Skip to main content

இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்; இந்த ஆஸ்திரேலிய சம்பவத்தின் பின்னணி என்ன?

சமீப காலமாக ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பல இந்திய மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்து கொண்டிருப்பதின் பின்னணி என்ன என்பதைப் பற்றி செய்தித் தாள்களிலும், தொலைக் காட்சி சேனல்களிலும் தினசரி ஏதாவது பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன; மெல்போர்ன் பல்கலைக் கழகம் தனக்கு அளித்த கௌரவ டாக்டர் பட்டம் வேண்டாம் என சூப்பர் ஸ்டார் அமிதாப் மறுக்கிறார், மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்துகிறார்கள், ஒரு இடத்தில பழிக்கு பழி வாங்கும் வண்ணம் இந்திய மாணவர்கள் ஒரு ஆஸ்திரேலிய மாணவனைத் தாக்குகிறார்கள்...இது போல பல சம்பவங்கள்.

ஆஸ்திரேலியாவில் போய் படித்து ஒன்றும் ஆகப்போவதில்லை என பல பெற்றோர்கள் மாணவர்களின் நினைப்பில் மண் போடுகிறார்கள், கோலிவுட் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர்கள் ஆஸ்திரேலியா வேண்டாம் வேறு எங்காவது டூயட் வைத்துக் கொள்ளுங்கள் என திரை இயக்குனர்களை வேண்டிக்கொள்கிறார்கள், சுற்றுப்பயணம் போக ஆஸ்திரேலியாவை மனதில் வைத்திருந்த நிறையப்பேர் வேண்டாம், வேறு எங்காவது போகலாம் என விடுமுறையை ஒத்திபோடுகிறார்கள், இந்திய-ஆஸ்திரேலியா இருதரப்பு வர்த்தகம் [bilateral trade ties] பாதிக்கப்படுமோ என அச்சம் வரும் அளவிற்கு நிலைமை மோசமாக உண்மையான காரணம் என்ன?

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகளில் வேலை செய்துள்ள தேர்ந்த பத்திரிக்கையாளர் குல் பூஷன் இதன் பின்னணியைத் தெரிந்து கொள்ள ரொம்பவே மெனக்கெட்டு இருக்கிறார். அவர் தொகுத்திருக்கும் காரணங்களின் பின்னணி இதோ; ஆஸ்திரேலியாவில் உள்ள பல இந்தியர்கள் அங்கு ரொம்ப வருடமாக வசதியாக settle ஆகியிருக்கிறார்கள். இவர்களில் யாருமே இந்த தாக்குதலுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை. இதன் காரணம், ஆஸ்திரேலியாவில் தங்களின் வசதியான வாழ்க்கை பாதிக்கப்படும் என்பது மட்டுமல்ல, இவர்களில் பெரும்பாலானோர் அவரவர் குழந்தைகளை ஆஸ்திரேலியாவில்தான் படிக்க வைக்கிறார்கள். அவர்கள் குல் பூஷனிடம் பேசும்போது, இந்தியாவில் இருந்து வரும் நிறைய மாணவர்கள் வம்பு தேடி அலைகிறார்கள் என்றும், அதில் நிறைய மாணவர்கள் ரொம்பவும் தரக்குறைவாகவே நடந்து கொள்ளகிறார்கள் என்றும், நான்கு பேர் தங்கும் ஒரு ஹாஸ்டல் அறையில் பத்துக்கும் மேற்பட்டோர் தங்குகிறார்கள் என்றும், அவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலம் சரியாகக் கூடத் தெரியாமல் ஆஸ்திரேலிய மாணவர்கள் மத்தியில் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழியில் பேசிக் கிண்டல் செய்வது ஆகியவை ரொம்ப சாதாரணம் என்றும், நிறைய மாணவர்கள் அவர்கள் தங்கும் இடத்தையும், வகுப்பு அறைகளையும் மிகவும் மோசமான நிலையில் வைத்திருக்கிறார்கள் என்றும், அடுக்கடுக்காக புகார் தந்திருக்கிறார்கள்.

ஆனால் இதை எல்லாவற்றையும் மீறி இந்திய மாணவர்கள் மீது நடந்துள்ள [அல்லது நடந்து கொண்டிருக்கும்] தாக்குதல் மிக மோசமானது என்பதை மறுக்கமுடியாது. என்னதான் இந்திய மாணவர்கள் தரக் குறைவாக நடந்து கொண்டாலும் அதை கண்டிக்க, தண்டிக்க சட்டத்திற்கு உட்பட்ட ஒரு நடைமுறை இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் உள்ளவர்கள் யாரும் மகாத்மா அல்ல, அவரவர் தாய் மொழி அவரவர்க்கு முக்கியம், அதில் பேசுவதால் மட்டுமோ, ஆங்கிலம் சரியாகப் பேசத் தெரியவில்லை என்பதாலோ அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது எந்த விதத்திலும் சரியாகாது.

குல் பூஷனின் கட்டுரையைப் படித்த பின் எனக்கு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றுகிறது; ஒவ்வொரு முறை சிங்கப்பூர் மற்றும் மலேசியா செல்லும்போதும் நிறைய இடங்களில் இந்தியர்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு, மொத்த நடை பாதையும் மறைத்துக் கொண்டு மெய்மறந்து பேசுவதைப் பார்த்து நிறைய பேர் வெறுப்புடன் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.

