Skip to main content

ஹிட்லர் விஷம் தின்றதால்தான் மடிந்தார்

இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஹிட்லரின் மறைவிடம் (bunker) சுற்றி வளைக்கப்பட்டபோது அவரும், அவருடைய மனைவியும் (Eva Braun) துப்பாகியால் சுட்டுக்  கொண்டு வீர மரணம் அடைந்தார்கள் என்றுதான் நாம் எல்லோருமே சரித்திரப் புத்தகத்தில் படித்திருக்கிறோம். இதையேதான் ஹாலிவுட் திரைப்படங்களும் இவ்வளவு வருடங்களாக் காட்டி வந்தன.

ஹிட்லரைப் பிடிக்க நேச நாட்டு படை (Allied Forces) வரும் முன்னரே ஹிட்லரின் மெய்க் காவலர்கள் அவருடைய உடம்பையும், அவருடைய மனைவியின் உடம்பையும் எரித்து விட்டார்கள். அமெரிக்க மற்றும் ஆங்கிலேயர்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது, ஹிட்லரின் எரிந்து போன மிச்சம்தான் கிடைத்தது.

ரஷ்யப் படையினர் அந்த எரிந்து போன மிச்சங்களைக் கைப்பற்றி ஆராய்ந்தபோது, மண்டையோட்டில் ஒரு தோட்டா (bullet) பாய்ந்ததின் அடையாளம் தெளிவாக இருந்ததால் அதுதான் ஹிட்லரின் மண்டையோடு என தீர்மானித்து அதை மாஸ்கோவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திலும் (museum) வைத்து விட்டார்கள்.

ஆனால் இவ்வளவு வருடங்கள் கழித்து இப்போது ஒரு ரஷ்ய உளவுத் துறை (FSB) அதிகாரி ஒருவர் (Lieutenant-General Vasily Khristoforov), ஹிட்லர் சயனைட் உண்டுதான் இறந்தார், துப்பாகியால் சுட்டுக் கொண்டு சாகவில்லை என ஒரு புதுத் தகவலை வெளியிட்டுள்ளார். ரஷ்ய அருங்காட்சியகத்தில் இருக்கும் மண்டையோடு ஹிட்லருடயது இல்லை என்றும் கூறியிருக்கிறார். இதைத்தானே நாங்கள் இவ்வளவு வருடங்களாகக் கூறி வருகிறோம் என்று (நம் வடிவேலு ஸ்டைலில்) அமெரிக்க சரித்திர ஆய்வாளர்கள் உற்சாகமாக கூறியிருக்கிறார்கள்.

ஹிட்லரைப் பற்றிய பலவேறு விஷயங்களில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அவர் வீரர், மரணத்துக்கு அஞ்சாதவர் என்றுதான் நாம் எண்ணி வந்திருக்கிறோம், ஆனால், இப்போது அவர் சயனைட் உட்கொண்டு இறந்திக்கிறார், சுட்டுக் கொண்டு சாகவில்லை எனவே இது மரியாதைக்குரிய மரணம் (honorable death) அல்ல என்று தெரிய வரும்போது உலகெங்கிலும் உள்ள சரித்திர ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

லண்டனிலிருந்து வெளிவரும் The Telegraph நாளிதழ் இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறது.

Comments

Popular posts from this blog

யானை-All about Elephants

உலகில் ஆசிய யானைகள், ஆப்பிரிக்க யானைகள் என 2 வகை யானைகள்தான் உள்ளன. ஆப்பிரிக்க யானைகள்தான், உலகில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரியது. இதற்குரிய சிறப்பு, ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் என்பது. அதிலும் சவானா (savana), பாரஸ்ட் (forest) என இரு வகைகள் உள்ளன.ஆசிய யானைகள், அவை வாழுமிடத்தைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இலங்கை, தென்னிந்தியாவில் ஒரு வகையும், வட இந்தியா, பர்மா, கிழக்கு ஆசிய மாநிலங்களில் ஒரு வகையும் உள்ளன. இந்தோனேஷியா, சுமத்ரா தீவுகளில் வசிப்பவை, உயரம் குறைவான ஆசிய யானைகள்.இந்தியா, சீனா, பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உட்பட 13 நாடுகளில் 45 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை ஆசிய யானைகள் உள்ளன. இந்தியாவில் 23 ஆயிரத்திலிருந்து 32 ஆயிரம் வரை யானைகள் உள்ளன. நீலகிரி உயிர்க்கோள மண்டலத்தில் (என்.பி.ஆர்.) மட்டும் 4800 யானைகள் வாழ்கின்றன. யானைகளின் கதை: இப்போதுள்ள யானைகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'மொரித்ரியம்'(Moeritherium) என்ற விலங்காக இருந்து, படிப்படியாக பல்வேறு பரிணாம வளர்ச்சி பெற்று, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 'மாமூத்'(M...

மதுரை...மாமதுரை

இந்தியாவில் பழமையான நகரங்களில் தென்பகுதியில் இருக்கும் பெருமைக்குரியது, "மதுரை'. உலகளவில், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து, மக்கள் வாழும் பழமையான வைகையாற்றின் கரையில் அமைந்த எழில் நகரம். மதுரையை ஆண்ட பாண்டியர்களைப் பற்றிய குறிப்புகளை, கி.மு.,3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுகளில் அறியமுடிகிறது. அதே நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனீஸ், மதுரையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களில் மதுரையைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. எனவே சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை, கோவை நகரங்களைப் போல, மதுரையின் பிறந்தநாளை சரியாக சொல்லமுடியவில்லை. திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இலக்கியங்களில் "கூடல்' என்றும், கலித்தொகையில் "நான்மாடக்கூடல்' என்றும், சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில் "மதுரை' என்றும் அழைக்கப்படுகிறது. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டது. சங்ககால பாண்டியர்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...