எல்லாத்தையும் அல்லா தான் காப்பாத்தினார் !!!
கமல் படங்களில் குழப்பும் விஷயம் :
Ex : Anbe Sivam n Vasool raja
Anve sivam :
நான் தான் கடவுள்
Vasool raja :
கடவுள் இல்லன்னு சொல்றான் பாரு , அவன நம்பலாம்
கடவுள் இருன்னு சொல்றான் பாரு அவன கூட நம்பலாம்
ஆனா நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு , அவன மட்டும் நம்பிடாத , பூட்ட கேஸ் ஆய்டுவ ...
சோ இவர நம்பின , பூட்ட கேஸ் ஆய்டுவோம்னு சொல்ரார ??
அதுலயும் , அந்த வசனம் , கடவுள் இருக்குன்னு சொல்றான் பாரு , அவன கூட ....இதுல 'கூட' என்ற வார்த்தையை வைத்து தன நாத்திகத்தை வெளிப்படுதியுருக்கிறார் ..
என் கருத்துக்களுக்கும் நீங்கள் கூறியதற்கும் சிறிது கூட சம்மந்தம் இல்லை..
பகுத்தறிவாளர்கள் என்ற வரிசையில் நியபகதிர்க்கு வருபவர்கள், சச்ரதீஸ்யும் ஈ.வே ராமசாமி அவர்களும் தான்..
அவரும் கூட மற்ற மதங்களை பற்றி கருத்து கூறவில்லை..
// எந்தவிதமான மூட நம்பிக்கையும் இல்லாத நீ, எதற்காக பிறந்த நாள் அன்று கருணாநிதியிடம் சென்று ஆசி வாங்க வேண்டும்?//
இதற்கான பதிலையே நான் கூறினேன்.. இது மூட நம்பிக்கை அல்ல.. ஒரு மரியாதை..
கோவில்களை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள நினைத்தால் என்னை நேரில் அணுகவும்...
இதை பற்றி மேலும் உன்னிடம் என்னால் பேச முடியாது..
எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.. தமிழை தவராக எழுதுவதில் எனக்கும் சங்கடமே..
//இதற்கான பதிலையே நான் கூறினேன்.. இது மூட நம்பிக்கை அல்ல.. ஒரு மரியாதை..//
அது எப்படி மரியாதையோ , அது போல் கடவுளை வணங்குவது நம்பிக்கை
அதனை மூட நம்பிக்கை என்று சொல்வது கமலஹாசனுக்கும் கிடையாது ,KK க்கும் கிடையாது
தங்களை மதியம் நேரில் சந்தித்தேன் , மீண்டும் மாலையில் சந்திப்போம் :) ஹா ஹா
மக்களின் அறியாமையை போக்குவது சக மனிதனின் கடமை.. இதை தன் பகுத்தறிவாளர்கள் செய்கின்றனர்..
நீ கடவுளை வணங்கினாலும் சரி வணங்காமல் இருந்தாலும் சரி, உன் லைப் ல என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும் .. அப்படி இருக்க.. எதற்கு இந்த கடவுள், பக்தி, எல்லாம்..
சமயங்களில் ஆழமான சில உண்மைகள் அடங்கி இருக்கிறது.. நவீன உலகில் சமயத்தின் உண்மையான முகம் மறைக்க பட்டு இருக்கிறது.. இந்த கால கட்டத்தில் இருக்கும் ஆத்திகவதிகளிடம் கேட்டல், கடவுளை சூப்பர் ஹீரோ போல வர்ணிப்பார்கள்.. உண்மையில் சமயத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ள, பகுத்தறியும் திறமை வேண்டும்.. அது இல்லாதவர்களுக்கு, சமயமும், கடவுளும் மாயா மந்திரம், சூப்பர் ஹீரோ போன்ற தூற்றத்தையே உணர்த்தும்..
ஆத்திகன் என்று மர்தட்டிக்கொல்லும் எந்த ஒரு மனிதனும், நாத்திகன் என்று சொல்லப்படும் கமல், கலைஞர், பெரியார்,போல சமய நுல்களை படித்திருக்க முடியாது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை..
//நீ கடவுளை வணங்கினாலும் சரி வணங்காமல் இருந்தாலும் சரி, உன் லைப் ல என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும் .. அப்படி இருக்க.. எதற்கு இந்த கடவுள், பக்தி, எல்லாம்..
//
ஏன்னா அது என் லைப்!!!
நான் கடவுளை வணங்கினாலும் வணங்காவிட்டாலும் உன் லைப் ல என்ன நடக்கணுமோ அது நடந்தே தீரும் .. அப்படி இருக்க.. எதற்கு இந்த கடவுள் எதிர்ப்பு , நாத்திகம் எல்லாம் ??
தலைவர் படத்துல வர மாதிரி , நம்மள நாம கவனிச்சா , ஆண்டவன் நம்மள கவனிப்பான் !!!
And like you said, for the 'so called atheists' in India, Hinduism is a punch bag.
என்ன பண்ண. நாத்திகர்கள் இப்படிப்பட்ட பிரபலங்களை பொறுத்துக்க வேண்டியது தான். ஆத்திகர்கள் நித்யானந்தாவையும் "Pat Robertson"-ஐயும் பொறுத்துக்கலையா?