மேற்கிந்திய தீவுகளில் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நடைபெறவள்ள இருபதுக்கு20 ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி சரியானதுதானா, உண்மையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டார்கள் என்றால் சில கேள்விகள் பிறக்கிறது.
பியூஷ் சாவ்லா, வினய் குமார் நீங்கலாக மற்ற வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யத் தகுதி பெற்று விட்டனர் என்றால் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் துவங்கிய பிறகு அணியை அறிவிப்பது ஏன்? முன்பே அறிவித்திருந்தால் அந்த வீரர்களாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்களே?
காயமடைந்த வீரர்களை ஒரு போதும் தேர்வு செய்யவே மாட்டோம் என்று அணித் தேர்வுக் குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சமீபத்தில் சபதம் செய்தார். ஆனால் அணியில் தேர்வு செய்யப்பட்ட 4 அல்லது 5 வீரர்களின் உடல் தகுதி சந்தேகத்திற்கிடமாகவுள்ளது.
ஆனால் ஸ்ரீகாந்த் கூறுகிறார், காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி சான்றிதழ் வந்த பிறகே அவரகளைத் தேர்வு செய்தோம் என்று.
கம்பீர், தோனி, ஜாகீர்கான், யுவ்ராஜ், குறிப்பாக நெஹ்ரா என்று இந்தப் பட்டியல் இன்னும் ஓரிரு வீரர்களையும் உள்ளடக்கலாம். ஆனால் இவர்கள் அனைவரும் அணியில் உள்ளனர்.
ஆஷிஷ் நெஹ்ரா இன்னும் ஒரு போட்டியில் கூட இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடவில்லை. மேலும் ஒரு நாள் போட்டிகளில் கூட வேறு வழியில்லாமல்தான் நெஹ்ரா அணியில் நீடித்து வருகிறார். பந்து வீச்சு திறனால் அல்ல (வேறு அனுபவம் மிக்க பந்து வீச்சாளர் இல்லாததால்தான்). ஓவருக்கு 6 அல்லது 7 ரன்களை அவர் விட்டுக் கொடுப்பது சகஜமாக நடந்து வருகிறது.
10 ஓவர்கள் வீசி 50 ரன்களை கொடுத்த நெஹ்ராவின் காலங்கள் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் 6 அல்லது 7-வது ஓவரில் நெஹ்ரா தன் பந்து வீச்சில் அரை சதம் அடித்து விடுகிறார். பந்து வீச்சில் ரன்களை கொடுப்பதில் அவரது வேகம் சேவாகின் பேட்டிங்கிற்கு இணணயானதாக உள்ளது.
பியூஷ் சாவ்லா அணியில் தேர்வு செய்யப்பட்டது அடுத்தகட்ட அதிர்ச்சித் தேர்வு என்றால் மிகையாகாது. ஏனெனில் அமித் மிஷ்ரா, பிராக்யன் ஓஜா ஆகியோர் ஒட்டுமொத்தமாக குறைந்த சிக்கன விகிதமும், ஓரளவுக்கு விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர்களாகவும் உள்ளனர்.
இந்த ஐ.பி.எல். தொடரில் கூட அமித் மிஷ்ரா, பிராக்யன் ஓஜாவின் சிக்கன விகிதம் மற்றும் சராசரி, பியூஷ் சாவ்லாவைக் காட்டிலும் சிறப்பாகவே உள்ளது. இந்த நிலையில் பியூஷ் சாவ்லா எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்?
FILE
ஐ.பி.எல்.தான் அளவுகோல் என்றால், ஐ.பி.எல். கிரிக்கெட்டை இம்முறை விளையாடாத ரவீந்தர் ஜடேஜா எந்த அடிப்படையில் இந்த உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றார். அவரது முந்தைய ஃபார்ம் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்றால், முந்தைய ஃபார்ம் அடிப்படையில் ஏன் இஷாந்த் ஷர்மாவை தேர்வு செய்யவில்லை.