குறிப்பாக, சிங்கப்பூர் சென்றுள்ள நம் நண்பர்கள் நிறையப் பேர், இந்தியர்கள் நிறைய வசிக்கும் Little India என்ற பகுதி எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்திருப்பார்கள். சிங்கப்பூர் சுத்தத்தின் மறுபெயர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை, அந்த ஊரிலேயே இவ்வளவு அசிங்கம் செய்ய முடியும் என்றால் மற்ற ஊர்களைப் பற்றி என்ன சொல்வது? நம்முடைய ஊரில் என்னவேண்டுமானாலும் அசிங்கம் செய்யலாம், அதற்கு தண்டனை எதுவும் இல்லை என்பதால் மட்டுமே மற்ற நாடுகளிலும் அதே போல தரக் குறைவாக நடக்கலாம் என நினைத்தால் அது மிகப் பெரிய முட்டாள்தனம் என்பதை நாம் உணர வேண்டும்.


வெளிநாடுகளுக்கு மேற்படிப்புக்காக செல்லும் மாணவர்கள், குறிப்பாக ஆங்கிலம் அதிகம் பேசப்படும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஆங்கிலத்தில் பேசுவதில் எந்தவிதமான தவறும் இல்லை. அதுவும் மற்ற மாணவர்கள் மத்தியில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பொதுவான மொழியான ஆங்கிலத்தில் பேசுவதுதான் சபை நாகரிகம் என்பதை உணரவேண்டும். பொது இடங்களில் மிகவும் அருவெறுக்கத்தக்க முறையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். நம் ஊரில் எண்டு வேண்டுமானாலும் எச்சில் உமிழலாம், சிறுநீர் கழிக்கலாம், சத்தம் போட்டு பேசிக்கொண்டு திரியலாம், வெளிநாடுகளில் இதை அப்படியே செய்யலாம் என நினைத்தால் அது தவறு என்பதை நாம், குறிப்பாக நம் மாணவர்கள் உணர வேண்டும்.

Comments

நல்ல அறிவுரைகளுடன்
கூடிய கட்டுரை நண்பரே!!
உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?
தமிலிஷிலும் போடுங்கள்.கருத்துக்கள் பலரை சென்றடையும்!!

Popular posts from this blog

ஜல்லிக்கட்டு - தமிழர் பண்பாட்டின் வீர அடையாளம்

நம் தமிழர் பண்பாட்டில் இன்னமும் வீரத்துடனும், ஈரத்துடனும், தீரத்துடனும் நீர்தது போகாமல் இருப்பது நமது ஜல்லிக்கட்டு ஒன்றுதான். ஜல்லிக்கட்டை சித்தரிக்கும் ஓவியம்  தமிழர் வீரத்தின் முக்கிய அடையாளமான இந்த ஜல்லிக்கட்டுக்கு எங்கே தடைவருமோ என்ற பயத்தை, சமீபத்தில் உச்சநீதிமன்றம் உடைத்து எறிந்துள்ளது. இதனால் தடை பல கடந்து , பொங்கல் திருநாளில் துள்ளிக் குதித்தபடி களம் காண தயராகிவருகிறது ஜல்லிக்கட்டு. நாகரீக ஓட்டத்தில் கலை, கலாச்சாரம் என ஒவ்வொன்றாய் இழந்துவரும் நேரத்தில், ஜல்லிக்கட்டு போன்ற வெகு சில விஷயங்களே நம் பழங்கால பராம்பரியத்தின் மிச்சமாய் நம்மிடம் இருக்கின்றது. இதனால் அலங்கநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் துவங்கி திருச்சி, புதுக்கோட்டை, சிராவயல் வரையிலான கிராம மக்கள் இழந்த பொக்கிஷத்தை மீட்டெடுத்த மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். மீசையை முறுக்கியபடி காளையர்களும், திமில்களை சிலுப்பியபடி "காளைகளும்' களம் காண ஆர்வத்துடன் பயிற்சியில் இறங்கியுள்ளனர். தீவிர பயிற்சி: காளைகள் சத்தான உணவு சாப்பிட்டு, தண்ணியில் நீந்தி, கோபத்தோடு மண்மேடு, பொம்மை மனிதனை முட்டி பயிற்சி...
நடிகர் திலகம் சிவாஜியின் படங்கள் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு  இணையத்தளத்தில் மேய்ந்து கொண்டு இருந்தபோது கண்ணில் பட்ட ஒரு வலைத்தளம் "தமிழா, தமிழா." அதில் வலைப் பதிவு நண்பர் ராதாகிருஷ்ணன் சிவாஜியின் படங்களை மிக அழகாக பட்டியலிட்டு, சிறு, சிறு குறிப்புகளையும் கொடுத்திருந்தார். அவருக்கு நன்றி. இதோ அந்தத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு: (படங்கள் நான் தேர்வு செய்தவை-நடுநடுவே என் கருத்து என்று குறிப்பிட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்லியிருக்கிறேன்).   பதிவு # 1: சிவாஜி கணேசன் ... தமிழன்னை ஈன்றெடுத்த தவப்புதல்வன்.. இவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான். ஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது. படிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் "மரணம்" எழுப்பும் சந்தேகங்கள்!

பிரபாகரனின் மரணம் குறித்த சில முக்கியமான சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உள்ளது. இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள பிரபாகரனின் உடல் பற்றி, விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் சில சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். கடந்த 2004-ம் ஆண்டு பிரபாகரன் எடுத்துக்கொண்ட படத்தையும், ராணுவம் வெளியிட்டுள்ள படத்தையும் அவர்கள் வெளியிட்டு கூறியிருப்பதாவது:- (i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது). (ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்? (iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது. (iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற...