Skip to main content

Posts

Showing posts from March, 2010

20-20 உலகக் கோப்பை அணி : சில கேள்விகள், சந்தேகங்கள்

மேற்கிந்திய தீவுகளில் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் நடைபெறவ‌ள்ள இருபது‌க்கு20 ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி சரியானதுதானா, உண்மையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டை ஒரு அளவுகோலாக வைத்துக் கொண்டார்கள் என்றால் சில கேள்விகள் பிறக்கிறது. பியூஷ் சாவ்லா, வினய் குமார் நீங்கலாக மற்ற வீரர்கள் ஏற்கனவே தேர்வு செய்யத் தகுதி பெற்று விட்டனர் என்றால் பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட் துவங்கிய பிறகு அணியை அறிவிப்பது ஏன்? முன்பே அறிவித்திருந்தால் அந்த வீரர்களாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்களே? காயமடைந்த வீரர்களை ஒரு போதும் தேர்வு செய்யவே மாட்டோம் என்று அணித் தேர்வுக் குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் சமீபத்தில் சபதம் செய்தார். ஆனால் அணியில் தேர்வு செய்யப்பட்ட 4 அல்லது 5 வீரர்களின் உடல் தகுதி சந்தேகத்திற்கிடமாகவுள்ளது. ஆனால் ஸ்ரீகாந்த் கூறுகிறார், காயமடைந்த வீரர்களின் உடற்தகுதி சான்றிதழ் வந்த பிறகே அவரகளைத் தேர்வு செய்தோம் என்று. கம்பீர், தோனி, ஜாகீர்கான், யுவ்ராஜ், குறிப்பாக நெஹ்ரா என்று இந்தப் பட்டியல் இன்னும்...