இந்த ஐ.பி.எல். போட்டிகளை வைத்து தேர்வு செய்யப்பட்டது என்றால் வினய் குமாரைக் காட்டிலும் பந்து வீச்சு, பேட்டிங் என்று ஆல் ரவுண்ட் திறமை காட்டி வரும் இர்ஃபான் பத்தானைத் தொடர்ந்து ஒழிப்பதன் நோக்கம் என்ன?
யுவ்ராஜ் சிங் தேவையா?
நம் அணித் தேர்வுக் குழுவினருக்கு யுவ்ராஜ் சிங் மீது இருக்கும் காதலின் அடிப்படை என்னவென்று புரியவில்லை. ஒவ்வொரு முறை அவர் காயமடைந்திருந்தாலும் அவருக்காக காத்திருக்கின்றனர். அவர் சரியாக விளையாடவில்லை என்றாலும் அவர் தேர்வு செய்யப்படுகிறார். இந்த ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அவர் உடல் பருமனாகி ஃபீல்டிங், பேட்டிங், பந்து வீச்சு என்று கிரிக்கெட்டின் அனைத்து முக்கிய துறைகளிலும் ஒரு கேலிக்கூத்தாகத் திகழ்கிறார்.
'தனது டைவிங் திறமை போய்விட்டது' என்று தனது ஃபீல்டிங் பற்றி யுவராஜே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சச்சின் டெண்டுல்கரை எந்த நேரத்தில் தாத்தா என்று கேலி செய்தாரோ, அவரது பேட்டிங் இதுவரை காணாத உச்சத்திற்குச் சென்றுள்ளது. ஆனால் தாத்தா என்று கேலி செய்த யுவ்ராஜ் கிரிக்கெட் ஆட்டத்தில் தாத்தா ஆகி வருகிறார். ஆனால் அவரை எந்தவித சந்தேகமும் இல்லாமல் தேர்வு செய்கின்றனர்.
யுவ்ராஜ் சிங்கிற்குப் பதிலாக நிச்சயம் மணீஷ் பாண்டே இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் தினேஷ் கார்த்திக்கிற்குப் பதில் நிச்சயம் ராபின் உத்தப்பா இடம்பெற்றிருக்க வேண்டும். ராபின் உத்தப்பா நல்ல ஃபார்மில் இருப்பதோடு அருமையாக ஃபீல்டிங் செய்து வருகிறார். மணீஷ் பாண்டே உள்நாட்டு கிரிக்கெட்டில் எடுத்த கேட்ச் இந்திய ஃபீல்டர்களின் வரலாற்றில் பிடிக்கப்பட்ட ஆகச் சிறந்த கேட்சாக இன்று பேசப்பட்டு வருகிறது.
மும்பை இந்தியன் அணிக்கு விளையாடி வரும் ஆர்.சதீஷ் போன்றவர்கள் இந்தியாவில் இன்றைய தலைமுறை கிரிக்கெட் வீரர்களில் சிறந்த ஃபீல்டராகக் கருதப்படுபவர்.
யுவ்ராஜ் சிங்கிற்கு பதிலாக மும்பை இந்தியன் அணிக்கு விளையாடும் சௌரவ் திவாரி என்ற இடது கை பேட்ஸ்மெனைத் தேர்வு செய்திருந்தால் கூட தேர்வாளர்களைப் பாராட்டியிருக்கலாம்.
பேட்டிங்கில் மணீஷ் பாண்டே காட்டிவரும் அந்த ஆதிக்கத் தன்மை உறுதியாக அவர் அணியில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதாக உள்ளது. ஆனால் மீண்டும் யுவ்ராஜ், ரெய்னா என்று பழைய பஞ்சாங்கம் பாடியுள்ளது நம் அணித் தேர்வுக்குழு.
