என் நண்பர் சுவாமி என்கிற சிவா என்னுடைய blog எழுதுவது பற்றிய பதிவைப் படித்து விட்டு, நிறைய பேர் தமிழ் மொழியில் பதிவு செய்ய கஷ்டப்படுகிறார்கள் அது எப்படி என்று சொல்லிவிடுங்கள் எனக் கேட்டிருந்தார். blog பதிவுக்கு முதல் தேவை ஒரு ஜி-மெயில் ஐடி, பிறகு ஒவ்வொரு முறை நீங்கள் பதிய நினைக்கும் போதும் நியூ போஸ்ட் என்பதைக் கிளிக்கினால் ஒரு விண்டோ திறக்கும். அதில் நீங்கள் தமிழில் பதிவு செய்ய வேண்டுமெனில் அந்த விண்டோவின் தலையில் இருக்கும் பல்வேறு பட்டன்களில் "அ" என்ற எழுத்து இருக்கும். தமிழில் டைப் செய்யவேண்டிய வார்த்தை 'vanakkam" என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்த வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்பி விட்டு, அதை மௌஸ் மூலம் செலக்ட் செய்துவிட்டு பின் அந்த "அ" பட்டனை அழுத்தினால் அது தமிழ் வணக்கமாக மாறி விடும். இது முதன்முதலில் நீங்கள் தமிழில் டைப்பும் போது மட்டும். இதன் பிறகு எந்த வார்த்தையை வேண்டுமானாலும் ஆங்கிலத்தில் டைப்பி விட்டு பிறகு CTRL G அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடும்.
இதில் சில நடைமுறை கஷ்டங்கள் உள்ளன. உதாரணமாக நீங்கள் சிங்கப்பூர் என தமிழில் டைப் செய்ய விரும்பினால் அதற்கு "Singapore" என டைப் செய்யக் கூடாது. இது தமிழில் "சிங்கபோரே" என மாறிவிடும்; மாறாக, அந்த வார்த்தையை/சொல்லை எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே அதை ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்; அதாவது, "Singappoor" என்று டைப் செய்யவேண்டும். "Type" என்ற சொல்லை தமிழில் பதிய விரும்பினால் அதை "Taip" என்றுதான் ஆங்கிலத்தில் பதிய வேண்டும். இதை விட்டு "type" என்று பதிந்தால் அது தமிழில் "டிபே" என்று ஆகிவிடும்.
இதற்கு இன்னொரு வழியும் இருக்கிறது, கூகுளின் மெமொரியில் ஒரு வார்த்தைக்கு/சொல்லுக்கு பல்வேறு விதமான உச்சரிப்புகள் உள்ளன; உதாரணமாக, நீங்கள் "type" என்று ஆங்கிலத்தில் பதியும் போது அது "டிபே" என்று வந்தால் அந்த வார்த்தையின் அருகில் உங்கள் "cursor" ரை வைத்து கிளிக்கினால் அதில் "type" என்ற வார்த்தைக்கு டிபே, டைப், டிப்பா என்று பல்வேறு சாய்ஸ் இருக்கும், அதில் உங்களுக்கு வேண்டியதை தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆரம்பத்தில் கொஞ்சம் பழக வேண்டும். பிறகு இது வெகு சுலபமாகிவிடும்.
வாங்க, பழகலாம்.
Comments