Skip to main content

20:20 உலகக் கோப்பை - தொடரும் தோல்விகள்

ஒரு வழியாக இலங்கையிடம் அடிவாங்கி வெளியே வந்துவிட்டோம். தோனி என்னதான் மறுத்தாலும் ஒவ்வொரு முறையும், IPL T20 யில் மாங்கு மாங்கு என விளையாடிவிட்டு, ஓய்ந்து போனபின்னரே நாம் உலகக் கோப்பை மாட்சுகளுக்கு விளையாட செல்கிறோம். இவ்வாறு தொடர்ந்து விளையாடுவதால் ஏற்படும் fatigue factor ஒரு பெரிய தலைவலி என்பது தெரிந்தும் அதே தவறை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இங்கு இந்தியாவில் flat pitchகளில் விளையாடுவது வேறு, மேற்கு இந்திய தீவுகளில் இருக்கும் pitchகளில் விளையாடுவது என்பது வேறு. இதை நம் அணியினர் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொண்டும் அலட்சியமாக இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.

பதில் தெரியாத சில கேள்விகள்/சந்தேகங்கள்:

  • முரளி விஜய் opener ஆக இறங்கியது தவறு. 
  • 20:20 மாட்சுகளில் முதல் 5 ஓவர்களில் அடிக்கும் ரன்கள் மிக முக்கியமானவை எனத் தெரிந்த பின்பும் ஏன் முரளி விஜய் தொடந்து முதலில் வர வேண்டும்? 
  • யுவராஜ் சிங் இனிமேலும் தேவையா?
  • டாஸில் வென்ற பிறகும் தவறான முடிவு எடுக்கும் தோனியின் எண்ணம் மாறவே மாறாதா? 
  • பாட்டிங்கில் நல்ல form-இல் இருந்தும் ஏன் உத்தப்பா போன்றவர்கள் தேர்வு செய்யப்படவில்லை?
  • fielding-இல் தேர்ச்சி பெற மும்பை இந்தியன்ஸ் அணி ஜான்டி ரோட்ஸ் (Jonty Rhodes) மூலம் பயிற்சி பெற்றதுபோல ஏன் நம் இந்திய அணி பயிற்சி பெறக்கூடாது?

அடுத்த வருடம் அதிக தூரம் இல்லை. பார்க்கலாம்.











 

Comments

Unknown said…
Definitely IPL is an important factor for India's poor performance in WC T 20. The selection of Murali Vijay has proved costly. He has proved he is a flash in the pan.

Before any major tournament in a foreign country, the local team should have a dry run. They should make a pitch alike the foreign country and should have machines to bowl the same way the foreign bowlers do.

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...