இன்னொரு விஷயத்தைப் பார்த்தால் இஷாந்த் சர்மா இந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அவ்வளவு மோசமாக வீசவில்லை. போட்டிகளை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இது புரிந்திருக்கும். ஆஷிஷ் நெஹ்ராவிற்கு அணியில் வேலையே இல்லை. அவரது பந்து வீச்சு, அனைத்தையும் விட அவரது மோசமான ஃபீல்டிங் ஆகியவற்றைக் கொண்டு அவரைத் தேர்விற்கு பரிசீலனை செய்ததே பெருந்தவறு.
ரவீந்தர் ஜடேஜாவிற்கு தற்போது இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் வீசிய அனுபவம் ஏற்படவில்லை. இதனால் இவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் இடத்தில் இர்ஃபான் பத்தான் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நடுவில் அபிஷேக் நாயர் என்பவரை ஒரு நாள் போட்டிகளுக்கு தேர்வு செய்துவிட்டு அதன் பிறகு காரணமில்லாமல் நீக்கினர். அவரை இருபது ஓவர் கிரிக்கெட்டிற்கு ஆல்ரவுண்டர் இடத்தில் தேர்வு செய்திருக்கலாம். அதேபோல் வினய் குமாருக்கு பதிலாக மன்ப்ரீத் கோனியைத் தேர்வு செய்திருக்கலாம் அவரும் நல்ல பேட்டிங் திறன் உள்ளவர்தான்.
எல்லாவற்றையும் விட பரிதாபம் விராட் கோலி தேர்வு செய்யப்படாதது. அவர் என்ன தவறு செய்தார். நன்றாக ஃபீல்டிங் செய்கிறார். பயனுள்ள பந்து வீச்சாளராகவும் உள்ளார். பேட்டிங்கில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக நன்றாகவே விளையாடுகிறார். ஆனால் தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ராபின் உத்தப்பாவைத் தேர்வு செய்திருந்தால் இரண்டாவது விக்கெட் கீப்பிங் என்ற சாக்கை வைத்து கார்த்திக்கை தேர்வு செய்திருப்பது நடைபெற்றிருக்காது. ஏனெனில் ராபின் உத்தப்பாவும் விக்கெட் கீப்பிங் செய்பவர்தான்.
ஏற்கனவே, ஒரு அணியை இவர்கள் தேர்வு செய்து விடுகின்றனர். பிறகு ரசிகர்களின் கண்ணைத் துடைப்பதற்காக பியூஷ் சாவ்லா, வினய் குமார் என்று புதிய வீரர்களை அதுவும் மற்ற சிறந்த வீரர்களை ஒதுக்கிவிட்டு தேர்வு செய்கின்றனர். பிறகு எதற்கு ஐ.பி.எல். நாடகம்? அது வரை அணித் தேர்வுக்கு ஏன் காத்திருக்க வேண்டும்? ஒவ்வொரு முக்கியத் தொடருக்கு 6 மாதம் முன்பே அணியை அறிவித்து விடலாமே! அந்த வீரர்களாவது நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டை வைத்து அணியைத் தேர்வு செய்வோம் என்று கூறவேண்டியது. அதனை நம்பி மணீஷ் பாண்டே, இர்ஃபான் பத்தான், ராபின் உத்தப்பா, போன்ற வீரர்கள் உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள் ஆனால் அணித் தேர்வு என்று வரும்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடாத ரவீந்தர் ஜடேஜா, மோசமாக விளையாடும் யுவ்ராஜ், காயமடைந்த ஆஷிஷ் நெஹ்ரா, தடுமாறும் சுரேஷ் ரெய்னா என்று தேர்வு செய்ய வேண்டியது.
இது என்ன நியாயம்?
அணி இவ்வாறு இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்:
சேவாக், கம்பீர், உத்தப்பா, மணீஷ் பாண்டே, ரெய்னா, தோனி, இர்பான் பத்தான், ஹர்பஜன் சிங், பிரவீண் குமார், ஜாகீர் கான், அமித் மிஷ்ரா, ஓஜா, விராட் கோலி/ஷிகார் தவான், ரோஹித் ஷர்மா/அபிஷேக் நாயர், யூசுப் பத்தான்.
நன்றி: வெப் துனியா-தமிழ்

Comments